நிறைய பேர் படித்த படிப்புக்கு சம்பந்தம் இல்லாமல் வேலை செய்வார்கள். சில பேருக்கு வேலையே கிடைக்காது. சில பேர் இஷ்டம் இல்லாமல் வேலை செய்வார்கள். சம்பளம் இல்லாமல் வீட்டில் திட்டு வாங்கிக் கொண்டு தண்டசோறு என்ற பட்டத்தையும் பெற்று, சோம்பேறி என்ற பட்டத்தையும் பெற்று வாழ்வதற்கு படாத பாடு படுவார்கள். இப்படி எல்லாம் வார்த்தைகளை சொல்லலாமா.
இருந்தாலும் இந்த வார்த்தைகளை வாங்கிக் கொண்டு வாழ்வில் கஷ்டப்படுபவர்களுக்கு இந்த பதிவு ஒரு நல்லதை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான், புரியும் படி சொல்லப்பட்டுள்ளது. உங்களுக்கு அவ்வளவு கஷ்டம். வேலை இல்லாததால் நீங்கள் கஷ்டப்படுபவர்களாக இருந்தால், நாளைய தினம் இந்த வழிபாட்டை நீங்கள் செய்து பாருங்கள்.
நாளை வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை என்று மட்டும் கிடையாது. வேலை கிடைக்கும் வரை வரக்கூடிய ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இந்த வழிபாட்டை விடாமல் செய்தால், உங்கள் தகுதிக்கு ஏற்ற, வேலை, படிப்புக்கு ஏற்ற வேலை, கைநிறைய சம்பளத்தோடு, மன நிறைவான வேலை கிடைக்கும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது.
நல்ல வேலை கிடைக்க
ஞாயிற்றுக்கிழமை காலை 6:00 மணிக்கு சூரிய உதயம் ஆகும் சமயத்தில், அந்த சூரியனை பார்த்து சூரிய நமஸ்காரம் கட்டாயம் செய்ய வேண்டும். பிறகு வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு செல்லுங்கள். அந்த சிவன் கோவிலில் நவகிரக சன்னிதானமும் கட்டாயம் இருக்கும். பழமையான சிவன் கோவிலில் இருந்தால், நவகிரக சன்னிதானம் இல்லாமல் இருக்காது.
முதலில் சிவன் கோவிலுக்கு போயாச்சு. அங்கு இருக்கும் விநாயகரை முதலில் வணங்க வேண்டும். முழு முதல் கடவுள் அவரை வணங்கி விட்டால், நீங்கள் தொடங்கும் வழிபாட்டு காரியங்களில் எந்த தடையும் வராது. அதன் பிறகு அங்கு இருக்கும் சூரிய பகவானுக்கு 5 தீபங்கள் ஏற்ற வேண்டும். நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். நவகிரக சன்னிதானத்தில் இருக்கும் சூரிய பகவான்.
முடிந்தால் ஒரு வாழை இலையில் கோதுமையை பரப்பி, அதன் மேலே 5 தீபங்கள் ஏற்றுங்கள். அதெல்லாம் முடியாது என்றால், வெறும் மண் நகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, உங்கள் பெயரைச் சொல்லி சூரிய பகவானுக்கு ஒரு அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு தான் சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும்.
சிவபெருமானை தரிசனம் செய்து அங்கேயும் உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். சிவபெருமானுக்கு உங்களால் முடிந்த பொருட்களை வாங்கி செல்லலாம். வெற்றிலை பாக்கு பூ பழம் தேங்காய் வில்வ இலை இப்படி என்ன பொருள் வாங்கி செல்ல முடியுமோ, வாங்கிக் கொண்டு போய் பக்தியோடு அந்த சிவபெருமானுக்கு கொடுத்துவிட்டு வீட்டிற்கு வரவேண்டும். இவ்வளவுதான் வழிபாட்டு முறை.
சூரியனை வழிபாடு செய்யும்போதும் நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை வைக்கணும். சிவபெருமானை வழிபாடு செய்யும்போதும் உள்ளம் உருகி நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை வைக்கணும்.
5 ஞாயிற்றுக்கிழமை விளக்கு போடுவதாகவும், 11 ஞாயிற்றுக்கிழமை விளக்கு போடுவதாகவும், முதல் வார ஞாயிற்றுக்கிழமை ஒரு சங்கல்பம், நீங்களே உங்கள் மனதிற்குள் எடுத்துக் கொள்ளலாம். உங்களால் எத்தனை ஞாயிறு முடியுமோ அத்தனை ஞாயிற்றுக்கிழமை இறைவனிடம் சொல்லிவிடுங்கள். ஆனால் சொன்ன வாக்கை காப்பாற்ற வேண்டும். முடியாது என்பவர்கள் வேண்டுதல் வைக்க வேண்டாம்.
இதையும் படிக்கலாமே: கடுமையான கடன் தீர பிரதோஷ வழிபாடு
இப்படி ஒரு ஞாயிற்றுக்கிழமை விளக்கு போட போகும்போது முடிந்தால் 1 கிலோ கோதுமை வாங்கி அந்த நவகிரக சன்னிதானத்தில் இருக்கும் பிராமணருக்கோ, சிவன் கோவிலில் இருக்கும் பிராமணருக்கோ தானம் கொடுங்கள். ரொம்ப ரொம்ப சிறப்பு. தோஷங்கள் எல்லாம் விலகி நல்ல வேலை கிடைக்க இந்த எளிமையான வழிபாடு நிச்சயம் வழிவகுக்கும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை தேவைப்படுபவர்கள் இந்த பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறவும்.