- Advertisement -
- Advertisement -

கெட்ட கர்மவானது கழிய வேண்டும் என்றால், நாம் சரணடைய வேண்டிய இடம், சிவன் கோவில், தினம் தோறும் சிவன் கோவிலுக்கு செல்ல வேண்டும். சிவன் கோவிலில் உழவாரப் பணிகளில் ஈடுபட வேண்டும். சிவனுக்காக உங்களை நீங்கள் அர்ப்பணம் செய்து கொள்ள வேண்டும். அதற்காக குடும்பம், வேலை, வியாபாரம், தொழில் இவைகளை கவனிக்க கூடாதா. அப்படியெல்லாம் கிடையாது.

நம்முடைய இல்லற வாழ்க்கையோ அல்லது நாம் செய்யக்கூடிய வேலையையோ விட்டு விட்டு சிவன் கோவிலுக்கு சென்று வழிபாட்டை மேற்கொண்டால், அது நமக்கு இன்னும் கெட்ட கர்மாக்களை சேர்த்து விடும். நம்முடைய பணிகளை எல்லாம் சரியாக முடித்துவிட்டு, சிவன் கோவிலுக்கு என்று கொஞ்சம் நேரத்தை ஒதுக்கி சிவபெருமானுக்கு சேவை செய்யுங்கள். சிவன் கோவிலுக்கு வருபவர்களுக்கு சேவை செய்யுங்கள். நிச்சயம் உங்களுடைய கெட்ட கர்மா குறையும்.

- Advertisement -

கர்மா கழிய சிவன் கோவில் வழிபாடு

இதோடு சேர்த்து இன்னும் ஒரு சில எளிய பரிகாரங்களை இன்று நாம் பார்க்க போகின்றோம். இந்த பரிகாரங்கள், உங்களுடைய கெட்ட கர்மாக்களை உடனடியாக குறைக்கும் வேலையை செய்யும். ஒரு சனிக்கிழமை உங்கள் வீட்டு பக்கத்தில், இருக்கும் சிவன் கோவிலுக்கு அபிஷேகம் செய்ய நல்லெண்ணெய் வாங்கி தானம் கொடுக்க வேண்டும்.

சிவ லிங்கத்திற்கு நல்லெண்ணெய் பூசி அதன் பிறகு தான் அபிஷேகம் செய்வார்கள். அதற்கு பயன்படுத்துவதற்கு தான் இந்த நல்லெண்ணெய் தானம். அப்போது அந்த நல்லெண்ணெய் எத்தனை சுத்தமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் விலை கூடுதலாக இருந்தாலும் மரச்செக்கு நல்லெண்ணெய் வாங்கி அந்த சிவன் கோவில் அர்ச்சகரியிடம், குறிப்பாக இந்த எண்ணெயை லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று தெரிவித்து, எண்ணெயை தானம் செய்து விடுங்கள். அந்த எண்ணெய் அபிஷேகத்தை நீங்களும் காண வேண்டும். அதுதான் முக்கியம்.

- Advertisement -

குடும்பத்தோடு சென்று அபிஷேகத்தை பார்த்து, அலங்காரம் முடிந்தவுடன் அன்றைக்கான நெய்வேத்தியத்தை நீங்கள் கொடுக்க வேண்டும். அதாவது மடப்பள்ளியில் செய்வதாக இருந்தால், பணம் கொடுத்து செய்யச் சொல்லலாம். வாய்ப்பு கிடைத்தால் உங்கள் கையாலே பிரசாதம் செய்தும் எடுத்துச் செல்லலாம். தயிர் சாதம், சாம்பார் சாதம், புளி சாதம், இப்படி ஏதாவது ஒரு நெய்வேத்தியம் வைத்து உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து, அந்த சாப்பாட்டை நீங்களே உங்கள் கையால் அன்னதானமும் செய்து விட வேண்டும்.

கட்டாயம் இந்த வழிபாட்டை செய்யும் போது, அந்த சிவன் கோவிலில் 11 மண் அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 3 வாரம் சனிக்கிழமைகள் இந்த எளிமையான பரிகாரத்தை செய்தாலே போதும். உங்களுடைய கெட்ட கர்மாக்கள் குறையும்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர்க்கும் வேல்மாறல் பாட்டு

ஒரு லிட்டர் சுத்தமான மரச்செக்கு நல்லெண்ணெய் 400 ரூபாய் விற்கிறது. இதெல்லாம் எங்களால் முடியாது என்று கட்டாயம் நினைக்காதீங்க. மூன்று வாரம் செய்ய முடியாதவர்கள், ஒரு வாரம் மட்டுமாவது இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். அடுத்த வாரம் தானாக நல்லெண்ணெயை, உங்கள் கை வாங்கிக் கொண்டு போய் சிவனுக்கு கொடுக்கும். அந்த அளவுக்கு வாழ்க்கையில் நன்மைகள் நடக்கக்கூடிய பரிகாரம் இது. நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -
Published by