
வாஸ்து படி சில விஷயங்களை சில திசைகளில் தான் வைக்க வேண்டும் என்பது நியதி! அப்படி சரியான திசையில் அமைக்கப்படாவிட்டால், அவை எதிர்மறை ஆற்றல்களை வெளியிடும் என்பது வாஸ்துவினுடைய நம்பிக்கையாக இருக்கிறது. அந்த வகையில் கற்றாழை செடியை வீட்டில் எந்த திசையில் வைத்தால் எதிர்மறை ஆற்றல் பெருகும்? என்பதை இந்த வாஸ்து சார்ந்த பதிவு நமக்கு விளக்க இருக்கிறது, வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.
வாஸ்துவின் படி பொதுவாகவே முட்செடிகளை வீட்டில் வளர்ப்பது நல்லதல்ல, இது குடும்பத்திற்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறது. குறிப்பாக கள்ளிச்செடி போன்ற விஷம் நிறைந்த முட்செடிகள் வீட்டில் இருக்கவே கூடாது. ஆனால் பலரும் அதை அழகுக்காக இன்று பயன்படுத்துகின்றனர். கற்றாழை மகத்துவம் நிறைந்த மூலிகை செடி ஆகும். கற்றாழையின் பயன்கள் எண்ணற்றவை, எனினும் கற்றாழை செடியை வாஸ்துபடி கிழக்கு திசையில் வைக்காதீர்கள். கிழக்கு திசை எப்பொழுதும் நேர்மறை ஆற்றல்களை பெருக செய்யக் கூடியவை, அதனால் தான் கிழக்கு திசையில் பூஜை அறையை நாம் அமைத்து வழிபடுகின்றோம்.
இந்த திசையில் முட்செடிகளான எந்த செடிகளையும் வைக்கக் கூடாது, அதில் கற்றாழையும் அடக்கம். வீட்டிற்குள் வளர்க்கப்படும் செடிகளில் கற்றாழையும் ஒரு வகையான செடியாகும். வீட்டிற்குள் முட்செடிகளை எழுந்தவுடன் பார்க்கும்படி வைத்திருக்கக் கூடாது என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. குறிப்பாக படுக்கையறையில் முட்செடிகள் வைப்பது நல்லதே அல்ல. எழுந்ததும் முட்செடிகளை பார்க்கும்படி நீங்கள் அமைத்திருந்தால், அது குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே தேவையற்ற சண்டை சச்சரவுகளுக்கு வழிவகுக்கும்.
கற்றாழை செடி வீட்டில் கண்டிப்பாக வளர்க்க வேண்டிய ஒரு அற்புதமான செடி. இது எல்லாம் சீதோஷ்ண நிலைகளிலும் வளரக்கூடியது. இது சரும அழகு, கேச அழகு சார்ந்த பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடியது. மேலும் தெய்வீக தன்மையும் கொண்டுள்ளது, எனினும் முட்கள் நிறைந்துள்ள இந்த மாதிரியான செடிகளை கிழக்கு திசையில் வைத்து வளர்க்காதீர்கள், இது குடும்பத்திற்கு நல்லதல்ல! மற்ற எந்த திசைகளிலும் நீங்கள் தாராளமாக வைத்து வளர்க்கலாம்.
உங்கள் வீட்டில் கிழக்கு திசையில் கற்றாழை இருந்தால், அதை உடனே மாற்றி அமைத்து விடுவது நல்லது. கற்றாழை பூ பூத்தால் குடும்பத்திற்கு அதிர்ஷ்டம் வரும். பூக்கும் கற்றாழையாக பார்த்து தேர்ந்தெடுத்து வாங்கி வளர்த்து வருவதும், அதிர்ஷ்டத்தை பெருக செய்யும். கற்றாழை பூக்கள் பணவரவை ஈர்த்து தரக்கூடியது. எல்லா கற்றாழையும் பூக்களை பூப்பதில்லை. எனவே பூக்கள் பூத்தால், அந்த கற்றாழை செடியை பத்திரமாக பாதுகாத்து வளர்த்து வாருங்கள். கற்றாழை செடியுடன் மற்ற செடிகளை சேர்த்து ஒன்றாக ஒரே தொட்டியில் வைத்து வளர்க்கக் கூடாது. வேறு செடிகளை கற்றாழையுடன் வைத்திருந்தால் அதை மாற்றி அமையுங்கள்.
இதையும் படிக்கலாமே:
வேலை கிடைக்க ஞாயிற்றுக்கிழமை வழிபாடு
கற்றாழை கண் திருஷ்டியை போக்க வல்லது, எனவே கற்றாழை செடியை வீட்டின் நுழைவு வாயிலில் இருபுறமும் நீங்கள் வைக்கலாம். பெரிய பெரிய கற்றாழை மடல்களாக இருக்கக்கூடிய செடிகளை வீட்டில் வைப்பது மிகவும் நல்லது. கற்றாழையுடன் வேப்பிலை சேர்த்து சருமம் மற்றும் கூந்தலுக்கு பயன்படுத்தும் பொழுது, தீராத எல்லா பிரச்சனைகளும் தீரும். மேலும் கற்றாழையை வீட்டில் நுழைவு வாயிலில் யாருடைய தலையிலும் இடிக்காதபடி மேற்புறமாக கட்டி வைத்தால் சகல விதமான கண் திருஷ்டிகளும், தோஷங்களும் போகும். இத்தகைய அளப்பரிய மகத்துவம் வாய்ந்த கற்றாழையை சரியான திசையில் வைத்து வளர்த்து பயன்பெறலாமே!