
தினமும் கருவேப்பிலை சாப்பிட வேண்டும். அதேசமயம் கருவேப்பிலையை சாப்பிட எந்த சிரமமும் இருக்கக்கூடாது. அந்த கருவேப்பிலை ரெசிபி நாவிற்கு ருசியாகவும் இருக்க வேண்டும். முடி அதிகமாக வளர வேண்டும். குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கு உடலில் இரும்பு சத்து கிடைக்க வேண்டும். பிள்ளை பெற்ற தாய்மார்களுக்கு பால் அதிகமாக சுரக்க வேண்டும். இளநரையை கட்டுப்படுத்த வேண்டும். இப்படி உங்களுக்கு எந்த தேவை இருந்தாலும் சரி கண்ணை மூடிகிட்டு ஒரே ஒரு நாள் 15 நிமிடங்கள் செலவழித்து இந்த கருவேப்பிலையை தொக்கு செய்து ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ளுங்கள். 15 நாட்களுக்கும் ஒவ்வொரு டேபிள்ஸ்பூன் சாப்பிட்டாலும் சரி தான். நம்முடைய ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது.
இந்த கருவேப்பிலை தொக்கை சுடச்சுட சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். அப்படி இல்லை என்றால் இட்லி தோசை சப்பாத்திக்கு தொட்டு சாப்பிடலாம். அப்படி இல்லை என்றால் பிரட் மேலே அப்படியே ஜாம் போல தடவையும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். வாங்க இப்போது ரெசிபியை பார்ப்போம்.
முதலில் 3 கைப்பிடி அளவு இலசான பச்சை கறிவேப்பிலையை எடுத்து தண்ணீரில் போட்டு கழுவி சுத்தம் செய்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதில் கழுவி வைத்திருக்கும் கருவேப்பிலை, சிறிய எலுமிச்சம்பழம் அளவு – புளி, மிளகு – 2 ஸ்பூன், மிளகாய் – 4, இந்த பொருட்களை எல்லாம் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுது போல் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது இதை தாளித்து விடலாம். அடுப்பில் அடி கனமான ஒரு கடாயை வைத்து கொண்டு 1 குழி கரண்டி அளவு நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளவேண்டும். நல்லெண்ணெய் காய்ந்ததும் கடுகு உளுந்து – 1 ஸ்பூன் போட்டு தாளிக்கவும். உளுந்து சிவந்து வந்தவுடன் பெருங்காயம் – 1/2 ஸ்பூன் சேர்த்து அடுப்பை அணைத்துவிடுங்கள்.
இந்த எண்ணெய் சூட்டிலேயே சீரகம் – 1/2 ஸ்பூன், மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன், போட்டு பொரிய விட்டு, அதன் பின்பு மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் கருவேப்பிலை விழுதை கடாயில் இருக்கும் எண்ணெய் தாளிப்பில் ஊற்றி விட்டு அதன் பின்பு அடுப்பை மீண்டும் பற்ற வைத்து நன்றாக கலந்து விடுங்கள்.
இப்போது இந்தப் தொக்கிற்க்கு தேவையான அளவு – உப்பு, வெல்லம் – 1 ஸ்பூன் சேர்த்து மீண்டும் தொக்கை கைவிடாமல் கலந்துவிட்டு கொண்டே இருக்க வேண்டும். இந்தத் தொகையானது சிவந்து உருண்டி திரண்டு நாம் ஊற்றிய எண்ணெய் எல்லாம் பிரிந்து வரும் போது அடுப்பை அணைத்து விடலாம். இந்த கருவேப்பிலை தொகை சூடு நன்றாக ஆறிய பின்பு ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து பிரிட்ஜில் வைத்தால் 15 நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.
இதுவே இந்த தொக்கை குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு கொடுக்க வேண்டும் என்றால் மேலே சொன்ன அளவுக்கு 15 பல் தோல் உரித்த பூண்டு பற்கள் தேவைப்படும். எண்ணெயில் கடுகு உளுந்து பொருட்களை போட்டு தாளிக்கின்றோம் அல்லவா, அப்போது இந்த பூண்டுகளையும் போட்டு லேசாக சிவக்க வைத்து தாளித்துக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. சாதாரணமாக சாப்பிடுபவர்களுக்கு பூண்டு பிடிக்கும் என்றாலும் பூண்டை நாம் சேர்த்துக் கொள்ளலாம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. உங்களுக்கு பிடித்திருந்தால் மிஸ் பண்ணாம இந்தத் தொக்கு ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.