
இல்லத்தரசிகளுக்கு இருக்கக்கூடிய சவால்களில் மிகப்பெரிய சவால், சமையலறையை கரப்பான் பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பது தான். என்னதான் சுத்தம் செய்தாலும் வெளியில் இருந்து வரக்கூடிய கரப்பான் பூச்சிகளையும், சிங்க் ஓட்டையிலிருந்து வரக்கூடிய கரப்பான் பூச்சிகளையும் நம்மால் தடுத்து நிறுத்தவே முடியாது.
அதிலும் எந்த ஒரு செயற்கையான பூச்சிக்கொல்லியும் கலக்காத லிக்விட் வைத்து இந்த கரப்பான் பூச்சியை கொள்ள வேண்டும் என்று சிலர் நினைப்பார்கள். கரப்பான் பூச்சியை ஒரு நிமிடத்தில் அழிப்பதற்கு கடைகளில் ஹிட் கிடைக்கிறது. ஆனால் அது நாம் சுவாசத்திற்கு அவ்வளவு நல்லது கிடையாது. பாயிஸின் என்று சொல்லுவார்கள்.
செயற்கையான பொருட்களை சேர்க்காமல் நம்முடைய சுவாசத்திற்கு ஆபத்து கொடுக்காமல் கரப்பான் பூச்சிகளை அழிக்க ஒரு லிக்விட் தயார் செய்யும் முறையைத்தான் இந்த பதிவை மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
இந்த லிக்விட் தயார் செய்ய தேவையான பொருட்களை பார்த்து விடுவோம். ஒரு பெரிய டம்ளர் தண்ணீர், நறுக்கிய பெரிய வெங்காயம், வேப்ப இலை 2 கொத்து, டெட்டால் 1 மூடி, வாசனைக்காக முகத்துக்கு பூசும் பவுடர் 1 ஸ்பூன்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 1 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தையும், வேப்ப இலைகளையும் போட்டு 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வையுங்கள். அடுப்பை அணைத்துவிட்டு, இந்த தண்ணீர் ஆறியதும் இதை வடிகட்டிக் கொள்ளவும். இந்த தண்ணீரோடு டெட்டால் 1 மூடி ஊற்றி முகத்துக்கு போடும் பவுடரையும் போட்டு, கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றினால் கரப்பான் பூச்சியை கொல்லும் லிக்விட் தயார்.
இதை தைரியமாக நீங்கள் எந்த இடத்திலும் அடிக்கலாம். அடுப்புக்கு கீழ் பகுதி, மளிகை ஜாமான்கள் அடுக்கி வைத்திருக்கும் இடம், சிங்குக்கு அடியில், நிலை வாசல் கதவுக்கு கீழே, பாத்ரூம் கதவுக்கு கீழே, கதவுக்கு முன்பக்கம் பின்பக்கம், என்று எல்லா இடத்திலும் இந்த ஸ்ப்ரேவை அடித்து வையுங்கள். கரப்பான் பூச்சி அந்த இடத்திற்கு வந்தால் உடனே காலி ஆகிவிடும். அவ்வளவுதான் இந்த வாசத்திற்கு கரப்பான் பூச்சி உயிர் வாழாது. வீட்டில் இருக்கும் கரப்பான் பூச்சிகளும் செத்து மடியும்.
இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தொடர்ந்து இந்த ஸ்ப்ரேவை அடித்து வந்தாலே கரப்பான் பூச்சி தொல்லையிலிருந்து தப்பிக்கலாம். ஒரு முறை இந்த ஸ்பிரேவை தயார் செய்து வைத்துவிட்டால் போதும். ஒரு மாதத்திற்கு இதை நீங்கள் பயன்படுத்தலாம்.
இதையும் படிக்கலாமே: எண்ணெய் பிசுக்கு படிந்த கடாயை சுத்தம் செய்ய வீட்டு குறிப்பு
இந்த லிக்விட் ஸ்ப்ரேக்கு குட்டி குட்டி கரப்பான் பூச்சிகள் சின்ன சின்ன வண்டுகள் கூட வீட்டுக்குள் வந்து தொல்லை கொடுக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எளிமையான வீட்டுக் குறிப்பு எல்லா இல்லத்தரசிகளுக்கும் பயனுள்ளபடி அமையும். தேவைப்படுபவர்கள் முயற்சி செய்து பாருங்கள். உங்க வீட்டு கிச்சனுக்கு இந்த டிப்ஸ் ஒர்க் அவுட் ஆச்சுன்னா உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் இந்த டிப்ஸ் மறக்காம ஷேர் பண்ணுங்க.