- Advertisement -

கண் திருஷ்டியே கருகிப் போய்விடும். இந்த கருப்பு நிற பொருளை நிலை வாசல் படியில் கட்டி தொங்க விட்டால். ஒரு சின்ன கெட்ட பார்வை கூட உங்கள் வீட்டின் மேல் விழ முடியாது.

- Advertisement -

கெட்ட எண்ணத்தோடு, பொறாமையுடன் வயிற்றெரிச்சல் உடன் ஒரு கெட்ட பார்வை, ஒரு வீட்டின் மீது விழுந்தால் கூட அந்த வீடு ரொம்ப ரொம்ப கஷ்டப்படும். கல்லடி பட்டு பிழைத்தவன் கூட இருக்கலாம். ஆனால் கண்ணாடி பட்டு பிழைத்தவனை இந்த உலகத்தில் நம்மால் பார்க்கவே முடியாது. கண் திருஷ்டியால் வாழ்க்கையை இழந்தவர்களுக்கு இது கட்டாயமாக புரியும். இந்த கண் திருஷ்டியிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு நிறைய பரிகாரங்கள் உள்ளது. அதில் ஒரு சுலபமான சக்தி வாய்ந்த புதுமையான பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்த பரிகாரத்திற்கு நமக்குத் தேவையான கருப்பு நிறப் பொருள் குடம்புளி. கேரளாவில் இந்த புளியை அதிகமாக சமையலில் பயன்படுத்துவார்கள். இந்த குடம்புளி தமிழ்நாட்டிலும் உள்ளது. அது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். விலையும் மிக மிக குறைவுதான். ஆனால் பெரும்பாலும் இது நம்முடைய ஊர்களில் சமையலுக்கு பயன்படுத்துவது கிடையாது.

- Advertisement -

இந்த புளியை ஒரு குறிப்பிட்ட அளவு வாங்கி உங்களுடைய வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். சிறிதளவு புளியை எடுத்து ஒரு கருநீல துணியில் கட்டி நிலை வாசலில் கட்டி தொங்க விட வேண்டும். மாதத்திற்கு ஒரு முறை, நிலை வாசலில் கட்டி தொங்க விட்டிருக்கும் குடம்புளியை எடுத்து உங்களுடைய வீட்டை அப்படியே மூன்று முறை சுற்றி, நெருப்பில் போட்டு விடுங்கள். உங்கள் வீட்டை பிடித்த கண் திருஷ்டி அனைத்தும் அந்த குடம்பளியுடன் கருகிப் போய் விடும். (வீட்டிற்குள் வரக்கூடிய எதிர்மறை ஆற்றலை ஈர்க்கக் கூடிய தன்மை இந்த கருப்பு நிற குடம் புளிக்கு உண்டு.)

வீட்டில் உள்ளவர்களுக்கு கண் திருஷ்டி பட்டால் என்ன செய்வது. குடம்புளியுடன் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை போட்டு கலந்து அதை ஒரு உருண்டையாக பிடித்துக் கொள்ளுங்கள். இந்த உருண்டையை கண் திருஷ்டி பட்டவர்களுக்கு சுற்றி கொள்ள வேண்டும். கொட்டாங்குச்சியில் நெருப்பு மூட்டி, திருஷ்டி சுற்றிய இந்த குடம் புளியையும் அந்த கல் உப்பையும் சேர்த்து அப்படியே நெருப்பில் போட்டு விட்டால் உங்களை பிடித்த திருஷ்டி அனைத்தும் அந்த குடம்புளியோடு கருகிப் போய்விடும்.

- Advertisement -

வரிசையாக பத்து கடைகள் இருக்கும். அந்த கடையில் நம்முடைய கடையும் ஒன்று இருக்கும். ஆனால் பக்கத்து கடைக்கு வியாபாரம் ஓஹோவென நடக்கும். கூட்டம் கூட்டமாக வாடிக்கையாளர்கள் செல்வார்கள். லாபம் கொட்டோ கொட்டென்று கொட்டும். ஆனால் அதே பொருளை தான் நம்முடைய கடைகளிலும் விற்போம். ஆனால் நம்முடைய கடைக்கு ஒரு பைசா கூட வியாபாரம் நடக்காது.

இப்படிப்பட்டவர்கள் உங்களுடைய கடையின் நிலை வாசப்படியில் கொஞ்சமாக குடம்புளியை கருநீல துணியில் வைத்து கட்டி தொங்க விடுங்கள் போதும். வாடிக்கையாளர்கள் வருவார்கள். உங்களுடைய கடையிலும் வியாபாரம் அமோகமாக நடக்கும். நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் மந்தமான போக்கு நிலவினாலும் இந்த குடம்புளியை கருநீல துணியில் கட்டி நிலை வாசலில் தொங்க விடலாம். மாதம் ஒருமுறை மறக்காமல் அந்த குடம்புளியை எடுத்து நெருப்பில் போட்டு எரித்து விடுங்கள். அவ்வளவு தான். ஒரே ஒரு குடம்புளி உங்கள் வாழ்க்கையில் பல மாறுதல்களைக் கொண்டு வந்து சேர்க்கும். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்தது இது. முயற்சி செய்து பாருங்கள். நல்ல பலனை பெறலாம்.

- Advertisement -