- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

Tirupati : திருப்பதிக்கு செல்கையில் இந்த கோவிலை வழிபட்டால் எத்தனை பலன் உண்டு தெரியுமா ?

திருப்பதி திருமலையில் நாராயணனான பெருமாள் கோயில் கொண்டிருந்தாலும் புனிதமான அந்த ஏழுமலைகளை சுற்றி பல அற்புத கோயில்கள் இருக்கின்றன. அப்படி திருமலையிலிருந்து அருவியாக மலையடிவாரத்தில் இருக்கும் கோயிலுக்கு புனித தீர்த்தமாக வந்து சேரும் கபில தீர்த்தம் கோயில் பற்றிய சில விடயங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

முற்காலத்தில் கபில முனிவர் இங்கு தவமிருந்து சிவ பார்வதி தரிசனம் கிடைக்கப்பெற்றதாக தல வரலாறு கூறுகிறது. இங்கிருக்கும் சிவபெருமானின் லிங்க திருமேனி சுயம்பு வடிவம் கொண்டது. இங்கிருக்கும் சிவபெருமான் கபில முனிவரின் பெயர் கொண்டு கபிலேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.கார்த்திகை மாதத்தின் போது மூன்று லோகங்களில் இருக்கும் புனித தீர்த்தம் இந்த கபில தீர்த்தத்தில் கலப்பதாக ஐதீகம். இந்த கார்த்திகை மாதத்தில் இந்த கபில தீர்த்தத்தில் நீராடினால் நமது சகல பாவங்களும் நீங்கி முக்தி பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் இக்காலத்தில் இந்த கபில தீர்த்த கோயிலில் எள் அளவில் இருக்கும் தங்கம் தானம் செய்தாலும், அது மேரு மலை அளவில் இருக்கும் தங்கத்தை தானமளித்ததற்கு சமமாவதாக நம்பிக்கை.

- Advertisement -

இந்த கபில தீர்த்த தலத்தில் ஒரு கைப்பிடி அளவு அரிசி தானம் அளித்தாலும் அவர்களுக்கு சந்திர லோக பிராப்தி கிடைப்பதாகவும். பசு மாடு தானம் அளிப்பவர்களுக்கு அவர்கள் மறைந்த பின்பு சுவர்க்கலோகம், வைகுண்டம், கைலாசம் செல்லும் பாக்கியம் கிடைப்பதாகவும். கன்னிகாதானம், மந்திர உபதேசம், பூமி தானம் போன்றவற்றை இத்தலத்தில் செய்பவர்களுக்கு பிரம்ம லோகம் கிடைப்பதாகவும் ஐதீகம்.

மேற்கூறிய தானங்களை செய்ய இயலாதவர்கள் கார்த்திகை மாத பௌர்ணமி அன்று மதிய வேளையில் “அயந்தி ஸர்வ தீர்த்தனி மத்யஹ்னே காபிலம் சரஹ” என்கிற மந்திரத்தை துதித்து, கபில தீர்த்தத்தில் நீராடுவதால் இங்கே கோயில் கொண்டிருக்கும் சிவபெருமான்,பெருமாள் மற்றும் கபில முனிவர் ஆகியோர்களின் அருளாசிகள் பெற்று, வாழ்வில் அனைத்து நலங்களும் கிடைக்க பெறுவர்கள். திருமலையில் அலிபிரி எனப்படும் மலைக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக செல்லும் இடத்திற்கு அருகில் அமைந்துள்ளது இந்த கபில தீர்த்தம் எனப்படும் கோயில்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
கேது திசை பரிகாரங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Kapila theertham in Tamil. It is also called as Tirupati temples in Tamil or Kapila muni in Tamil or Kapileswara temple tirupati in Tamil.

- Advertisement -