
உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களின் உணவு பழக்கத்தில் கண்டிப்பான முறையில் ஏதாவது ஒரு பழவகையை அன்றாடம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது அனைவரும் அறிந்த உண்மையே. பழங்களில் பல சத்துக்களை உள்ளடக்கி இருக்கிறது என்பது அனைவரும் அறிந்தாலும் இன்றைய காலகட்டத்தில் பழங்களுக்காக தனியாக நேரத்தை ஒதுக்கி சாப்பிடுவது கிடையாது என்று தான் கூற வேண்டும். அப்படி சாப்பிட இயலாதவர்கள் சாப்பிடும் வகையில் மிகவும் எளிமையான முறையில் கொய்யாப்பழத்தை வைத்து சட்னி எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
கொய்யா காய் அல்லது பழம் இதில் பல அற்புதமான சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாக திகழ்கிறது. இதில் விட்டமின்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன. இதில் இருக்கக்கூடிய நார்ச்சத்தின் காரணமாக செரிமான பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு ஒரு சிறந்த நிவாரணமாக திகழ்கிறது. மலச்சிக்கல், மூலம் போன்ற பிரச்சனைகளில் சிக்கித் தவிப்பவர்கள் தினமும் ஒரு கொய்யாப்பழத்தை சாப்பிட்டு வர அவர்களின் பிரச்சனை தீரும்.
சட்னியோ துவையலோ இனிப்பு சுவையுடன் இருக்க வேண்டும் என்று நினைத்தால் கொய்யா பழத்தை உபயோகப்படுத்த வேண்டும். இனிப்பு சுவை தேவை இல்லை என்று நினைப்பவர்கள் கொய்யா காயை உபயோகப்படுத்த வேண்டும். முதலில் கொய்யாக்காயை இரண்டாக நறுக்கி அதற்குள் இருக்கக்கூடிய விதைகளை மட்டும் தனியாக எடுத்து வைத்துக்கொண்டு மீதம் இருக்கும் காயை நறுக்கிக் கொள்ள வேண்டும்.
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றி அந்த எண்ணெய் சூடானதும் அதில் பச்சை மிளகாய், பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கொய்யா காயை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை நன்றாக வதக்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு இதை ஒரு தட்டில் மாற்றி ஆற வைத்து விட வேண்டும். இது ஆரிய பிறகு மிக்ஸி ஜாரில் இவை இரண்டையும் போட்டு இதனுடன் கொத்தமல்லித்தழை மற்றும் ஊறவைத்த புளி, தேவையான அளவு உப்பு, இவற்றையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த இந்த விழுதை ஒரு சிறிய கிண்ணத்தில் வைத்து விட்டு ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, உளுந்து, வெந்தயம், காய்ந்த மிளகாய் இவற்றைப் போற்று நன்றாக வறுக்க வேண்டும். உளுந்து நன்றாக சிவந்த பிறகு அதில் பெருங்காயத்தூளை போட்டு அடுப்பை அணைத்துவிட்டு தாளித்த இந்த பொருட்களை அரைத்து வைத்திருக்கும் துவையலில் சேர்த்து விட வேண்டும். சட்னிக்கு தேவையான அளவு தண்ணீரை இதில் கலந்து கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே: வெற்றிலை துவையல் செய்முறை
பல அற்புத சத்துக்கள் கொண்ட கொய்யாக்காயை சாப்பிட விரும்பாதவர்களுக்கு இந்த முறையில் சட்னியாகவோ துவையலாகவோ செய்து தரும் பொழுது அவர்கள் கொய்யாக்காய் என்பதே உணராமல் விரும்பி சாப்பிடுவார்கள்.