1 கப் வடித்த சாதம் இருந்தா போதும் இனி உங்க தலையில் இருந்து ஒரு முடி கூட கொட்டாது தெரியுமா?

rice-hair-fall
- Advertisement -

வறண்ட கூந்தல் மற்றும் முடி உதிரும் பிரச்சனை இருப்பவர்கள் வாரம் ஒரு முறை இந்த ஒரு பேக்கை போட்டு வந்தால் ஒரு முடி கூட தலையிலிருந்து கொட்டவே செய்யாது. ஒரு கெரட்டின் ட்ரீட்மென்ட் கொடுப்பது போல இருக்கக்கூடிய இந்த ஹேர் பேக், சாதத்தை வைத்து செய்யப்படுகிறது. அதை எப்படி செய்வது? அதனால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன? என்பதை தான் இந்த அழகு குறிப்பு பதிவின் மூலம் இனி பார்க்க இருக்கிறோம்.

சிலருக்கு கொத்துக்கொத்தாக முடி உதிர்ந்து கொண்டே இருக்கும். ஒருமுறை தலையை வாரினாலே சீப்பில் அவ்வளவு முடி வேரிலிருந்து உதிர்ந்து வரும். இது போல இருப்பவர்களுக்கு பெரும்பாலும் வறண்ட தன்மை அதிகம் இருக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அவர்கள் இந்த பேக்கை பயன்படுத்தும் பொழுது சட்டென முடி கொட்டுவது நின்று வேகமாக முடி வளரவும் துவங்கும். முடியின் வறட்சி தன்மை முடியை வலிமை இழக்க செய்யும் எனவே முதலில் ஈர பதத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இதற்கு ஒரு கப் அளவிற்கு வடித்த சாதத்தை பிரஷ்ஷாக எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் அரை கப் அளவிற்கு தேங்காய் பால் சேர்க்க வேண்டும். தேங்காய் பால் சேர்ப்பதற்கு பதிலாக கெட்டியான தயிரும் சேர்க்கலாம். தயிர் சேர்த்தால் குளிர்ச்சி ஒத்துக் கொள்ளாது என்பவர்கள், தேங்காய் பால் மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு ஸ்பூன் அளவிற்கு ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்க்கலாம். ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு சுத்தமான கற்றாழை ஜெல் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் இருக்கக்கூடிய நன்மைகள் நமக்கு நல்ல ஒரு ஊட்டசத்தை கொடுத்து முடியை வேரிலிருந்து ரிப்பேர் செய்கிறது.

இந்த நான்கு பொருளையும் மிக்ஸியில் போட்டு நைசாக கூல் போல அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பார்ப்பதற்கு ஒரு கிரீம் போல இருக்கும். இதை தலையில் வேர்க்கால்களில் இருந்து நன்கு மசாஜ் செய்தபடி தலையில் இருந்து நுனி முடி வரை எல்லா இடங்களிலும் தடவி கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பத்து நிமிடம் ஊற விட்டுவிட்டு சாதாரணமாக நீங்கள் எப்பொழுதும் போல ஷாம்பூ போட்டு தலைக்கு குளித்துக் கொள்ளலாம்.

- Advertisement -

ஷாம்பூ போட்டு குளிப்பவர்கள் எப்பொழுதும் ஷாம்பூவை ஒரு அரை மக்கு அளவிற்கு தண்ணீரில் நுரை வர கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த தண்ணீரை பயன்படுத்தினால் போதும், அதில் இருக்கக்கூடிய கெமிக்கல் எபெஃக்ட் உங்களுடைய தலை முடியை பாதிக்காது தடுக்கலாம். இதைவிட இயற்கையாக வீட்டில் அரைக்கப்பட்ட சிகைக்காய் ரொம்பவே நல்லது.

இதையும் படிக்கலாமே:
முகப்பருக்கள், கருந்திட்டுக்கள் வராமல் உங்க ஸ்கின் பேபி சாஃப்டாக இருக்க இந்த தண்ணிய பயன்படுத்தலாமே!

அந்த காலத்தில் எல்லாம் சீயக்காய் பயன்படுத்தி வந்ததால் முடி வறண்ட தன்மையிலிருந்து இயல்பாகவே பாதுகாக்கப்பட்டது. மேலும் எவ்வளவு தூசு, மாசு போன்றவை தலைமுடியில் படிந்திருந்தாலும் கஞ்சியில் சேர்த்து ஊற வைக்கப்பட்ட இந்த ஷீயக்காய் போடும் பொழுது தலைமுடி அப்படியே மொற மொறன்னு ஆகி விடுவதை நாம் பார்த்திருப்போம். இந்த க்ரீம் பயன்படுத்திய பிறகு தலைமுடி ரொம்பவே சாப்ட் அண்ட் சில்க்கியாக இருக்கும். இதனை தொடர்ந்து வாரம் ஒரு முறை பயன்படுத்தி வந்தால் நாளடைவில் நம்முடைய முடி கண்டிஷனங் செய்தது போல பளபளவென்று அலைபாயும்.

- Advertisement -