- Advertisement -

கஷ்டம் தீர்க்கும் பச்சை கற்பூர பரிகாரம்

- Advertisement -

வாழ்க்கையில் நான் படாத கஷ்டமே இல்லை, கஷ்டம் மட்டும்தான் என் வாழ்க்கையை பின்தொடர்கிறது என்பவர்கள் எல்லோருக்கும் மிக மிகக் குறைந்த செலவில், பச்சை கற்பூரத்தை வைத்து செய்யக்கூடிய எளிமையான பரிகாரங்களை பற்றி தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ள போகின்றோம்.

குடும்பத்தில் குழப்பம் இருக்கிறதா, செல்லும் காரியம் தடைபடுகிறதா, பணக்கஷ்டம் இருக்கிறதா, கணவன் மனைவிக்குள் சண்டை இருக்கிறதா, உடனடியாக பச்சை கற்பூரத்தை வைத்து இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள். உங்கள் பிரச்சனைகள் உடனடியாக விலகி விடும்.

- Advertisement -

பச்சைக் கற்பூரம் பரிகாரம்

குடும்பத்தில் சண்டை சச்சரவு, வீட்டிற்குள் கெட்ட சக்தி தங்கி இருப்பதாக உணர்கின்றோம். வீட்டிற்குள் வந்தாலே மன நிம்மதி இல்லை, இரவு நல்ல தூக்கம் இல்லை என்ன செய்வது? ஒரு பித்தளை சொம்பு, செம்பு சொம்பு எது வேண்டும் என்றாலும் எடுத்துக் கொள்ளுங்கள். எதுவுமே இல்லையா, சில்வர் பாத்திரம், அதில் நிரம்ப தண்ணீரை ஊற்றி இரண்டு மூன்று பச்சை கற்பூர துண்டுகளை நசுக்கி அதில் போட்டு, ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியை போட்டு, இரவே இந்த தண்ணீரை தயார் செய்து, வெட்ட வெளியான இடத்தில் வைத்து விடுங்கள்.

மொட்டை மாடியில் வைத்தாலும் சரி. மறுநாள் காலை எழுந்து இந்த தண்ணீரை வாசல் தெளிக்கும் நீரோடு கலந்து, வாசல் தெளித்து விட வேண்டும். இந்த தண்ணீர் தெளிக்கும் பரிகாரத்தை தொடர்ந்து 48 நாள் செய்து வாருங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் நெகட்டிவ் எனர்ஜி அத்தனையும் விலகும். குடும்பம் சந்தோஷம் அடையும்.

- Advertisement -

கணவன் மனைவிக்குள் சண்டையா. நீங்கள் தூங்குகின்ற அறையில் ஒரு சின்ன கிண்ணத்தில் பச்சை கற்பூரத்தை தூள் செய்து போட்டு விடுங்கள். இந்த நறுமணம் கணவன் மனைவிக்குள் இருக்கக்கூடிய சண்டையை சரி செய்து விடும். இது முற்றிலும் உண்மை. இந்த பச்சை கற்பூரத்தில் இருந்து வெளிவரக்கூடிய வாசம் நம் மன அழுத்தத்தை குறைத்து சந்தோஷத்தை வெளிப்படுத்தக்கூடியது. தேவை என்றால் நீங்கள் இதை முயற்சி செய்து பார்க்கலாம்.

வீட்டில் இருந்து வெளியே சென்றால் நிம்மதி இல்லை. செல்லக்கூடிய காரியத்தில் தடை என்ன செய்வது. பச்சைக் கற்பூரத்தை கொஞ்சமாக எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டு, முக்கியமான வேலைகளுக்கு சென்றால் உங்களுடைய காரியத்தடை சரியாகும். பச்சைக் கற்பூரத்தை அப்படியே எடுத்து நெற்றியில் வைத்தால் ஒட்டாது.

- Advertisement -

அதை நுணுக்கி விபூதியோடு கலந்தோ அல்லது குங்குமத்தோடு கலந்து நெற்றியில் வைத்துக் கொள்ளலாம். இல்லை அந்த பச்சை கற்பூரம் எடுத்து கொஞ்சம் உடம்பின் மேல் பூசிக்கொண்டு சென்றாலும், செல்லும் காரியம் தடை படாமல் நடக்கும். இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு. நம்பிக்கையோடு செய்கிறவங்களுக்கு நிச்சயம் நல்லது நடக்கும்.

வறுமை, பணகஷ்டம், கடன் தொல்லை, இதில் சிக்கிய என் வாழ்க்கை சின்னாபின்னம் ஆகிறது. நான் என்ன செய்ய வேண்டும். ஒரு சின்ன பச்சை நிற துணியில் 2 ஏலக்காய், 2 துண்டு வெட்டிவேர், 2 துண்டு பச்சை கற்பூரத்தை போட்டு முடிச்சாக கட்டி பணம் வைக்கும் பட்டியில் வையுங்கள். பீரோவில் வையுங்கள். உங்கள் பண பிரச்சனை உடனடியாக தீரும்.

இதையும் படிக்கலாமே: எல்லா நன்மையும் பெற ஹனுமன் வழிபாடு

48 நாட்களுக்கு ஒரு முறை இந்த பச்சை துணியில் இருக்கும் பொருட்களை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும், நல்லது நினைப்பவர்களுக்கு நல்லது மட்டுமே நடக்கும் நம்பிக்கையோடு பரிகாரம் செய்பவர்களுக்கு மேலும் மேலும் நல்லது நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -