இவ்வளவு அற்புதமான பொடியை இவ்வளவு நாள் மிஸ் பண்ணிட்டோமே என்று பீல் பண்ணுவீங்க. ஆமாங்க முகம் கழுவுறதுக்கு ஃபேஸ் வாஷ்க்கு பதிலா இந்த பொடியை யூஸ் பண்ணி பாருங்க. உங்க முகம் தங்கம் போல என்றென்றைக்கும் பிரகாசமாக இருக்கும்.

face wash powder
- Advertisement -

அந்த காலத்து பெண்கள் உடம்பிற்கு சோப்பு கூட போட்டு குளிக்காமல் இயற்கையான முறையில் குளியல் பொடியை பயன்படுத்தி குளித்து வந்தார்கள். 60 வயதானாலும் என்றும் இளமையுடன் திகழ்ந்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் முகத்திற்கு ஒரு ஃபேஸ் வாஷ், உடம்பிற்கு ஒரு பாடி வாஷ் என்றும் முகத்திற்கு கிரீம் என்றும் பல விதங்களில் உபயோகப்படுத்தினாலும் அவர்களால் இளமையை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் முகத்தை கழுவுவதற்கு இயற்கையிலேயே பொடி எப்படி தயார் செய்வது என்று தான் பார்க்க போகிறோம்.

இப்பொழுதெல்லாம் முகத்தை கழுவுவதற்கு என்று தனியாக ஒரு ஃபேஸ் வாஷ் விற்கப்படுகிறது. இதை நாம் முகத்திற்கு மட்டும் தான் உபயோகப்படுத்த வேண்டும் என்றும், அவ்வாறு உபயோகப்படுத்தினால் முகத்தில் இருக்கும் பருக்கள் அனைத்தும் நீங்கி முகம் நன்றாக இருக்கும் என்றும் விளம்பரங்களில் கூறப்படுகிறது. என்னதான் கூறினாலும் அதில் கெமிக்கல் என்பது இல்லாமல் இருக்காது. இதே நாம் நம் வீட்டில் முகத்திற்கு என்று தனியாக பொடி தயார் செய்து வைத்து அதை முகத்தில் தேய்த்து கழுவினோம் என்றால் முகம் பிரகாசமாக இருக்கும்.

- Advertisement -

இந்த முகம் கழுவும் பொடியை தயார் செய்வதற்கு நமக்கு மூன்று பொருட்கள் முக்கியமாக தேவைப்படும். ஓட்ஸ், சந்தன பொடி, ஆரஞ்சு பழ தோல் பொடி. ஓட்ஸ் நமது முகத்தில் ஏற்பட்ட கருமையை நீக்க உதவுகிறது. மேலும் இது ஒரு ஸ்க்ரப்பராகவும் பயன்படுவதால் இறந்த செல்களை நீக்குவதற்கும் உதவி செய்கிறது. சந்தனம் தோலில் ஏற்படக்கூடிய அனைத்து விதமான சரும பாதிப்புகளையும் நீக்குவதற்கு உதவி செய்யும். ஆரஞ்சு பழ தோல் பொடி கருமையை நீக்க உதவுவதோடு, கரும்புள்ளிகள், தழும்புகள் வராமல் தடுக்கிறது. மேலும் இதில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சைடு இளமையாக இருக்க உதவுகிறது.

ஆரஞ்சு பழத் தோல் பொடி செய்வதற்கு ஆரஞ்சு பழ தோலை எடுத்து சிறிது சிறிதாக நறுக்கி வெயிலில் நன்றாக காய வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இதேபோல் ஓட்ஸை ஈரம் இல்லாத மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பொடி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஆரஞ்சு பழ தோல் பொடி, ஓட்ஸ் பொடி மற்றும் சந்தனம் இவை மூன்றையும் சமமான அளவு எடுத்து கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

நாம் முகம் கழுவ வேண்டிய நேரத்தில் தேவையான அளவு இந்த பொடியை எடுத்து அதனுடன் தயிர் அல்லது பால் சேர்த்து கலந்து முகத்தில் தேய்த்து கழுவ வேண்டும். எண்ணெய் சருமம் இருப்பவர்கள் பன்னீரை ஊற்றி கலந்து தேய்த்து முகத்தை கழுவலாம். இவ்வாறு செய்வதன் மூலம் நம் முகத்தில் சூரியக் கதிர்களால் ஏற்பட்ட கருமை நிறம் மாறும். கரும்புள்ளிகள், தழும்புகள் ஏற்படாது. முகப்பருக்கள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. வறண்ட சருமம் பொலிவு பெறும். என்றுமே மாசு மரு இல்லாமல் இளமையாக இருக்கலாம்.

இதையும் படிக்கலாமே: சென்ட் அடிக்காமலேயே நீங்க தூரத்தில் வரும்போதே அப்படியே மன மணக்கும் வாசம் வீசும். தினமும் இந்த பொடியை உடம்புக்கு தேய்த்து குளித்தால்.

கடைகளில் விற்கும் கெமிக்கல் நிறைந்த கிரீம்களை பயன்படுத்துவதற்கு பதிலாக இயற்கையாகவே நம்மால் தயாரிக்கப்பட்ட இந்த பொடியை உபயோகப்படுத்தி நமது முகத்தை என்றென்றைக்கும் தங்கம் போல் பிரகாசமாக வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -