- Advertisement -
அழகு குறிப்புகள் | Beauty tips in Tamil

கண்ணை சுற்றி இருக்கும் கருவளையம் உங்கள் முக அழகையே கெடுக்கிறதா? இதோ கருவளையம் போக்க சில டிப்ஸ்.

- Advertisement -

முகம் அழகாக இருக்க வேண்டும் என்றால் அந்த முகத்தில் இருக்கும் கண்கள் பிரகாசமாக இருக்க வேண்டும். கண்களின் அழகை பொருத்தே முகத்தின் அழகும் நிர்ணயிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட கண்களை சுற்றி கருவளையம் ஏற்பட்டு விட்டால் அதனால் முகத்தின் அழகே கெட்டுவிடும். அப்படிப்பட்ட கருவளையத்தை எப்படி எல்லாம் நீக்கலாம் என்றுதான் இந்த அழகு குறித்து குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.

கருவளையம் ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன. கண்ணிற்கு ஓயாமல் வேலை கொடுத்துக்கொண்டு இருந்தால் கருவளையம் வரும். மேலும் முறையான தூக்கம் இல்லாத சமயத்திலும் கருவளையம் என்பது வரும். சிலருக்கு பரம்பரை ரீதியாகவும் இந்த கருவளையம் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இன்றைய காலத்தில் குழந்தைகள் அதிகமாக செல்பேசியை பார்ப்பதாலும் அவர்களுக்கு கருவளையம் ஏற்படுகிறது.

- Advertisement -

இந்த கருவளையம் ஏற்படாமல் தடுப்பதற்கு நாம் சரியான நேரத்தில் உறங்கச் செல்ல வேண்டும். போதுமான அளவு உறக்கம் வேண்டும். அதிகமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். கண்ணிற்கு போதுமான அளவு ஓய்வு கொடுக்க வேண்டும். இவை அனைத்தையும் செய்து கொண்டே சில பேக்குகளை நாம் உபயோகப்படுத்தினால் கண் கருவளையம் விரைவில் சரியாகிவிடும்.

கண் கருவளையத்தை சரி செய்வதற்கு பல பேக்குகள் இருக்கின்றன. அவற்றில் இரண்டை பார்ப்போம்.
விட்டமின் இ ஆயில்: இது அனைத்து மருந்து கடைகளிலும் மாத்திரைகளாக கிடைக்கின்றன. இந்த மாத்திரையில் இருக்கும் எண்ணையை நம் கண்களை சுற்றி தடவிக் கொண்டு இரவு படுக்கச் செல்வதற்கு முன்பு மசாஜ் செய்து விட்டு படுத்து விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கண்ணிற்கு போதுமான அளவு ரத்த ஓட்டம் ஏற்பட்டு கருவளையம் விரைவிலேயே மறையும். இதற்கு நாம் விட்டமின் சி ஆயிலை தான் உபயோகப்படுத்த வேண்டும் என்று இல்லை. சாதாரணமாக நம் வீட்டில் இருக்கக்கூடிய தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், பாதாம் எண்ணெய் போன்றவற்றையும் உபயோகப்படுத்தலாம்.

- Advertisement -

உருளைக்கிழங்கை சீவி அதிலிருந்து சாறு எடுத்து அந்த சாறை கருவளையத்தை சுற்றி போடுவதன் மூலம் கருவளையம் மறைய ஆரம்பிக்கும். சருமத்திற்கு அதிக நற்பலன்களை தரக்கூடிய பழமாக தக்காளிப் பழம் விளங்குகிறது. இந்த தக்காளி பழத்துடன் அரை எலுமிச்சம் பழச்சாறையும் சேர்த்து நன்றாக அரைத்து இதை நம் கண்களை சுற்றி போடுவதன் மூலம் கண் கருவளையம் மறையும்.

இதுபோல் இன்னும் பல பேக்குகள் கண் கருவளையத்தை போக்கும் ஆற்றலை கொண்டு இருக்கிறது. முறையாக நாம் கண்களை பராமரித்தோம் என்றாலேயே கண் கருவளையம் வருவதை நம்மால் தடுக்க முடியும்.

இதையும் படிக்கலாமே: இவ்வளவு அற்புதமான பொடியை இவ்வளவு நாள் மிஸ் பண்ணிட்டோமே என்று பீல் பண்ணுவீங்க. ஆமாங்க முகம் கழுவுறதுக்கு ஃபேஸ் வாஷ்க்கு பதிலா இந்த பொடியை யூஸ் பண்ணி பாருங்க. உங்க முகம் தங்கம் போல என்றென்றைக்கும் பிரகாசமாக இருக்கும்.

கண்களின் ஆரோக்கியத்தை நாம் முறையாக பேணி கண்களுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை கொடுத்தாலே கண் கருவளையம் வருவதை நம்மால் தடுக்க முடியும். அதையும் மீறி கண் கருவளையம் வந்துவிட்டால் மேற்சொன்ன பேக்குகளையும் அல்லது ஆயில் மசாஜையும் செய்து கண் கருவளையத்தில் இருந்து நம் கண்ணை காப்பாற்றுவோம்.

- Advertisement -