கேதார் ஜாதவ் : பவுலர்கள் மனநிலையை மட்டுமல்ல. இவர்களையும் தோனி எளிதாக புரிந்து கொள்வார் – ஆட்டநாயகன் பேட்டி

Jadhav

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 236 ரன்களை குவித்தது. இதனால் இந்திய அணிக்கு 237 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கினை எதிர்த்து இந்திய அணி ஆடியது.

Toss

இந்திய வீரர்கள் ரோஹித், தவான், கோலி மற்றும் ராயுடு ஆகியவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க தடுமாறிய இந்திய அணியை தோனி மற்றும் கேதார் ஜாதவ் ஜோடி சிறப்பாக ஆடி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 141 ரன்கள் சேர்த்து போட்டியினை வெற்றிகரமாக முடித்து கொடுத்தனர். 87 பந்துகளில் 81 ரன்கள் குவித்த ஜாதவ் ஆட்டநாயகன் விருதினை பெற்றார். தோனி சிறப்பாக ஆடி 59 ரன்களை குவித்தார்.

போட்டிக்கு பிறகு பேசிய ஜாதவ் : இந்த போட்டியில் அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடினர். மேலும், எனது பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. தோனி போன்று வீரர் எதிர் முனையில் இருக்கும்போது விளையாடுவது மிக எளிது. மேலும், பவுலர்கள் மனநிலை மட்டுமல்ல என்னை போன்ற பேட்ஸ்மேன்களை புரிந்து அவர்களின் பதட்டத்தை போக்க அறிவுரைகளையும் அவர் வழங்குவார். மேலும், தோனி மற்றும் கோலி ஆகியவர்கள் உலகின் சிறந்த பினிஷர்கள் என்று நான் கூறுவேன்.

dhoni-jadhav

தோனி மற்றும் ஜாதவ் இருவரும் இணைந்து 5ஆவது விக்கெட்டுக்கு 141 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி மூலம் இந்திய அணி தொடரில் (1-0) என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

எம்.எஸ். தோனி : போட்டியின் இடையே பேட்டை மாற்றிய தோனி – வைரல் வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

English Overview : Kedar Jadhav praising dhoni