ஒருவர் பணம் சம்பாதித்து நல்ல முறையில் வாழ வேண்டும் எனில் அந்த வீட்டில் மகாலட்சுமி தாயாரின் அனுகிரகம் பரிபூரணமாக இருக்க வேண்டும். ஏனெனில் ஒவ்வொருவரும் சம்பாதிக்கும் பணத்தை முதலில் கொண்டு வரும் இடம் வீடு தான். அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருந்தால் மட்டுமே உள்ளே வரக் கூடிய பணம் பல மடங்காக பெருகும் என்று சொல்லப்படுகிறது.
அப்படி வீடு லட்சுமிகரமாக இருக்க வேண்டுமெனில் வீட்டில் தாயாரின் அனுகிரகம் பரிபூரணமாக நிறைந்து இருக்க வேண்டும். அதற்கு நம்முடைய உழைப்புடன் சேர்த்து தாயாரின் வழிபாட்டையும் முறைப்படி செய்ய வேண்டும். அப்படியான ஒரு வழிமுறையை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
வீட்டில் செல்வம் பெருக லக்ஷ்மி தீபம் ஏற்றும் முறை
பொதுவாகவே நம்முடைய வழிபாடுகளில் தீபத்திற்கு அதி முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தீப ஒளியில் தெய்வம் வீற்றிருப்பதாக ஐதீகம் உள்ளதால் தீபத்தையே கடவுளாக வழிபடும் வழக்கமும் நம்மில் உண்டு. தெய்வ படங்களே இல்லாத வீட்டில் கூட ஒரே ஒரு தீபமாவது ஏற்றி வைத்து வழிபடும் பழக்கம் இன்றளவும் பல வீடுகளில் உள்ளது.
அப்படியான இந்த தீப ஒளியை கொண்டுதான் நாம் மகாலட்சுமி தாயாரின் அருளை பரிபூரணமாக பெறப்போகிறோம். இந்த தீபத்தை நாம் தினமும் சந்தி வேளை அதாவது மாலை வேளையில் வீட்டின் நிலை வாசலில் ஏற்ற வேண்டும். இதற்கு இரண்டு வெற்றிலை இரண்டு அகல் விளக்கு பஞ்சு திரி நல்லெண்ணெய் இதையெல்லாம் தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
முதலில் இந்த அகல் விளக்கை சுத்தம் செய்து அதில் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்துக் கொள்ளுங்கள். பொதுவாக நாம் நிலை வாசலில் ஏற்றும் தீபம் வாசலுக்கு வெளியே வைப்போம். இந்த தீபத்தை வாசலில் உட்புறம் வைக்க வேண்டும் இந்த தீபத்தை ஏற்றுவதற்கு முன்பாக ஒரு சிறிய பச்சரிசி மாவு கோலம் போடுங்கள். அதன் பிறகு அந்தக் கோலத்தின் மேல் இரண்டு புறமும் இரண்டு வெற்றிலையை வைத்துவிட்டு அதன் மேல் அகல் வைத்து எண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றுங்கள்.
இந்த விளக்கு நெய் ஊற்றி ஏற்ற வசதி உள்ளவர்கள் நெய்யுற்றும் ஏற்றலாம். இப்படி மாலை வேளையில் தொடர்ந்து தீபம் ஏற்றும் போது மகாலட்சுமி தாயாரை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இதன் மூலம் தாயாரின் அனுக்கிரகம் பரிபூரணமாக கிடைப்பதுடன் வீட்டிற்குள் வரக் கூடிய பணம் தங்கி பல மடங்கு பெருகக் கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்றும் சொல்லப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: அடமான நகையை திருப்ப பதிகம்
இது மட்டும் இன்றி இந்த தீபம் தினமும் ஏற்றும் போது வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் அனைத்தும் வெளியேறி நேர்மறை சக்திகள் குறிகொள்ளும் என்றும் சொல்லப்படுகிறது. மகாலக்ஷ்மி தாயாரின் அனுகிரகத்தை பெற்று தரக் கூடிய எளிய இந்த தீப வழிபாட்டு முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையுங்கள்.