
இந்த கண் திருஷ்டியானது ஒரு மனிதனை ஒரே பார்வையால் விழித்து விடக் கூடியது. ஆம் ஒருவர் இன்னொருவரை கண் திருஷ்டி வைத்து விட்டால் போதும் அவர்கள் எப்பேர்பட்ட நல்ல நிலையில் இருந்தாலும் உடனே அவர்களுடைய வாழ்க்கையில் சரிவை சந்திக்க நேரிடும். அத்தனை பெரிய சக்தி உண்டு. அதிலும் நாம் நன்றாக இருக்கக் கூடாது என்று நினைப்பவர்கள் இதை செய்தால் விளைவுகளைப் பற்றி சொல்லவே தேவையில்லை.
இத்தகைய கொடிய கண் திருஷ்டியில் இருந்து நம்மை காத்துக் கொள்ளத் தான் நம் முன்னோர்கள் பல வழிமுறைகளை கையாண்டார்கள். அதில் முக்கியமான ஒன்று தான் திருஷ்டி கழிப்பது. இது அவரவருக்கு தெரிந்த வகையில் செய்து வந்தார்கள். இப்போது ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் கொடிய கண் திருஷ்டி நீங்க எளிமையாக எப்படி திருஷ்டி கழிப்பது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
கண் திருஷ்டி நீக்குவதற்கு பல வழிமுறைகளும் பரிகாரங்களும் இருந்தாலும் கூட ,அன்றைய காலத்திலிருந்து இப்போது வரை கடைபிடிக்கக்கூடிய எளிமையான முறை என்று பார்த்தால் அது திருஷ்டி சுற்றி போடுவது தான். இதை நாமும் பல இடங்களில் பார்த்திருப்போம் நம் வீடுகளிலும் செய்திருப்போம்.
அப்படி திருஷ்டி சுற்றி போட பெரும்பாலும் கல் உப்பையும் காய்ந்த மிளகாய் தான் பயன்படுத்துவார்கள். இதில் நாம் வேறு சில பொருட்களை வைத்து திருஷ்டி சுற்ற போகிறோம் அது என்னவென்று பார்க்கலாம். இதற்கு ஒரு சிறிய தட்டு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் சுண்ணாம்பையும் மஞ்சளையும் கலந்து தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளுங்கள். இப்பொழுது தண்ணீர் சிகப்பு நிறத்தில் மாறி விடும்.
அடுத்ததாக ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து நாளாக அறிந்து கொள்ளுங்கள். எலுமிச்சை பழத்தை முழுவதுமாக அறிந்து விடக் கூடாது அடிபாகம் அப்படியே அறியாமல் முழுமையாக இருக்க வேண்டும். இப்போது அந்த எலுமிச்சை பழத்தின் உள்ளே சிறிதளவு கல் உப்பை போட்டு அதன் மேல் மூன்று கிராம்பையும் வைக்க வேண்டும். இப்போது அந்த கிராம்பிற்கு மேல் ஒரு கற்பூரத்தை வைத்து ஏற்றி விடுங்கள்.
நாம் யாருக்கு திருஷ்டி கழிக்க போகிறோமோ அவர்களை நிற்க வைத்து அவர்களின் இடமிருந்து வலம் மூன்று முறையும், வலமிருந்து இடம் மூன்று முறையும் மேலிருந்து கீழாக மூன்று முறை சுற்ற வேண்டும். அதன் பிறகு இதைத்தை அப்படியே நிலை வாசலுக்கு வெளியே கொண்டு சென்று நிலை வாசலையும் இதே போல் இடமிருந்து வலம் மூன்று முறை வலம் இருந்து இடம் மூன்று முறை மேலிருந்து கீழ் மூன்று முறை சுற்ற வேண்டும்.
இதையும் படிக்கலாமே: செல்வம் பெருக லக்ஷ்மி தீப வழிபாடு
அதன் பிறகு இந்த தண்ணீரை கொண்டு வெளியில் ஊற்றி விட்டு வீட்டிற்குள் வரும் போது கை கால் அலம்பி கொண்டு வந்து விடுங்கள். வாரம் ஒரு முறை இது போல திருஷ்டி கழித்தால் போதும் எந்தவித திருஷ்டியும் உங்களை அண்டாது என்பதுடன் தீய சக்திகள் எதுவும் உங்களை அண்டாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழிமுறையில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் இது போல செய்து பலன் அடையுங்கள்.