- Advertisement -
சமையல் குறிப்புகள்

கருவேப்பிலை போட்டு இப்படி ஒருமுறை தேங்காய் துவையல் அரைச்சு பாருங்க அருமையாக இருக்கும்! 5 நிமிடத்தில் சுவையான தேங்காய் துவையல் அரைப்பது எப்படி?

- Advertisement -

சுவையான தேங்காய் துவையல் அரைப்பது எப்படி? என்று தான் இந்த பதிவின் மூலம் நாம் பார்க்க இருக்கிறோம். எப்பொழுதும் தேங்காய் துவையல் அரைக்கும் முறையை விட இப்படி கருவேப்பிலை சேர்த்து அரைக்கும் பொழுது, அதனுடைய ருசியே அபாரமாக இருக்கும். தேங்காய் துவையலா இது? என்று ஆசிரியப்படுவார்கள், அந்த அளவிற்கு வித்தியாசமான ஒரு சுவையை கொடுக்கக்கூடிய இந்த தேங்காய் துவையல் ரொம்பவே ஆரோக்கியமானதும் கூட! இட்லி, தோசை, சப்பாத்தி மட்டுமல்லாமல் எல்லா வகையான வெரைட்டி சாதத்துடன் தொட்டுக் கொள்ள இதமாக இருக்கும். இந்த தேங்காய் துவையல் எப்படி நாமும் எளிதாக அரைப்பது? என்பதை இனி தொடர்ந்து இந்த பதிவை படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

தேங்காய் துவையல் செய்ய தேவையான பொருட்கள்:
தேங்காய் – அரை மூடி, வர மிளகாய் – எட்டு, புளி – சிறு நெல்லிக்காய் அளவு, கல் உப்பு – தேவையான அளவு, உளுத்தம் பருப்பு – ரெண்டு டேபிள் ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு, பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

தேங்காய் துவையல் செய்முறை விளக்கம்:
இந்த தேங்காய் துவையல் அரைக்க முதலில் பெரிய அளவிலான தேங்காய் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். முற்றிய இந்த தேங்காயை பாதி மூடி அளவிற்கு துருவி எடுத்தாலும் சரி அல்லது சிறு சிறு வில்லைகளாக நறுக்கி எடுத்தாலும் சரி. பிற தேவையான மற்ற எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கைப்பிடி அளவிற்கு ஃப்ரஷ் ஆன பச்சையாக இருக்கக்கூடிய கருவேப்பிலை இலைகளை உருவி கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு உளுந்து சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள். உளுந்து பொன்னிறமாக வறுபட வேண்டும். அடுப்பை குறைந்த தீயில் வைத்துக் கொண்டு உளுந்து பொன்னிறமாக வறுபட்டு வரும் பொழுது, வர மிளகாய்களை உங்கள் காரத்திற்கு ஏற்ப காம்புகள் நீக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் இதனுடன் சிறு நெல்லிக்காய் அளவிற்கு புளியையும் விதைகள் நாரெல்லாம் நீக்கிவிட்டு கொஞ்சம் போல உருட்டி எடுத்து சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றை லேசாக வதக்கி கொண்டிருங்கள். பிறகு நீங்கள் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள கருவேப்பிலை இலைகளையும் போட்டு வதக்குங்கள். பின்னர் பெருங்காயத்தூள் சேர்த்து விட்டு நறுக்கி வைத்துள்ள தேங்காய் துண்டுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் லேசாக 2 நிமிடம் வதக்கி விடுங்கள். தேங்காய் வதங்கியதும் அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
கேரட் அல்வாவை இவ்வளவு ஈஸியா கூட செய்ய முடியுமா என்ன? ரொம்ப சுலபமா அட்டகாசமான சுவையில் கேரட் அல்வா. இதுவரைக்கும் சாப்பிடதுலயே இது தான் பெஸ்ட் அல்வான்னு சொல்லுவீங்க.

இந்த பொருட்கள் எல்லாம் நன்கு ஆறியதும் மிக்ஸி ஜாரில் இவற்றை சேர்த்து, தேவையான அளவிற்கு கல் உப்பு போட்டு கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். நைசாக அரைக்கக் கூடாது, ஒவ்வொரு துவையலும் நைசாக அரைப்பதை விட, கொரகொரவென்று இருக்கும் பொழுது சுவை அதிகமாக இருக்கும். இதை அப்படியே சாப்பிட்டாலும் சரி அல்லது கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளிச்சு பிறகு சாப்பிட்டாலும் சரி செம டேஸ்ட்டியாக இருக்கும். நீங்களும் இதே மாதிரியான துவையல் ரெசிபியை ட்ரை பண்ணி பார்த்து அசத்துங்க.

- Advertisement -