
தெய்வங்களும் சில தெய்வங்களை மட்டும் கூப்பிட்ட குரலுக்கு உடனே வரும் தெய்வங்கள் என்று நாம் சொல்லுவதுண்டு. அப்படியான தெய்வங்கள் ஒருவர் தான் கால பைரவர். இந்த காலபைரவர் வழிபாட்டை ஒருவர் தொடர்ந்து செய்யும் பொழுது அவருடைய வாழ்க்கையில் துன்பமே கூட நெருங்கி வர அஞ்சும் என்று சொல்வார்கள். அப்படியான ஒன்று ஆற்றல் மிக்க வல்லமை மிக்க தெய்வம் தான் கால பைரவர்.
அது மட்டும் இன்றி இவர் சிவனின் அம்சமாக கருதப்படுகிறார். ஆகையால் தான் அனைத்து சிவாலயங்களிலும் காலபைரவருக்கு என தனி சன்னதி அமைத்து வழிபாடு செய்பவர்கள். அங்கு சிவபெருமானுக்கு என்னென்ன பூஜைகள் நடக்கிறதோ அத்தனையும் இவருக்கும் நடக்கும். அப்படியானவரின் அருளை நாம் முழுமையாக பெற சில வழிமுறைகள் உண்டு. அவற்றில் ஒன்றை தான் இப்பொழுது நாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
பைரவர் வழிபாடு என்றாலே அங்கு அவருடைய வாகனமான நாய்களுக்கும் முக்கியத்துவம் உண்டு. பைரவரை நினைத்து நீங்கள் எந்த வேண்டுதல் பரிகாரங்கள் செய்தாலும் அதே நாளில் அந்த ஜீவன்களுக்கும் நாம் ஏதேனும் ஒரு உணவை தானமாக வழங்கினால் மட்டுமே அந்த வழிப்பாடும் பரிகாரமும் பூர்த்தி அடையும்.
இப்படித் தான் இன்று தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபாடு செய்யும் பொழுது அவரின் வாகனமான நாய்களுக்கு நாம் ஏதேனும் உணவை கொடுக்க வேண்டும். அது என்ன உணவு என்பதை தான் இப்போது தெரிந்து கொள்ளப் போகிறோம். முதலில் உப்பு சேர்க்காத ஏதேனும் ஒரு உணவை கொடுக்க வேண்டும். இதைத் தவிர கோதுமையாலான பண்டங்களை கொடுக்கலாம். ஆனால் அதிலும் உப்பு சேர்க்கக் கூடாது.
இத்துடன் பால் கலந்த பொருட்களை கொடுக்கலாம். அது பால் சாதமாகவும் இருக்கலாம் வெறும் பாலாகவும் கொடுக்கலாம். இவையெல்லாம் எங்களால் செய்ய முடியாது என்பவர்கள் ஒரு பாக்கெட் பிஸ்கட் வாங்கி அந்த ஜீவராசிகளுக்கு கொடுக்கலாம். இது பைரவரின் அருளை பரிபூரணமாக உங்களுக்கு பெற்று தரும் என்பதில் சந்தேகமே இல்லை.
பைரவரை வழிபாடு செய்யும் போது முதலில் நம்முடைய வாழ்க்கையில் உள்ள எதிர் தொல்லை முழுவதுமாக நீங்கி விடும். அது மட்டும் இன்றி மன குழப்பம் அச்சம் போன்றவற்றை வேருடன் அறுக்கும் கடவுள் அவர். அது போல நம்முடைய வாழ்க்கையை துன்பத்திற்கு உள்ளாக்கக் கூடிய கடன் பிரச்சனையில் இருந்தும் விடிவித்து செல்வ செழிப்பான வாழ்க்கையை தரக் கூடிய ஆற்றலை பெற்றவர் பைரவர்.
இதையும் படிக்கலாமே: மே 2024 மைத்ரேய முகூர்த்த நேரம்
ஆகையால் அஷ்டமி நாளில் பைரவரை வணங்கும் போது மட்டுமல்லாமல் எப்பொழுது நீங்கள் பைரவரை வணங்கினாலும் சரி அல்லது உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் இந்த ஜீவராசிகளுக்கு இதுபோல உணவுகளை வழங்கி வரும் போது உங்கள் வாழ்க்கை மென்மேலும் செழிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்யுங்கள் நிச்சயம் நல்ல பலனை பெறலாம்.