- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்எண்ணெய் பிசுக்கு படிந்த கடாயை சுத்தம் செய்ய வீட்டு குறிப்பு

எண்ணெய் பிசுக்கு படிந்த கடாயை சுத்தம் செய்ய வீட்டு குறிப்பு

- Advertisement -

நம் வீட்டு சமையல் அறையில் பூரி பொறிப்பதற்கு, அப்பளம் பொறிப்பதற்கு, ஊறுகாய் தாளிப்பதற்கு, தக்காளி சட்னி செய்வதற்கு என்று ஒரு கடாயை வைத்திருப்போம். அந்த கடாயை என்னதான் தேய்த்து சுத்தம் செய்தாலும் அதில் இருக்கும் எண்ணெய் பிசுபிசுப்பு போகவே போகாது. எண்ணெய் படிந்த கடாயை நார் போட்டு தேய்த்தால் அந்த நார் முழுவதும் வீணாகப் போய்விடும்.

அந்த நாரை மீண்டும் மற்ற பாத்திரம் தேய்ப்பதற்கு பயன்படுத்தவே முடியாது. அந்த அளவுக்கு கஷ்டமான ஒரு வேலை இந்த எண்ணெய் கடாயை தேய்ப்பது என்பது. இவ்வளவு கஷ்டமான வேலையை சுலபமாக்க ஒரு புத்தம் புது வீட்டுக்குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

கடாய் சுத்தம் செய்யும் முறை

நம்முடைய வீட்டில் இருக்கும் கோலமாவு போதும் இந்த பிசுபிசுப்பான கடாயை ஒரே நிமிடத்தில் சுத்தம் செய்து விடலாம். அது எப்படி தெரியுமா. எண்ணெய் பண்டங்களை சமைத்த பிறகு, கடாயில் மீதமான எண்ணெயை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி விடுங்கள். பிறகு ஒரு நியூஸ் பேப்பர் போட்டு அந்த எண்ணெயை எல்லாம் துடைத்து விடுங்கள். கடாயை தண்ணீர் ஊற்றி கழுவ கூடாது.

இந்தக் கோலப்பொடியை கடாய் முழுவதும் தூவி விடவும். பிறகு இந்த பொடியை கொண்டு உங்கள் கையாலேயே கடாய் முழுவதும் நன்றாக தேய்த்து விட வேண்டும். இப்படி கடாய்க்கு உள்பக்கம், கடாயின் கைப்பிடி கடாயின் மேல் பக்கம் எல்லாம் கோலமாவை தூவி நன்றாக தேய்த்து எடுத்தாலே, அந்த கோலமாவில் எல்லா எண்ணெய் பிசுக்கும் முழுசாக வந்துவிடும்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக ஊறுகாய் தாளித்த கடாய் தக்காளி சட்னி போட்ட கடாயை எல்லாம் தேய்த்தால் அந்த மஞ்சள் நிறம், அந்த கடாயில் இருந்து வந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட கடாயில் இப்படி கோலப்பொடியை போட்டு தேய்த்து எடுக்கும் போது அந்த மஞ்சள் நிற கறை கூட சுத்தமாக இந்த கோலமாவோடு வந்துவிடும். முதல் முறை கோலமாவை போட்டு தேய்த்து எடுத்து விடுங்கள்.

இன்னும் கொஞ்சம் லேசாக பிசுபிசுப்பு இருந்தால், இரண்டாவது ஒரு முறை புதுசாக கோலமாவை தூவி தேய்த்து இந்த கோலமாவு எல்லாம் ஒரு வேஸ்ட் பேப்பரில் கொட்டி குப்பை தொட்டியில் போடவும். சிங்குக்கு உள்ளேயே போட்டு விட்டால் சிங்க் அடைத்துக் கொள்ளும்.

- Advertisement -

ஜாக்கிரதை பிறகு கோலமாவால் சுத்தம் செய்த கடாயை கொஞ்சமா லிக்விட் ஊற்றி லேசான நார் போட்டு தேய்த்து கழுவினாலே கடாயில் ஒரு துளி கூட பிசுபிசுப்பு இருக்காது. அலுமினியம் கடாய், இந்தோனியம் கடாய், இரும்பு கடாய்க்கு இந்த முறையை நீங்கள் தாராளமாக பயன்படுத்தலாம். நாண் ஸ்டிக் கடாய்க்கு இந்த முறையை பயன்படுத்தக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: சிங்க் சுத்தம் செய்ய வீட்டு குறிப்பு

இரும்பு கடாயை மட்டும் தண்ணீரை நன்றாக வடித்து விட்டு, ஒரு துணியை போட்டு உடனடியாக துடைத்து பிறகு ஸ்டோர் செய்யவும். நீண்ட நேரம் அதில் தண்ணீர் இருந்தால் துருப்பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இந்த பயனுள்ள வீட்டு குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் ஒருமுறை உங்களுடைய வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.

சற்று முன்