- Advertisement -
- Advertisement -

ஒரு சில பெண்களுக்கு முகத்தில் கரும்புள்ளிகள் அதிகமாகவே இருக்கும். அவருக்கு பல கிரீம்களை பயன்படுத்துவார்கள். அவர்களால் முடிந்த அனைத்தையும் செய்து இருப்பார்கள். ஆனால் இந்த மூன்று பொருட்களை வைத்து மட்டுமே உங்கள் முகத்திற்கு ஃபேஸ் பேக் போடுங்கள். முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறையும். அந்த ஃபேஸ் பேக்கை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

எந்த ஃபேஸ் பேக் போடுவதாக இருந்தாலும் முதலில் முகத்தை நன்றாக கழுவ வேண்டும் அல்லது ஐஸ் கட்டியை வைத்து பத்து நிமிடங்கள் நன்றாக முகத்தில் தேய்க்க வேண்டும். முகம் தூய்மையாக மாறிவிடும். பிறகு பச்சைப் பயரில் மாவை எடுத்துக் கொள்ளுங்கள். இது மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாக இருக்கும். இந்த பச்சை பயிறு மாவு கடைகளிலும் கிடைக்கும் அல்லது தனியாக பச்சை பயிரை வாங்கி காய வைத்து அரைத்து வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

இந்த பச்சை பயிறு மாவு ஆனது முகத்திற்கு நல்ல வழவழப்பை கொடுக்கும். இதனை வைத்து தேய்த்து குளித்தாலும் நம் சருமம் பட்டுப்போன்ற சருமமாக மாறும். ஆதலால் ஒரு ஸ்பூன் அளவிற்கு பச்சைபயிறு மாவினை எடுத்துக்கொண்டு அதில் ஒரு ஸ்பூன் தயிரினை நன்றாக கலந்து கொள்ள வேண்டும். தயிர் நம்முடைய முகத்திற்கு இழந்த பொலிவை திருப்பித் தரக்கூடிய ஒன்றாகவும், அதே சமயம் நம்முடைய முகத்தை புத்துணர்ச்சியிடம் வைத்துக் கொள்வதற்கும் உதவுகிறது.

பின்னர் அதில் ஒரு ஸ்பூன் மஞ்சள்தூள் கலந்து கொள்ள வேண்டும். மஞ்சள் தூள் நம் முகத்தில் இருக்கும் கிருமிகளையும் அழுக்குகளையும் விரைவில் சுத்தம் செய்யும். ஆதலால் தான் இந்த ஃபேஸ் பேக்கில் நாம் மஞ்சளை கலக்குகிறோம். இந்த மஞ்சள் ஆனது நம் முகத்தில் ஆன்டிசெட்டிக்காக வேலை செய்கிறது. தயிர், பச்சை பயிறு மாவு மற்றும் மஞ்சள் இவை மூன்றையும் நன்றாக கலக்க வேண்டும். பின்னர் இதனை ஃபேஸ் பேக் போடவும். அதனை 20 நிமிடம் நன்றாக முகத்தில் காய விட வேண்டும். நன்றாக காய்ந்த பின்னர் அதனை குளிர்ந்த தண்ணீரில் கழுவ வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு தொடர்ச்சியாக செய்வதன் மூலம் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளிச்சென்று காணப்படும். இந்த ஃபேஸ் பேக்கை இரவு படிக்க செல்வதற்கு முன் பயன்படுத்தினால் இதன் பலன் இன்னும் அதிகமாகவே இருக்கும் இதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்துமே நம் முகத்தின் அழகை பராமரிக்கக் கூடியதாகவும் அதேசமயம் முகப்பருக்கள் நீங்கியும் கரும்புள்ளிகள் நீங்கியும் முகத்தை பொலிவுடன் வைத்துக்கொள்ள உதவும்.

இதையும் படிக்கலாமே: தலைமுடி வறட்சியை நீக்க வழிமுறைகள்

அனைவரின் இல்லங்களிலும் இருக்கக்கூடிய இந்த பொருட்களை பயன்படுத்தி ஃபேஸ் பேக் போடுவதன் மூலம் இயற்கையான முறையில் முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகளை நீக்கி முகத்தை அழகாக்க முடியும்.

- Advertisement -