
இன்றைய நாளில் மிகவும் பிரபலமாக இருக்கக்கூடிய சித்தர், இந்த கேளக்கிய சித்தர். கூகுளில் தேடிப் பார்த்தால் இவருடைய பெயர் உங்களுக்கு கிடைக்காது. ஆனால் நிறைய பேர் வாழ்க்கையில் இவர் அற்புதத்தை நடத்தியதாக சொல்லப்படுகிறது. கேளக்கியர் மந்திரத்தை தொடர்ந்து 3 நாட்கள் சொன்னால், உங்களுடைய பிரச்சனை மூன்று நாட்களில் தீரும் என்பது பரிகாரத்தின் நம்பிக்கையாக இருக்கிறது.
தினமும் இந்த கேளக்கியர் சித்தர் மந்திரத்தை எந்த நேரத்தில் சொல்லுவது, கேளக்கியர் சித்தரின் மந்திரம் தான் என்ன, சித்தர் வருவதை நம்மால் உணர முடியுமா, பல சுவாரசியமான தகவல்களை ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
இன்று இணையதளத்தில் சில வீடியோக்கள் மூலம் பிரபலமாக இருப்பவர் தான் இந்த கேளக்கியர் சித்தர். இந்த சித்தரை மனதார நினைத்து அழைத்தால் கருவண்டு ரூபத்திலும், வெள்ளை பட்டாம்பூச்சி ரூபத்திலும் அவர் நமக்கு காட்சி அளிப்பதாக சொல்லப்பட்டுள்ளது. ஒரு பிரபல ஜோதிடரின் மூலமாக இந்த தகவல் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
இந்த கேளக்கியர் நம்முடைய வாழ்க்கையிலும் நன்மையை செய்து கொடுப்பாரா. பல ஆயிரக்கணக்கான பேர் இந்த கேளக்கியர் மந்திரத்தை உச்சரித்து பலன் பெற்றதாக கமெண்டில் பதிவு செய்துள்ளார்கள். நமக்கும் நன்மை நடக்குமா. சந்தேகத்தோடு வேண்டாம் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பார்ப்போமே.
தினமும் அதிகாலை வேளையில் எழுந்து கொள்ளுங்கள். பிரம்ம முகூர்த்த நேரமான காலை 4:30 மணிக்கு மந்திரத்தை சொல்ல துவங்க வேண்டும். காலை எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு வரவேற்பு அறையில் அமர்ந்து கொள்ளுங்கள். உங்கள் முன்பு ஒரு மண் அகல் விளக்கில் நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து விடவும். இந்த விளக்குக்கு பக்கத்தில் 1 டம்ளர் தண்ணீர் நிரம்ப வைத்து விடுங்கள்.
கேலக்கியரை மனதார நினைத்து ‘ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ !’ என்ற இந்த மந்திரத்தை தினமும் 1008 முறை உச்சரியுங்கள். சின்ன கோரிக்கையாக சித்தரிடம் வையுங்கள். அந்த கோரிக்கை மூன்றே நாட்களில் நிறைவேறி விட்டால், இந்த சித்தரின் ஆசி உங்களுக்கு கிடைத்துவிட்டதாக அர்த்தம். அதைப்போல நீங்கள் மந்திரத்தை உச்சரித்துவிட்டு அந்த தண்ணீரை பார்க்கும்போது, தண்ணீர் குறைந்து இருந்தாலும் சித்தர் உங்களுடைய வேண்டுதலை ஏற்றுக் கொண்டார் என்றுதான் அர்த்தம்.
மந்திரத்தை சொல்லிவிட்டு அந்த தண்ணீரை நீங்கள் குடித்து விடுங்கள். தினமும் உங்களால் 1008 முறை இந்த மந்திரத்தை உச்சரிக்க முடியவில்லை என்றால், 108 முறை சொல்லுங்கள். 27 நாள் உங்களுடைய வழிபாட்டை தொடருங்கள். நீங்கள் நினைத்தது நிச்சயம் நடக்கும்.
மேலே சொன்ன இந்த விஷயங்கள் எல்லாமே பிரபல ஜோதிடர் ஒருவரால் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள்தான். அதைத்தான் இன்று உங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கின்றோம். உங்களுக்கும் இந்த பதிவின் மீது நம்பிக்கை இருந்தால், சித்தர்களின் மீது நம்பிக்கை இருந்தால் இந்த முயற்சியை மேற்கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே: கேதார கௌரி விரதம்
நல்லது நடக்கும் பட்சத்தில் உங்கள் பிரச்சனைகள் தீரும். நல்லது நடக்காத பட்சத்தில் எந்த ஒரு பின் விளைவுகளும் வரப்போவது கிடையாது. முயற்சி செய்து பாருங்கள். நம்பிக்கை இருந்தால் நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.