
ஒருவருடைய வாழ்க்கையில் எதிர்பாராத கஷ்டம் வருவதற்கு முதல் காரணம் இந்த கண் திருஷ்டி தான். ஜாதகத்தை பார்த்தால் நன்றாக இருக்கும். நேரமும் காலமும் கைகூடி வரும். ஆனால் நல்லது நடக்காது. வாசல்வரை வந்த நல்லது, வீட்டிற்குள் நுழையாது. எதிர்பாராத பண சிக்கல், உடல் உபாதைகள் வந்து வீண் விரைய செலவு ஏற்படுத்திவிடும். இப்படி உடனடி கஷ்டத்திற்கு காரணமாக இருக்கும் இந்த கண்திருஷ்டியை நம்மிடம் நெருங்க வைக்காமல் இருக்க என்ன செய்யலாம்.
ஆன்மீகத்தில் இதற்கு நிறைய பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது. அதிலிருந்து ஒரு சக்தி வாய்ந்த பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு மேல் நீங்கள் உங்களுடைய வீட்டில் செய்து கொள்ளலாம். வீட்டில் இருக்கும் குடும்ப தலைவன் தலைவி அல்லது வயதானவர்கள் யார் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.
இந்த பரிகாரத்திற்கு உங்களுக்கு தேவையான பொருள் சிவப்பு குங்குமம். கொஞ்சம் வெண்கடகு, ஒரு பெரிய கட்டி கற்பூரம். மெழுகு கற்பூரம் பயன்படுத்த வேண்டாம். சூடம், கட்டி கற்பூரம் பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஒரு அகலமான தாம்பூல தட்டிலோ அல்லது பேசனிலோ கொஞ்சம் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள்.
கொஞ்சம் சிவப்பு நிற குங்குமத்தை போட்டு நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். ஆலம் கரைத்தது போல ஒரு தண்ணீர் உங்களுக்கு கிடைத்திருக்கும். அதில் வெண்கடுகை கொட்ட வேண்டும். வெண் கடுகோடு அந்த தண்ணீரும் கலந்து விட வேண்டும். தண்ணீர் மேலே தெளிந்து நிற்கக்கூடாது. வெண்கடுக்கும் தண்ணீரும் சிவப்பு நிற குங்குமமும் சேர்ந்து இருக்க வேண்டும் இந்த கலவையின் மேல் ஒரு கட்டி கற்பூரத்தை வைத்து நெருப்புப் பொருத்த வேண்டும்.
அப்போது பார்த்துக் கொள்ளுங்கள் தண்ணீர் அதிகமாக இருக்கக்கூடாது அல்லவா. இந்த சிவப்பு தண்ணீரில் வெண்கடுகு அப்படியே நனைந்து இருந்தால் மட்டும் போதும். நிறைய தண்ணீர் ஊற்றி விட்டால் கற்பூரம் பிறகு நெருப்பு பிடிக்காது. இதுபோல சிவப்பு நிற குங்குமத்தில் நனைத்த வெண்கடுக்கும், இந்த கற்பூரத்தை ஏற்றி வைத்து உங்கள் வீடு முழுவதும் காண்பிக்க வேண்டும்.
படுக்கையறை முதல் கொண்டு, சமையலறை முதல் கொண்டு, வரவேற்பறை முதல் கொண்டு, பூஜை அறை முதல் கொண்டு, உங்களுடைய வீட்டில் எந்தெந்த இடமெல்லாம் இருக்கிறதோ அந்த இடத்தில் எல்லாம் காட்ட வேண்டும். குறிப்பாக படிக்கட்டுக்கு அடி பக்கம் ஏதாவது இருந்தால் கூட அந்த இடத்தில் எல்லாம் இந்த கற்பூரத்தை காட்டிவிட்டு வீட்டிற்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும்.
இதையும் படிக்கலாமே: கடன் தீர்க்கும் ஞாயிற்றுக்கிழமை பரிகாரம்
கற்பூரம் எரிந்து அணைந்த உடன் இந்த பொருட்களை எல்லாம் ஒரு கவரில் கொட்டி, கட்டி வீட்டுக்கு வெளிப்புறமாக தூரமாக ஏதாவது ஒரு இடத்தில் கொண்டு போய் ஓரமாக போட்டுவிட்டு வந்து விட வேண்டும். வருடத்தில் மூன்று ஞாயிற்றுக்கிழமை இதை செய்தாலே போதும். மூன்றில் இருந்து நான்கு மாதத்திற்கு ஒரு முறை இந்த பரிகாரத்தை வீட்டில் செய்து விட்டால், உங்கள் வீட்டில் கண் திருஷ்டியால் எந்த பாதிப்பும் வராது வீட்டுக்குள் வராது. எந்த கெட்ட சக்தியும் வீட்டில் தாங்காது. இது ஒரு எளிமையான தாந்திரீக பரிகாரம். சக்தி வாய்ந்த பரிகாரம். நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.