- Advertisement -

ஞாபக சக்தி அதிகரிக்க கந்தர் அனுபூதி பாடல்

- Advertisement -

நிறைய பெற்றவர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு இருக்கும் ஞாபக மறதியை நினைத்து கவலைப்படுகிறார்கள். படிப்பது மனதில் நிற்கவில்லை. எந்த ஒரு விஷயத்தையும் சுலபமாக புரிந்து கொள்ள முடியாத திறன் பிள்ளைகளுக்கு இருந்தால், உங்களுடைய பிள்ளைகள் மற்ற பிள்ளைகளை ஒப்பிடும்போது திறமையில் கொஞ்சம் குறைவானவர்களாக இருக்கிறார்கள் என்று நினைத்தால் இந்த முருகனது கந்தர் அனுபூதி பாடல் உங்களுக்காக தான்.

உங்களுடைய பிள்ளைகளை குறை சொல்லவில்லை. எல்லா பிள்ளைகளுக்கும் திறமை என்பது ஒரே மாதிரி இருக்காது. ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் ஒவ்வொரு விஷயத்தில் ஆர்வம் இருக்கும் ஒவ்வொரு பிள்ளைகளும் ஒவ்வொரு விஷயத்தில் நிச்சயம் திறமைசாலிகள் தான். சில பிள்ளைகள் கூர்மையான அறிவைக் கொண்டிருப்பார்கள், சில பிள்ளைகளுக்கு அந்த திறமை கொஞ்சம் குறைவாக இருக்கும்.

- Advertisement -

அவரவர் திறமைக்கு எது சரியோ அதை நாம் அவர்களுக்கு கொடுக்க வேண்டும். அதில் குறைப்பட்டுள்ள ஒன்றுமே கிடையாது. உங்களுடைய பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்கவில்லை, ஞாபக சக்தி குறைவாக இருக்கிறது என்றால் முருகப்பெருமானின் இந்த பாடலை படிக்க சொல்லுங்கள். கந்தர் அனுபூதியில் வந்திருக்கும் 51 ஆவது பாடல் தான் இது அருணகிரிநாதர் நமக்கு அளித்த பொக்கிஷம்.

ஞாபக சக்தி பெற கந்தர் அனுபூதி பாடல்

முருகன் குமரன் குகன் என்று மொழிந்து
உருகும் செயல்தந்து உணர்வு என்று அருள்வாய்
பொருபுங் கவரும், புவியும், பரவும்
குருபுங்கவ எண்குண பஞ்சரனே

- Advertisement -

கொஞ்சம் பெரிய பிள்ளைகளாக இருந்தால் இந்த நான்கு வரிகளை தினந்தோறும் ஒரு முறை படிக்க அவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கொஞ்சம் சிறிய பிள்ளைகளால் இந்த தமிழ் வார்த்தைகளை அவ்வளவு எளிதாக படிக்க முடியாமல் இருந்தாலும், அவர்களை ‘முருகன் குமரன் குகன்’ என்ற முருகப்பெருமானின் இந்த மூன்று நாமங்களை மட்டும் சொல்லச் சொல்லுங்கள்.

படிப்பதற்கு முன்பு, பள்ளிக்கூட செல்வதற்கு முன்பு, தேர்வுகளுக்கு தயாராக முருகப்பெருமானின் இந்த 3 பெயரை உச்சரித்துவிட்டு அவர்களுடைய முயற்சிகளை மேற்கொள்ளும் போது அந்த முயற்சி கூடுதல் வெற்றியை கொடுக்கும் என்பது நம்பிக்கை. முருகப்பெருமானின் இந்த சிறப்பு வாய்ந்த பாடல் அனைவருக்கும் பயனுள்ளபடி அமையும். மாணவர்கள் மட்டும்தான் இதை படிக்க வேண்டும் என்பது அவசியம் கிடையாது.

இதையும் படிக்கலாமே: கஷ்டங்களை தீர்க்கும் மஹாளய அமாவாசை

வேலையில் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைப்பவர்கள், படிப்பையே தன்னுடைய வாழ்க்கையாக கொண்டிருப்பவர்கள், மேலும் மேலும் தங்களுடைய படிப்பின் மூலம் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு புது கண்டுபிடிப்பு களை, படைப்புகளாக இந்த பூமிக்கு கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் இந்த பாடலை படித்து பலன் பெறலாம். உங்களுடைய அறிவுத்திறமை பல மடங்கு அதிகரிக்கும். ஞாபக சக்தியும் பல மடங்கு அதிகரிக்கும் நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த பாடலை படித்து பலன் பெறவும்.

- Advertisement -