இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 236 ரன்களை குவித்தது. இதனால் இந்திய அணிக்கு 237 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கினை எதிர்த்து இந்திய அணி ஆடியது.
இந்திய வீரர்கள் ரோஹித், தவான், கோலி மற்றும் ராயுடு ஆகியவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க தடுமாறிய இந்திய அணியை தோனி மற்றும் கேதார் ஜாதவ் ஜோடி சிறப்பாக ஆடி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 141 ரன்கள் சேர்த்து போட்டியினை வெற்றிகரமாக முடித்து கொடுத்தனர். 87 பந்துகளில் 81 ரன்கள் குவித்த ஜாதவ் ஆட்டநாயகன் விருதினை பெற்றார். தோனி சிறப்பாக ஆடி 59 ரன்களை குவித்தார்.
இந்த போட்டியில் ரோஹித் சர்மா வேகப்பந்து வீச்சாளர் வீசிய ஒரு பந்தை கீப்பருக்கு பின்னால் திரும்பி அடித்தார். இந்த ஷாட்டை எதிர்முனையில் இருந்து பார்த்த கோலி ரோஹித்தை பார்த்து சிரித்தவாறு அவரிடம் சென்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ :
இந்த போட்டியில் தோனி மற்றும் ஜாதவ் இருவரும் இணைந்து 5ஆவது விக்கெட்டுக்கு 141 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி மூலம் இந்திய அணி தொடரில் (1-0) என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதையும் படிக்கலாமே :
மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்
English Overview : Rohith hitting unorthadox shot