- Advertisement -

கார்த்திகை பௌர்ணமி அன்று சொல்ல வேண்டிய சிவ மந்திரம்

- Advertisement -

14-12-2024 சனிக்கிழமை இன்று மாலை 4:25 மணி அளவில் பௌர்ணமி திதி பிறந்து விட்டது. இந்த நிமிடத்தில் இருந்து நாளை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் இந்த மந்திரத்தை நீங்கள் உச்சரிக்கலாம். கார்த்திகை பௌர்ணமி திதி அன்று, சிவபெருமானை நினைத்து பூஜை அறையில் விளக்கு ஏற்றி உங்கள் குடும்ப கஷ்டங்கள் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து இந்த மந்திரத்தை உச்சரிப்பவர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் நிகழும்.

கார்த்திகை தீபத் திருவிழா நேற்றைய தினம் திருவண்ணாமலையில் சிறப்பாக நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து பௌர்ணமி அன்று கிரிவலம் வருவதற்கு நிறைய பக்தர்கள் கூட்டம் அலைமோதும். நிறைய பேருக்கு கிரிவலம் செல்ல வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். ஆனால் அது நிறைவேறாத சூழ்நிலை இருக்கும்.

- Advertisement -

கிரிவலம் செல்ல முடியாதவர்கள் கிரிவலம் சென்ற பலனை பெற வேண்டும் என்றாலும் இந்த மந்திரத்தை, பௌர்ணமி திதி நாளில் உச்சரித்தால், திரு அண்ணாமலையார் பாதத்தில் இடம் கிடைக்கும். கிரிவலம் செய்த புண்ணியமும் உங்களை வந்து சேரும்.

இன்றைய சூழ்நிலையில் நிறைய பேர் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டம் பணக்கஷ்டம். பண கஷ்டத்திலிருந்து விடுபட வேண்டும் என்று நினைப்பவர்களும், இந்த சிவ மந்திரத்தை பௌர்ணமி திதி நாளில் உச்சரிக்கலாம். எவ்வளவு கடன் சுமையால் நீங்கள் வாடி வதங்கி இருந்தாலும் சரி அந்த கடன் பிரச்சனை சரியாகி உங்களுக்கான வருமானம் பல மடங்கு உயரம். பிறகு நீங்கள் உங்கள் தகுதிக்கு ஏற்ப செல்வந்தர்களாக மாறி நிற்பீர்கள்.

- Advertisement -

இன்று மாலை பூஜையில் விளக்கு ஏற்றி வைத்திருப்பீர்கள். இப்போதே இந்த மந்திரத்தை சொன்னாலும் தவறு கிடையாது. நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை அன்று  விளக்கேற்றி இந்த மந்திரத்தை சொன்னாலும் தவறு கிடையாது.  அனைத்து விதமான கஷ்டங்களையும் உங்களை விட்டு விலகி செல்ல நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் இதோ உங்களுக்காக.

சிவ மந்திரம்

விபூதி சுந்தர மஹேஸ்வர
ஹர சிவசிவ ஹரஹர மஹாதேவா
வில்வதள ப்ரிய சந்த்ர கலாதர
சிவசிவ ஹரஹர மஹாதேவா
கங்காதர ஹர சாம்ப

- Advertisement -

சதாசிவாய சிவசிவ ஹரஹர மஹாதேவா
த்ரியம்பகாய லிங்கேஸ்வராய
சிவசிவ ஹரஹர மஹாதேவா – மௌலீஸ்வராய
யோகேஸ்வராய சிவசிவ

ஹரஹர மஹாதேவா குஞ்சேஸ்வராய
குபேரேஸ்வராய சிவசிவ
ஹரஹர மஹாதேவா நடேஸ்வராய
நாகேஸ்வராய சிவசிவ ஹரஹர மஹாதேவா

கபாலீஸ்வரய்யா கற்கடகேஸ்வராய
சிவசிவ ஹரஹர மஹாதேவா
சர்வேஸ்வராய சாம்ப சதாசிவாய
சிவசிவ ஹரஹர மஹாதேவா
போலோ ஹரஹர சிவசிவ மஹாதேவா

இதையும் படிக்கலாமே: பாஞ்சராத்திர தீபம் 2024

எளிமையான தமிழ் வரிகளில் கொடுக்கப்பட்டுள்ள இந்த மந்திரத்தை உச்சரித்து பாருங்கள். உங்கள் வாழ்வில் நிகழும் மாற்றங்களை கண்கூடாக பார்க்கலாம். இன்றைய தினம் மட்டும் தான் இந்த மந்திரத்தை சொல்ல வேண்டுமா. பௌர்ணமியை தவிர்த்து மற்ற நாட்களில் இந்த மந்திரத்தை சொல்லலாமா என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்தால் தாராளமாக இந்த மந்திரத்தை சொல்லுங்கள் பணகஷ்டம் வரும் போதெல்லாம் இந்த மந்திரத்தை சொன்னால் உங்களுடைய தேவைக்கு ஏற்பட்ட ஈசன் செல்வ வளங்களை வாரிக் கொடுப்பான் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -