தலைமுடியில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் பல இருக்கின்றன. அவற்றில் ஒரு முக்கியமான பிரச்சினையாக திகழக்கூடியதுதான் வறட்சியான தலைமுடி. இந்த வறட்சி என்பது நம்முடைய தலைமுடியில் ஏற்பட்டு விட்டால் முடி பிளவு ஏற்படும், தலையில் பொடுகு பிரச்சனை ஏற்படும், தலைமுடி உதிர்தல் உண்டாகும், தலைமுடி பார்ப்பதற்கு பொலிவிழந்து தேங்காய் நாரு போல இருக்கும். இவை அனைத்தையும் சரி செய்ய வேண்டும் என்றால் சில வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். அந்த வழிமுறைகளை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
தலைமுடி வறட்சி ஏற்பட்டு விட்டால் சில வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். அதே சமயம் சில உணவுப் பொருட்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அந்த வறட்சி என்பது நீங்கும். இந்த வறட்சியை நீக்குவதற்கு முதலில் நாம் நம்முடைய தலைக்கு எண்ணெய் தேய்க்க வேண்டும். இந்த வறட்சியை ஏற்பட முக்கியமான காரணம் நம்முடைய சருமத்தில் இயற்கையிலேயே எண்ணெய் உற்பத்தி ஆகும். அந்த எண்ணெய் குறைய ஆரம்பிக்கும் பொழுது தான் வறட்சி என்பது ஏற்படும்.
அதனால் தான் தலைக்கு எண்ணெய் வைக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். வறட்சியான முடி இருக்கும் பட்சத்தில் எண்ணெய் வைப்பது என்பது மிகவும் சிறப்பான ஒன்று. சாதாரணமாக நாம் தலைக்கு தேய்க்கும் எண்ணையே பயன்படுத்தலாம். அதிக அளவில் தலைக்கு குளிக்க கூடாது. அதுவும் ஷாம்பூ, சீகக்காய் பயன்படுத்தி குளிக்க கூடாது. சாதாரணமாக தண்ணீர் ஊற்றி குளித்தால் அதில் எந்த பிரச்சினையும் இருக்காது. அடுத்ததாக தலைக்கு குளித்த பிறகு அதிக நேரம் துண்டை வைத்து துடைக்க கூடாது. தலையில் ஷாம்பு போடும் பொழுது சிறிது தண்ணீரில் ஷாம்புவை கலந்து தேய்க்க வேண்டும்.
மேலும் தலைமுடி வறட்சி பிரச்சினை இருப்பவர்கள் தலைக்கு ஹேர் பேக் போடுவதோ ஹேர் மாஸ்க் போடுவதோ செய்யக்கூடாது. அப்படி செய்தால் தலைமுடி வறட்சி என்பது மேலும் அதிகரிக்கும். இதோடு மட்டுமல்லாமல் தலை முடி நுனியில் ஏற்பட்டிருக்கும் பிளவுகளை 15 நாட்களுக்கு ஒரு முறை வெட்டி விட வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறையாவது தலைக்கு தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் பயன்படுத்தி 10 நிமிடம் மசாஜ் செய்து விட்டு பிறகு கெமிக்கல் குறைவாக இருக்கக்கூடிய ஷாம்புவை பயன்படுத்தி தலைக்கு குளிக்க வேண்டும்.
அதே சமயம் அதிக அளவில் ஷாம்புவையும் பயன்படுத்தக் கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த வழிமுறைகளை பின்பற்றுவதோடு தினமும் எலுமிச்சம் பழச்சாறு குடிப்பது வறட்சியான தலைமுடியை சரி செய்வதற்கு உகந்த ஒன்றாக கருதப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் விட்டமின் சி எந்தெந்த பொருட்களில் அதிகமான அளவு இருக்கிறதோ அவை அனைத்தையும் நாம் உள்ளுக்குள் எடுக்கும் பொழுது அது நம்முடைய தலைமுடியை மேலும் ஆரோக்கியமாக வளர வைக்கும்.
இதையும் படிக்கலாமே தலை முடி வளர ஹேர் சீரம்
இவை அனைத்துமே சிறு சிறு குறிப்புகள் என்றாலும் நம்முடைய வறண்ட முடியை சரி செய்வதற்குரிய அற்புதமான குறிப்புகள். தொடர்ச்சியாக இதை ஒரு மாதம் செய்யும்பொழுது தலை முடி வறட்சி என்பது நீங்குவதோடு தலைமுடி ஆரோக்கியமாகவும் முடி உதிர்தல் பிரச்சனை இல்லாமலும் இருக்கும். முடிப்பிளவு போன்ற பிரச்சனைகள் இல்லாமல் இருக்கும்.