- Advertisement -

மார்கழி செவ்வாயில் படிக்க வேண்டிய முருகன் பாடல்

- Advertisement -

இன்று மார்கழி செவ்வாய்க்கிழமை. செவ்வாய் என்றாலே நம் நினைவுக்கு வருவது முருகப்பெருமான்தான். இறைவழிபாட்டில் மகாலட்சுமியை அழைத்தால், மகாலட்சுமி மட்டும்தான் வருவாங்க, சிவபெருமானை கூப்பிட்டால் சிவன் மட்டும் தான் வருவார். பிள்ளையாரை கூப்பிட்டால் பிள்ளையார் மட்டும்தான் வருவார்.

ஆனால் முருகனை கூப்பிட்டால் சிவன் பார்வதி பிள்ளையார் பெருமாள் அம்பாள் என்று அனைத்து சக்திகளும் முருகப்பெருமானோடு சேர்ந்து வரும் என்று சொல்லுவார்கள். அப்பேர்பட்ட முருகப்பெருமானை மார்கழி மாதத்தில் வரக்கூடிய ஒரு செவ்வாய் கிழமையிலாவது மனப்பூர்வமாக நினைத்து, அவருக்கு பிடித்த ஒரு பாடலை பாடி வழிபாடு செய்யாமல் இருந்தால் அது முறையாகுமா. இன்று முருகனை வழிபடுவோம். அவன் மனம் குளிர ஒரு பாடலை படிப்போம்.

- Advertisement -

முருகனுக்காக அருணகிரிநாதர் பாடிய கந்தர் அனுபூதியிலிருந்து ஒரு சிறப்பு வாய்ந்த நான்கு வரி பாடலைப் பற்றித்தான் இன்று நான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்கள் வாழ்க்கையில் பெரிய அளவில் கஷ்டம் இருக்கிறது, அறுபடை வீடுகளில் இந்த கோவிலுக்கு சென்று முருகனை வழிபாடு செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள். ஆனால் வெகு தொலைவில் உள்ளீர்கள்.

உங்களால் நேரத்தை செலவு செய்து, பணத்தையும் செலவு செய்து முருகனை வந்து காணக்கூடிய பாக்கியம் கிடைக்கவில்லை. உதாரணத்திற்கு வெளிநாட்டில் இருக்கிறீர்கள். திருச்செந்தூர் செல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்கள். முடியவில்லை, அல்லது உள்ளூரிலேயே இருக்கிறீர்கள் திருச்செந்தூர் செல்ல வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை முடியவில்லை என்ன செய்கிறீர்கள் என்றால், இன்று மாலை பூஜை அறையில் விளக்கேற்றி வைத்துவிட்டு திருச்செந்தூர் முருகனை நினைத்து இந்த பாடலை பாடுங்கள்.

- Advertisement -

திருச்செந்தூர் முருகன் உங்களுக்கு அருள் புரிவான். இன்னும் சொல்லப்போனால் உங்களை அந்த திருச்செந்தூருக்கு அந்த முருகன் அழைத்துச் சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. சரி இன்றைய தினம் நாம் பாட வேண்டிய அந்த பாடல் என்ன இப்போது பார்த்து விடுவோமா.

கந்தர் அனுபூதி

முருகன் குமரன் குகன் என்று மொழிந்து
உருகும் செயல்தந்து உணர்வு என்று அருள்வாய்
பொரு புங்கவரும் புவியும் பரவும்
குருபுங்கவ எண்குண பஞ்சரனே!

- Advertisement -

முருகா குமரா குகன் என்று கூப்பிட்டால் நாம் செய்யும் செயலில் ஒழுக்கம், சிந்தனையில் ஞானமும் பெறலாம். அந்த வானத்தில் வசிக்கும் தேவர்களும் உன்னை வழிபடுகிறார்கள். பூலோகத்தில் வசிக்கும் மனிதர்களும் உன்னை வழிபடுகிறார்கள்.

தன் வயத்தம், தூய்மை, இயற்கையறிவு, முற்றறிவு, பற்றின்மை, பேரருள், எல்லாம்வன்மை, வரம்பிலா இன்பம் என்னும் 8 வகையான தெய்வீக குணங்களையும், குருவாக நின்று நீ எனக்கு அருள் புரிவாய் என்பது தான் இந்த பாடல் வரிகளுக்கு உண்டான அர்த்தம். குருவால் உங்கள் ஜாதக கட்டத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், சுபகாரிய தடைகள் உங்கள் வாழ்வில் நடக்காமல் இருந்தால், அந்த நல்லதை எல்லாம் கொண்டு வந்து உங்கள் கையில் சேர்க்க வேண்டிய வேலையை இந்த பாடல் செய்யும்.

இதையும் படிக்கலாமே: செல்வம் சேர நவமி வழிபாடு

நீங்கள் முருகன் மீது நம்பிக்கை மட்டும் வையுங்கள். நீங்கள் இந்த ஜாதகத்தில் பிறந்தவர்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த முருகன் கோவிலுக்கு போகவே கூடாது என்று யாராவது சொன்னால் அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல், முருகா என்று அவனை சரண் அடைந்து விருப்பப்பட்ட கோவிலுக்கு சென்று அந்த முருகப்பெருமானை கண் குளிர பார்த்து தரிசனம் செய்யுங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -