
முழு முதல் கடவுளாக திகழக்கூடியவர் விநாயகப் பெருமான் என்று நம் அனைவருக்குமே தெரியும். விநாயகப் பெருமானை வணங்கி விட்டு நாம் செய்யக்கூடிய எந்த ஒரு காரியமும் எந்தவித தடைகளும் இல்லாமல் வெற்றி அடையும் என்றும் அதனால் முதலில் விநாயகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும் என்றும் நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானிடம் நாம் எந்த முறையில் வழிபாடு செய்தால் நாம் கேட்ட வரங்கள் அனைத்தும் கிடைக்கும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வேண்டுதல் இருக்கும். அந்த வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக அவர்களின் இஷ்ட தெய்வத்தை பலரும் வழிபாடு செய்வார்கள். இன்னும் சிலர் குலதெய்வ வழிபாட்டில் ஈடுபடுவார்கள். அந்த வகையில் விநாயகப் பெருமானிடம் கேட்ட வரம் கிடைப்பதற்கு பலவிதமான வழிபாட்டு முறைகள் இருந்தாலும் இந்த கொப்பரை தேங்காய் தீபத்தை ஏற்றி வைத்து நாம் வழிபாடு செய்தோம் என்றால் அதற்கு விரைவிலேயே பலன் கிடைக்கும். அந்த தீபத்தை எப்படி ஏற்றுவது என்று தெரிந்து கொள்வோம்.
திங்கட்கிழமை அன்று வரக்கூடிய ராகு காலமான காலை 7:30 மணியிலிருந்து 9 மணிக்குள் அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அதற்கு முதல் நாளில் முழு கொப்பரை தேங்காயாக ஒரு கொப்பரை தேங்காயை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஆலயத்திற்கு செல்லும் பொழுது ஒரு சிறிய ஒரு அகல் விளக்கின் மேல் இந்த கொப்பரை தேங்காயை வைத்து அந்த கொப்பரை தேங்காய்க்கு மேல் ஒரு சிறிய ஓட்டையை போட்டுக் கொள்ளுங்கள்.
அந்த ஓட்டைக்குள் தேங்காய் எண்ணெயை ஊற்றி பஞ்சுத்திரி போட்டுக் கொள்ள வேண்டும். பிறகு அந்த தீபத்தை ஏற்றி வைத்து விநாயகரின் அகவலை கூற வேண்டும் அல்லது விநாயகரின் காயத்ரி மந்திரத்தை 108 முறை கூறவேண்டும். அவ்வாறு விநாயகரின் காயத்ரி மந்திரமும் தெரியவில்லை என்பவர்கள் “ஓம் கம் கணபதியே போற்றி” என்னும் மந்திரத்தை கூட 108 முறை கூறலாம். பிறகு விநாயகப் பெருமானுக்கு கொழுக்கட்டையை நெய்வேத்தியமாக வைத்து படைத்து அவரை 21 முறை வலம் வர வேண்டும்.
பிறகு உங்களுடைய வேண்டுதல் என்னவோ அந்த வேண்டுதலை கூறி அவரை வழிபாடு செய்து விட்டு மூன்று முறை தோப்புக்கரணமும் மூன்று முறை தலையில் கொட்டிக் கொண்டும் வழிப்பாட்டை நிறைவு செய்ய வேண்டும். இப்படி தொடர்ச்சியாக 21 திங்கட்கிழமை நாம் விநாயகர் பெருமானுக்கு இந்த தீபத்தை ஏற்றி வழிபாடு செய்வதன் மூலம் நாம் என்னென்ன வரங்களை கேட்டு விநாயகரை வணங்கினோமோ அந்த வரங்கள் கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே:பணம் தரும் மந்திர வார்த்தை
எளிமையான தெய்வமான விநாயகப் பெருமானுக்கு எளிய முறையில் இப்படி தீபம் ஏற்றி வழிபாடு செய்ய நம்முடைய வேண்டுதல் எளிதில் நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.