
சனி பகவான் என்று சொன்னாலே நம்முடைய எல்லோர் மனதிலும் ஒரு இனம் புரியாத பயம். ஏழரை சனி நடந்தால் பிரச்சனை. பாத சனி நடந்தால் பிரச்சனை. இப்படி ஜாதக கட்டத்தில் ஏதேனும் சனி பகவானின் தாக்கம் உங்களுக்கு இருந்தால், நீங்கள் செய்ய வேண்டிய எளிமையான ஒரு வழிபாட்டை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
தினமும் இந்த பாடலை படித்து அந்த ஈசனை வணங்கினாலே போதும். உங்களுடைய வாழ்வில் வரும் கஷ்டங்கள் எல்லாம் காணாமல் தொலைந்து போகும். சனிபகவானை பார்த்து யார் பயப்பட வேண்டும் தெரியுமா. நேர்மை இல்லாதவர்கள், பொய் சொல்பவர்கள், அடுத்தவர்களுக்கு தீங்கு நினைப்பவர்கள்.
நல்ல நேரம் நடக்கும் போது, நாம் செய்யும் தவறுக்கான தண்டனை நமக்கு கிடைக்காது. ஏழரை சனி காலத்தில் தான் கர்மா சரியாக வேலை செய்யும். நல்லது செய்தவர்களுக்கு, ஏழரை சனி காலத்தில் சனி பகவானால் பெரிசாக பிரச்சனை வராது. கெட்ட விஷயங்களை செய்து கெட்ட கர்மாக்களை சம்பாதித்து வைத்திருப்பவர்களுக்கு சனி பகவான் நிச்சயம், நீங்கள் செய்த கெடுதல்களை உங்களுக்கு திருப்பி கொடுத்துவிடுவார். ஆக எப்போதும் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள்.
அடுத்தவர்களுக்கு தீங்கு நினைக்காதீர்கள். தற்போது நடந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் சனி பகவானால் சில பல பிரச்சனைகள் வரும். 2025 ஆம் ஆண்டு சனிப்பெயர்ச்சி நடந்து முடிந்த பிறகு மீன ராசிக்காரர்கள், சிம்ம ராசிக்காரர்கள் எல்லாம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இப்படி குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சனிபகவானால் சில பல பிரச்சனைகள் வரும் என்பது ஜோதிடர்களின் கணிப்பு.
நீங்கள் எந்த ராசிக்காரர்கள் ஆக இருந்தாலும் சரி, எந்த நட்சத்திரக்காரர்களாக இருந்தாலும் சரி, தினமும் சனி பகவானை நினைத்து இந்த பாடலை படித்தாலே போதும் சனிபகவானால் வரும் துன்பங்கள் விலகும்.
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
யாரெல்லாம் தினம் தினம் இந்த பதிகத்தை படைத்து அந்த ஈசனை வழிபாடு செய்கிறீர்களோ, அவர்களுக்கு சனிபகவானால் மட்டும் அல்ல, நவகிரகங்களின் மூலமாக கூட பெரிய அளவில் எந்த ஒரு பாதிப்பும் வராது. அப்படியே பிரச்சனைகள் வந்தாலும் அதிலிருந்து உங்களை விடுவிக்க அந்த எம்பெருமான் ஏதாவது ஒரு ரூபத்தில் வருவான் என்பது நம்பிக்கை.
இதையும் படிக்கலாமே: கடன் பிரச்சனை தீர்க்கும் மகாலட்சுமி தீபம்
இன்று வாழ்க்கையில் கஷ்டப்படக் கூடிய நிறைய மக்கள் இந்த கோளறு பதிகத்தை படித்து பிரச்சனையிலிருந்து வெளிவந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நம்பிக்கை இருந்தால் நீங்களும் இந்த பாடலை தினமும் படியுங்கள். நல்லதே நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.