
கலியுக தெய்வங்களில் ஒருவராக திகழக்கூடியவர்தான் முருகப்பெருமான். முருகப்பெருமானை நாம் எதற்கெல்லாம் வழிபடலாம் என்று கேட்டால் எதற்கு வேண்டுமானாலும் வழிபடலாம் என்று தான் கூற வேண்டும். முருகப்பெருமானுக்கு என்று பல மந்திரங்கள் இருக்கின்றன. பல கவசங்கள் இருக்கின்றன. இவை அனைத்தையும் பாராயணம் செய்தால் தான் முருகனின் அருள் கிடைக்குமா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை.
முருகா என்று மனமுருக கூப்பிட்டாலே நாம் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரக்கூடியவராக முருகப்பெருமான் திகழ்வார். அப்படிப்பட்ட முருகப்பெருமானை எந்த முறையில் நாம் வழிபடுவதன் மூலம் நாம் வேண்டிய வரத்தோடு மற்ற பிற வரங்களையும் வாரி வழங்குவார் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
முருகப்பெருமானை வழிபட்ட பலர் சித்தர்களாக மாறி இருக்கிறார்கள். முருகப் பெருமானுக்கும் சித்தர்களுக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல தொடர்புகள் இருக்கின்றன. அப்படி முருகப்பெருமானை வழிபட்டு அவரின் மீது தீராத அன்பு கொண்டு பல பாடல்களை எழுதியவர்களில் ஒருவர்தான் பாம்பன் சுவாமிகள். முருகப்பெருமானின் அருள் கிடைப்பதற்காக பாம்பன் சுவாமிகள் என்ன செய்தார் என்று தெரியுமா?
அவர் செய்தது ஒன்றே ஒன்றுதான் கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்தது. கந்த சஷ்டி கவசத்தை அவர் ஒரு நாளைக்கு 36 முறை பாராயணம் செய்து யோகநிஷத்துக்கு உள்ளானார் என்று புராணங்கள் கூறுகின்றது. நம்மால் யோக நிலையை அடைய முடியாது என்றாலும் நாம் வேண்டிய வரத்தை பெற முடியும் அல்லவா? அதற்கு கந்த சஷ்டி கவசத்தை எப்படி படிப்பது என்று தெரிந்து கொள்வோம்.
கந்த சஷ்டி கவசத்தை காலையிலும் மாலையிலும் முழுமனதோடு படிக்க வேண்டும் என்று பலரும் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். காலையில் 5:30 மணிக்கு முன்பாகவே முருகப்பெருமானுக்கு என்று தனியாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்து அமர்ந்து முருகப்பெருமானை மனதார நினைத்து நிறுத்தி நிதானத்துடன் கந்த சஷ்டி கவசத்தை படிக்க வேண்டும்.
அதேபோல் மாலை 5:30 மணிக்கு மேல் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து கந்த சஷ்டி கவசத்தை நிறுத்தி நிதானமாக படிக்க வேண்டும். இதோடு மட்டுமல்லாமல் உச்சிக்கால பொழுது என்று கூறக்கூடிய 11:30 மணியிலிருந்து 12 மணிக்குள் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து நாம் கந்த சஷ்டி கவசத்தை படிக்க வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று முறை என்ற வீதத்தில் இந்த நேரங்களில் தொடர்ந்து 48 நாட்கள் யார் ஒருவர் முருகப்பெருமானை மனதார நினைத்து கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்கிறாரோ அவர் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.
வேண்டிய வரங்கள் மட்டும்தான் கிடைக்குமா? அதை விட அவர் வேண்டாத அவர் வாழ்க்கையில் நடக்கக்கூடிய அனைத்து விதமான நன்மைகளும் நடைபெறும். அவை அனைத்தையும் வாரிக் கொடுக்கும் வள்ளலாக முருகப்பெருமான் திகழ்வார். இந்த வழிபாட்டை செய்யும் பொழுது முருகப்பெருமானுக்கு சிவப்பு நிற மலர்களை சாற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆலயம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
வீட்டிலேயே இந்த முறையில் முருகப் பெருமானின் படத்திற்கு முன்பாக அமர்ந்து கந்த சஷ்டி கவசத்தை மட்டும் படித்தால் போதும். பெண்களால் தொடர்ந்து 48 நாட்கள் படிக்க முடியாது என்ற ஒரு கேள்வி வரும். இயற்கை இடையூறுகளை தவிர்த்து விட்டு மீதமிருக்கும் நாட்களை கணக்கில் கொண்டு 48 நாட்கள் படிக்க அனைத்து விதமான செல்வங்களையும் பெற்று சிறப்பான வாழ்க்கையை வாழ முடியும்.
இதையும் படிக்கலாமே: செல்வம் வீட்டில் நிரந்தரமாக தங்க விநாயகர் வழிபாடு
மிகவும் எளிமையான இந்த முருக வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு அவர்கள் வேண்டிய வரங்களோடு மற்ற பிற வரங்களும் கிடைத்து சீரும் சிறப்புடன் நலமாக வாழ்வார்கள்.