- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

தனம் தானியம் அதிகரிக்க சூட்சம பரிகாரம்

- Advertisement -

பணம் சேர வேண்டும், அதிகளவு பணத்தை சம்பாதிக்க வேண்டும், அதன் மூலம் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்க வேண்டும், மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றுதான் பலரும் பல விதங்களில் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பணத்தை சம்பாதிப்பதற்கு பல வழிகள் இருந்தாலும் அதன் மூலம் நமக்கு வருமானம் என்பது ஏற்பட வேண்டும். ஒரு சிலருக்கு என்னதான் முயற்சி செய்தாலும் வருமானம் என்பது ஏற்படாது. அதையும் மீறி வருமானம் ஏற்பட்டாலும் அது நம் கைவசம் தங்காமல் செலவாகி கொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்கள் செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கு பல வழிமுறைகள் இருக்கின்றன. அந்த வழிமுறைகளை நாம் பின்பற்றும் பொழுது மகாலட்சுமி தாயாரின் அருளானது நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். அப்படி அவர்களின் அருள் கிடைத்துவிட்டால் நமக்கு பணவரவோ, தன வரவோ, தானிய வரவோ எதுவாக இருந்தாலும் அது கிடைத்துவிடும். அப்படிப்பட்ட மகாலட்சுமிக்கு நம்முடைய வீட்டில் மிகவும் பிடித்தமான இடமாக திகழ்வதுதான் சமையலறையும் பூஜை அறையும்.

- Advertisement -

பூஜை அறையை எந்த அளவிற்கு சுத்தமாகவும் தெய்வீக தன்மையுடனும் பார்த்துக் கொள்கிறோமோ, அதே அளவிற்கு சமையலறையையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றுதான் நம்முடைய ஆன்மீகவாதிகள் கூறுகிறார்கள். இந்த அறையில் மகாலட்சுமி தாயாரை மனதார நினைத்துக் கொண்டு சில சூட்சமமான பரிகாரங்களை செய்யும் பொழுது நம்முடைய வீட்டில் பணவரவு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த பரிகாரத்தை என்றைக்கு வேண்டுமானாலும் செய்யலாம். ஒரு கண்ணாடி கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது நிறைய பச்சரிசியின் நிரப்பிக் கொள்ளுங்கள். பிறகு நம்முடைய வீட்டில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்களோ அவர்களின் கைப்பட ஒரு ரூபாய் நாணயத்தை அந்த பச்சரிசியின் மீது வைக்க வேண்டும். அதாவது நான்கு பேர் இருந்தால் அவர்கள் நால்வரும் ஒரு ரூபாய் என்ற வீதம் நான்கு ஒரு ரூபாயை வைக்க வேண்டும்.

- Advertisement -

இப்படி வைத்து விட்டு இந்த கண்ணாடி கிண்ணத்தை சமையலறையில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விடுங்கள். ஆறு மாதத்திற்கு ஒருமுறை இந்த பச்சரிசியை பறவைகளுக்கு உணவாக அளித்து விட்டு புதிதாக மாற்றி வைக்க வேண்டும். அதில் இருக்கக்கூடிய ஒரு ரூபாய் நாணயங்களை எடுத்து செலவு செய்து கொள்ளலாம். இப்படி செய்வதன் மூலம் பணவரவு அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் நம்முடைய வீட்டில் தானியத்திற்கு எந்த வித குறையும் வராது.

இதோடு மட்டுமல்லாமல் நம்முடைய சமையலறையை எந்த அளவிற்கு நாம் சுத்தமாக வைத்துக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு மகாலட்சுமி மற்றும் தனலட்சுமி மற்றும் தானியலட்சுமியின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. தினமும் இரவில் படுக்க செல்வதற்கு முன்பு கிச்சன் நடையையும் அடுப்பையும் துடைத்துவிட்டு படுக்க வேண்டும் என்றும் காலையில் பெண்கள் குளித்து முடித்துவிட்டு அடுப்பை பற்ற வைக்க வேண்டும் என்றும் ஆன்மீக ரீதியாக கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: ஜாதிபத்திரி பணம் வசிய திலகம் தயார் செய்வது எப்படி?

மிகவும் எளிமையான இந்த வழிமுறைகளை நம்பிக்கையோடு செய்து மகாலட்சுமியின் அருளைப் பெற்று பலன் பெறுங்கள்.

- Advertisement -