- Advertisement -
சமையல் குறிப்புகள்

மீதமான சப்பாத்தியில் ரொம்ப ரொம்ப ஈஸியா 10 நிமிடத்தில் கொத்து சப்பாத்தி செய்வது எப்படி. கொத்து பரோட்டாவை விட இது ருசியா இருக்குங்க.

- Advertisement -

மீதமான சப்பாத்தியை வைத்தும் இந்த கொத்து சப்பாத்தி செய்யலாம். அல்லது அப்போதே சுட்ட சப்பாத்தியை ருசியாக மாற்ற வேண்டும் என்றாலும் இந்த கொத்து சப்பாத்தியை செய்யலாம். தவறு கிடையாது. சில பேருக்கு மசாலா பொருட்கள் சேர்த்து சப்பாத்தியை ருசியாக வாசமாக சாப்பிடும் போது ரொம்ப ரொம்ப விருப்பமாக சாப்பிடுவார்கள் அல்லவா. லஞ்ச் பாக்ஸில் கொஞ்சம் சுவையாக இரண்டு முட்டை சேர்த்து இப்படி சப்பாத்தி செய்து கொடுத்து பாருங்களேன். திரும்பி வரும்போது லஞ்ச் பாக்ஸ் காலியாக தான் வரும். அவ்வளவு ருசி தரக்கூடிய கொத்து சப்பாத்தி ரெசிபி இதோ உங்களுக்காக.

மீடியம் சைஸில் இருக்கும் 4 சப்பாத்திகளை எடுத்து பொடியாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும். அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும், கடுகு – 1 ஸ்பூன், பட்டை – 1 சின்ன துண்டு, கிராம்பு – 1, ஏலக்காய் – 1, போட்டு தாளிக்க வேண்டும். கீரிய பச்சை மிளகாய் – 2, கருவேப்பிலை – 1 கொத்து, இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன், போட்டு ஒரு நிமிடம் போல வதக்கி விடுங்கள்.

- Advertisement -

அதன் பின்பு மிகப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 2 சேர்த்து, வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறம் வந்தவுடன் மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன், சீரகத்தூள் – 1/2 ஸ்பூன், தேவையான அளவு – உப்பு தூளை தூவி, அடுப்பை மிதமான தீயில் வைத்து விடுங்கள். ஏற்கனவே சப்பாத்தியில் உப்பு இருக்கும். மசாலாவுக்கு மட்டும் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்து மிகப் பொடியாக நறுக்கிய தக்காளி பழம் – 2 சேர்த்து, நன்றாக வதக்க வேண்டும். மசாலா பொருட்கள் சேர்ந்திருப்பதால் இது மிகவும் ட்ரை யாக அடி பிடிக்கும். ஆகவே 2 டேபிள் ஸ்பூன் தண்ணீரை தெளித்து, தக்காளி பழத்தை நன்றாக வதக்கி விடுங்கள். இப்போது அதே கடாயில் இந்த மசாலா பொருட்களை ஒதுக்கிவிட்டு, கடாயில் 3 முட்டையை உடைத்து ஊற்றி, அதன் மேலே கொஞ்சமாக முட்டைக்கு தேவையான அளவு மட்டும் சால்ட், பெப்பர் தூவி, ஒரு நிமிடம் கழித்து கலந்து விட்டால், முட்டை பெரிய பெரிய பீசுகளாக வெந்து நமக்கு கிடைக்கும்.

- Advertisement -

இப்போது வெட்டி வைத்திருக்கும் சப்பாத்திகளை கடாயில் சேர்த்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை சேர்த்து எல்லா மசாலா பொருட்களையும் முட்டையையும் நன்றாக கலந்தால் இரண்டு நிமிடத்தில் சூப்பரான கொத்து சப்பாத்தி தயாராகி இருக்கும்.

குழந்தைகள் சாப்ட் ஆக சாப்பிடுவார்கள் என்றால் இரண்டு நிமிடம் போல கலந்து விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். இது இன்னும் கொஞ்சம் டிரையாகி மொறு மொறுப்பாக கிடைக்க வேண்டும் என்றால் ஐந்து நிமிடம் வரை அடுப்பை மிதமான தீயில் வைத்து, கைவிடாமல் வதக்கினால் கொஞ்சம் டிரையாக இந்த கொத்து சப்பாத்தி உங்களுக்கு கிடைக்கும். அட்டகாசமான சுவை நிறைந்த இந்த ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -