- Advertisement -

வீட்டில் கெட்ட சக்திகள் விலக முருகர் பரிகாரம்

- Advertisement -

இன்றளவும், நிறைய பேர் வீடுகளில் மன நிம்மதி இல்லாத சூழ்நிலை இருக்கிறது. வீட்டை விட்டு வெளியே சென்றால் அவர்களுடைய உடல் நிலை, மனநிலை வேறாக இருக்கும். ஆனால் வீட்டிற்குள் நுழைந்த உடன் சண்டை சச்சரவுகள் வரும். இந்த வீடு எனக்கு ராசி இல்லை, ஏதோ ஒரு அமானுஷ்ய சக்திகள் வீட்டில் இருப்பதாக உணர்கின்றோம்.

வெளியில் மாந்திரீகரியிடம், தாந்திரீகரியிடம் சொல்லி பரிகாரங்களும் செய்துவிட்டோம். ஆனால் பலன் இல்லை என்பவர்கள், இன்றைய தினம் முருகப் பெருமானை நினைத்து இந்த ஒரு பொருளைக் கொண்டு போய் நிலை வாசலில் மாட்டி விடுங்கள். நிச்சயம் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் விரைவாக வெளியேற்றப்படும்.

- Advertisement -

கெட்ட சக்திகள் விலக முருகர் பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு கொஞ்சம் வேப்பிலை, கொஞ்சம் மஞ்சள் தண்ணீர், ஒரு எலுமிச்சம்பழம்  உங்களுக்கு தேவை. முதலில் வீட்டை எல்லாம் சுத்தமாக கூட்டி துடைத்து விடுங்கள். பிறகு மாலை 6 மணிக்கு பூஜை அறையில் முருகன் முன்பு ஒரு மண் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். ஒரு சுத்தமான பித்தளை சோம்பில் சுத்தமான தண்ணீர் எடுத்து, அதில் சுத்தமான மஞ்சள் பொடி போட்டு, கரைத்துக் கொள்ளுங்கள். இதில் இரண்டு கொத்து வேப்ப இலையை போட்டுக் கொள்ளுங்கள்.

மஞ்சள் தண்ணீரில் நனைத்து வைத்திருக்கும் வேப்பிலையை எடுத்து பூஜையறையில் முருகனுக்கு முன்பு ஏற்றி வைத்திருக்கும் மண் அகல் விளக்கு தீபச்சுடரை முருகனாக பாவித்து, அந்த விளக்கை அந்த வேப்ப இலையை கொண்டு மூன்று முறை சுற்ற வேண்டும். இப்படி வேப்பிலையை சுற்றும் போது ‘ஓம் சரவணபவ’ மந்திரத்தை சொல்லுங்கள்.

- Advertisement -

பிறகு அந்த வேப்பிலையை மஞ்சள் தண்ணீரில் தொட்டு, அந்த மஞ்சள் தண்ணீரை கொண்டு போய் வீட்டின் மூளை முடுக்குகளில் எல்லாம், வேப்பிலையாலே தெளித்து விடவும். பிறகு மஞ்சள் தண்ணீர் தெளிக்க பயன்படுத்திய அந்த அந்த வேப்பிலை கொத்தை அப்படியே கொண்டு வந்து நிலை வாசலில் கட்டி விடுங்கள்.

‘ஓம் சரவணபவ’ மந்திரத்தை சத்தமாக உச்சரிக்கலாம். உங்களுடைய வீட்டில் இந்த மந்திர சத்தம் வெளிவரும் போது, வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் வெளியேறும். மஞ்சள் தண்ணீரை தெளிக்கும்போது முருகப்பெருமானின் ‘ஓம் சரவணபவ’ மந்திரம் உங்கள் வாயால் சொல்லப்பட வேண்டும். பிறகு பூஜை அறையில் வழக்கம் போல உங்களுடைய வீட்டில் எப்படி முருகனுக்கு பூஜை செய்வீர்களோ, அதே போல பூஜை செய்து தீப தூப ஆராதனை காண்பித்து, வழிபாட்டை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

இறுதியாக இன்று இரவு தூங்கச் செல்லும் போது ஒரு எலுமிச்சம் பழத்தை கையில் வைத்துக்கொண்டு ‘ஓம் சரவணபவ’ மந்திரத்தை சொல்லி அந்த பழத்தை இரண்டாக வெட்டி அதன் மேலே குங்குமத்தை தடவி நிலை வாசலில் இரண்டு பக்கத்திலும் வைத்து விட்டு உறங்கச் செல்லுங்கள். இன்று மாலை இந்த பரிகாரத்தை உங்கள் வீட்டில் செய்து ‘ஓம் சரவணபவ’ மந்திரத்தை சொல்லி கந்த சஷ்டி கவசத்தை ஒலிக்க விட்டாலே போதும். வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் ஆனது வெளியேறும்.

இதையும் படிக்கலாமே: சுக்கிர சஷ்டி தினத்தில் பாட வேண்டிய பாடல்

நம்பிக்கையோடு இன்று மாலை இந்த பரிகாரத்தை செய்தால் வீட்டில் நிம்மதியற்ற சூழ்நிலை நீங்கி, மன நிம்மதியான சூழல் உண்டாகும். கண்ணுக்குத் தெரியாத அமானுஷ்ய சக்திகள் வீட்டில் இருந்து வெளியேறும். குடும்பத்தில் நல்லதே நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -