- Advertisement -
அழகு குறிப்புகள் | Beauty tips in Tamil

தலைமுடி ஆரோக்கியத்தை பேணிக்காக்கும் கற்றாழை எண்ணெய்

- Advertisement -

தலைமுடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுபவர்களும், தலையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தையும் நீக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் பல வகைகளில் தங்களின் தலைமுடியை பராமரிப்பார்கள். இதில் சிலர் இயற்கை முறையை கையாளுவார்கள். ஒரு சிலர் கெமிக்கல் நிறைந்த பொருட்களை கையாளுவார்கள். இயற்கை முறையில் கையாளுவது தான் மிகவும் சிறப்புக்குரியது. தலைமுடியை ஆரோக்கியமாக்குவதற்கு காலதாமதம் ஏற்பட்டாலும் அது நிரந்தரமான ஆரோக்கியமாகவே திகழும். இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்த கற்றாழையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

தலைமுடியில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் அனைத்தையும் நீக்கி தலைமுடியை ஆரோக்கியமாக வளரச் செய்யக்கூடிய ஒரு அற்புதமான பொருளாக தான் கற்றாழை திகழ்கிறது. இதை குமரி என்றும் கூறுவோம். இது தலைமுடிக்கு மட்டும் அல்லாமல் தலை முதல் பாதம் வரை இருக்கக்கூடிய அனைத்திற்கும் மிகவும் சிறந்ததாக திகழ்கிறது. இதை யார் முறையாக பயன்படுத்துகிறார்களோ அவர்களுக்கு வயதாகாமல் என்றுமே இளமையாக இருப்பார்கள் என்பதால் தான் இதற்கு குமரி என்று பெயரே வந்தது. இவ்வளவு அற்புதம் நிறைந்த இந்த கற்றாழையை வைத்து தலைமுடி ஆரோக்கியத்தை பேணிக்காக்கும் முறையைப் பற்றி பார்ப்போம்.

- Advertisement -

முதலில் ஒரு கற்றாழை மடலை எடுத்துக் கொள்ள வேண்டும். இதை எடுத்து அரை மணி நேரம் அப்படியே வைத்து விட வேண்டும். இதில் இருந்து ஒரு மஞ்சள் நிறத்தில் திரவம் வெளியேறும். இந்த திரவம் முற்றிலும் வடிந்த பிறகு இதன் ஓரங்களில் இருக்கும் முட்களை நீக்கிவிட்டு சிறிது சிறிதாக நறுக்க வேண்டும். நறுக்கிய இந்த கற்றாழையை ஒரு கிண்ணத்தில் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவ வேண்டும். இப்படி ஒன்பது முறை தண்ணீரை மாற்றி மாற்றி கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது இந்த சுத்தம் செய்த கற்றாழையை இடிக்கல்லில் சேர்த்து நன்றாக இடித்துக் கொள்ள வேண்டும். இடித்த இந்த விழுது குறைந்தது 4 டீஸ்பூன் அளவு இருக்க வேண்டும். இப்பொழுது ஒரு இரும்பு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து அதில் நான்கு டேபிள் ஸ்பூன் அளவிற்கு சுத்தமான தேங்காய் எண்ணெயை ஊற்ற வேண்டும். பிறகு நாம் இடித்து வைத்திருக்கும் கற்றாழையில் இருந்து நான்கு டீ ஸ்பூன் அளவிற்கு எடுத்து அந்த எண்ணையில் சேர்க்க வேண்டும்.

- Advertisement -

குறைந்த தீயில் 10 நிமிடம் இந்த எண்ணெய் அடுப்பிலேயே இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் பொழுது நாம் ஒரு சிறிய கரண்டியை வைத்து இந்த கற்றாழை நன்றாக எண்ணெயில் வேகும் அளவிற்கு கிளறி விட வேண்டும். பத்து நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிட்டு எண்ணையை ஆற வைத்து விட வேண்டும். ஆரிய இந்த எண்ணெயை வடிகட்டி ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்து சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை இரவில் நன்றாக தலையில் தடவி விட்டு மறுநாள் காலையில் எழுந்து தலைக்கு குளித்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: முடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளர எண்ணெய்

இந்த முறையில் கற்றாழை எண்ணெயை நாம் தயார் செய்து பயன்படுத்தும் பொழுது நம் தலைமுடியில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் நீங்கி தலைமுடி ஆரோக்கியமாக திகழும்.

- Advertisement -