
விநாயகரை வழிபாடு செய்வதற்கு இன்று என்ன அப்படி ஒரு விசேஷ நாள். எல்லோருக்கும் தெரியும் இன்று மாலை 4:00 மணி வரை சங்கடஹர சதுர்த்தி இருக்கிறது என்பது. இதையும் தாண்டி இன்றைய தினத்தில் ஒரு முக்கியமான விஷயம் உள்ளது. அது என்ன என்பதைப் பற்றியும், தீரா துன்பத்திலிருந்து உடனடியாக விடுபட இன்றைய நாளில் நாம் செய்ய வேண்டிய ஒரு எளிமையான விநாயகர் வழிபாட்டை பற்றியும் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
இப்போது மகாளய பட்சம் நடந்து கொண்டிருக்கிறது. இன்று சங்கடஹர சதுர்த்தி திதி இருக்கிறது. கூடவே இன்று மாலை அஸ்வினி நட்சத்திரமும் பிறக்கவிருக்கிறது. இந்த நட்சத்திரம் கேதுவுடைய நட்சத்திரம். உங்கள் வாழ்க்கையில் கேதுவால் தடைகள் உள்ளது. குடும்பத்தில் பிரச்சனை கணவன் மனைவி ஒற்றுமை இல்லை.
கடன் சுமை, பண பற்றாக்குறை இருக்கிறது என்னும் பட்சத்தில் அஸ்வினி நட்சத்திரத்தில் விநாயகர் வழிபாடு செய்வது அதிசிறப்பு. சரி, பிரச்சனை உள்ளவர்கள் மட்டும்தான் இந்த வழிபாட்டை செய்ய வேண்டுமா? கிடையாது, அஸ்வினி நட்சத்திரத்தன்று விநாயகரை யாரெல்லாம் வழிபாடு செய்கிறீர்களோ அவர்களுக்கு எல்லாம் கேது பகவானால் எந்த கெட்டதும் ஏற்படாது. விநாயகரை வழிபாடு செய்பவர்கள், விநாயகர் மீது நம்பிக்கை உள்ளவர்கள் அனைவருமே இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
இன்று மாலை வீட்டின் அருகில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு செல்லுங்கள். 9 மண் அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, பிள்ளையாருக்கு உங்கள் கையால் அருகம்புல் வாங்கி கொடுத்து, ஒரு சிதறு தேங்காய் உடைத்து நீங்கள் என்ன வேண்டிக் கொண்டாலும் அது உடனடியாக நடக்கும்.
உங்களால் முடியும் என்ற பட்சத்தில் உங்கள் கையால் அருகம்புல்லை மாலையாக கட்டி, பிள்ளையாருக்குப் போடுங்கள். பிள்ளையாரை ஒன்பது முறை வலம் வாருங்கள். பிள்ளையாருக்கு ஒன்பது தோப்புக்கரணம் போடுங்க. 9 பிள்ளையார் கொட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே: 11 நாள் ஆஞ்சநேயர் வழிபாடு
கேது பகவானுக்கு அதி தேவதையாக இருப்பது இந்த கணபதி தான். ஆகவே இந்த வழிபாட்டை இன்றைய தினம் யாரும் தவற விட்டுராதீங்க. கேது பகவான் மட்டுமா? நவகிரகங்களில் யார் பிரச்சனை கொடுத்தாலும் உங்களை காப்பாற்ற பிள்ளையார் மட்டும்தான் வருவார். ஆகவே அவர் பாதங்களை கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள். அதற்கு இந்த பிரபஞ்சம் உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பை இன்று கொடுத்திருக்கிறது. இதை நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் அடையலாம்.