
சில பேருக்கு முகம் பார்ப்பதற்கு வெள்ளையாக இருக்கும். ஆனால் வாயை சுற்றி கருவளையம், கண்ணை சுற்றி கருவளையம், நெற்றியில் அடர்த்தியான கருப்பு, கழுத்தில் கருப்புநிறம், என்று சில இடங்கள் மட்டும் பார்ப்பதற்கு வித்தியாசமாக தெரியும். இதை பிளாக் பிக்மெண்டேஷன் என்றும் சொல்லுவார்கள். மாநிறத்தில் இருப்பவர்களுக்கு இந்த கருந்திட்டுகள் அவ்வளவு எளிதாக வெளியே தெரியாது. ஆனால் கொஞ்சம் வெள்ளை நிறத்தில் இருப்பவர்களுக்கு இந்த கருந்திட்டுகள் அழகை முழுமையாக குறைத்து விடும். ஆங்காங்கே முகத்தில் இருக்கும் இந்த கருந்திட்டிகளை போக்க வீட்டில் இருந்த பொருட்களை வைத்தே சூப்பரான ஃபேஸ் பேக் எப்படி தயார் செய்வது, அந்த பேக்கை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றிய அழகு குறிப்பு இதோ உங்களுக்காக.
முகத்தில் இருக்கும் கருந்திட்டுக்கள் நீங்க:
இந்த பேக்கை கைமுட்டி கால் முட்டி, அக்குள் பகுதி, இப்படி உடம்பில் மற்ற இடங்களில் கருந்திட்டுகள் படிந்திருந்தாலும் அதை நீக்க பயன்படுத்தலாம். இந்த பேக் எப்படி தயார் செய்வது என்று பார்த்து விடுவோம். ஒரு சிறிய கிண்ணத்தில் தயிர் – 2 ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் தூள் – 2 சிட்டிகை, எலுமிச்சை பழச்சாறு – 1/2 ஸ்பூன், அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன், ஆலிவ் ஆயில் – 1 டேபிள் ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு நன்றாக கலக்க வேண்டும்.
தண்ணீர் ஊற்ற வேண்டாம். நாம் சேர்த்திருக்கும் தயிர் மட்டும் போதும். இது ஒரு பேக்காக நமக்கு கிடைத்துவிடும். ஆலிவ் ஆயில் உங்கள் வீட்டில் இல்லை என்றால் தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் கூட பயன்படுத்தலாம்.
நாம் தயார் செய்த பேக் அப்படியே இருக்கட்டும். ஒரு காட்டன் பஞ்சு அல்லது வெள்ளை துணியை சுடுதண்ணீரில் நனைத்து, கருப்பாக இருக்கும் இடத்தை துடைத்து விடுங்கள். அதன் பின்பு தயார் செய்து வைத்திருக்கும் பேக்கை வாயை சுற்றியோ அல்லது எந்த இடத்தில் கருப்பாக இருக்கிறதோ, அந்த இடத்தில் திக்காக பேக் போட்டு 15 இலிருந்து 20 நிமிடங்கள் அப்படியே விட்டு விட வேண்டும். அதன் பிறகு தண்ணீர் ஊற்றி கழுவக்கூடாது. ஒரு காய்ந்த காட்டன் பஞ்சை எடுத்து பேக் மேலே நன்றாக ஸ்கிரப் செய்து கொடுங்கள். அதன் பிறகு குளிர்ந்த தண்ணீரில் கழுவி விட வேண்டும்
டக்குனு ரிசல்ட் தெரியும் பாருங்க. கருந்திடிடுகள் உடனடியாக குறைந்திருப்பதை கண்ணாடியில் பார்க்கலாம். இதே போல தொடர்ந்து வாரத்தை 2 நாள் செய்து வர இப்படிப்பட்ட கருவளையம் நிரந்தரமாக காணாமல் போகும்.
இதையும் படிக்கலாமே: 1 கப் வடித்த சாதம் இருந்தா போதும் இனி உங்க தலையில் இருந்து ஒரு முடி கூட கொட்டாது தெரியுமா?
இதே பேக்கை முகம் முழுவதும் தேவை என்றாலும் போட்டுக் கொள்ளலாம். ஆனால், உங்களுடைய முகத்திற்கு மஞ்சள், எலுமிச்சை பழச்சாறு, இவைகள் அலர்ஜியை கொடுக்குமா என்று ஒரு முறை பேட்ச் டெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள். எளிமையான இந்த அழகு குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் முயற்சி செய்து பாருங்கள்.