- Advertisement -
- Advertisement -

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் எந்தவித குறையும் இல்லாமல் செல்வ செழிப்புடன் நிறைவான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால் அவருக்கு குபேரவசியம் என்பது ஏற்பட வேண்டும். குபேர வசியம் என்றால் குபேரனின் அருள் பரிபூரணமாக கிடைப்பதை தான் குபேர வசியம் என்று சொல்கிறோம். அப்படி குபேர பகவானின் பரிபூரணமான அருளை பெறுவதற்கு பெருமாளுக்கு எந்த பொருளை வாங்கி தர வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பெருமாளுக்கே கடன் கொடுத்தவராக திகழக்கூடியவர்தான் குபேர பகவான். இருப்பினும் குபேர பகவானை முழுமையாக வசியம் செய்ய வேண்டும் என்றால் பெருமாளை நாம் வழிபட வேண்டும். ஏனென்றால் பெருமானின் மார்பில் தான் மகாலட்சுமி தாயார் இருக்கிறார். மகாலட்சுமி தாயார் செல்வ செழிப்பிற்கு அதிபதி என்பதால் பெருமாளை வழிபடும் பொழுது மகாலட்சுமி தாயாரின் அருளும் கிடைக்கும். அதே சமயம் குபேர பகவானின் அருளும் நமக்கு கிடைக்கும். அப்படி இந்த அருளை பெறுவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான தாந்திரீக பரிகாரத்தை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

பொதுவாக பெருமாள் என்றதும் நம் நினைவிற்கு சனிக்கிழமையும், புதன்கிழமையும் தான் வரும். இந்த கிழமையில் பெருமாளை நாம் வழிபாடு செய்வதுண்டு. அதேபோல் பெருமாளுக்கு உரிய தினமாக கருதப்படக் கூடிய ஏகாதிசி அன்றும் நாம் பெருமாளை வழிபாடு செய்வோம். அப்படி நாம் பெருமாளை வழிபாடு செய்யும்பொழுது ஒரு சில சூட்சமமான பரிகாரங்களை செய்தோம் என்றால் நமக்கு குபேர வசியம் உண்டாகும் என்று கூறப்படுகிறது. அது என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

இந்த வழிபாட்டை மாதத்திற்கு ஒரு நாள் மட்டும் செய்தால் போதும். அந்த மாதம் முழுவதும் நமக்கு செல்வ செழிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. அப்படி என்றால் மாதத் தொடக்கத்தில் வரக்கூடிய நாளில் இதை செய்தோம் என்றால் அந்த மாதம் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்போம் அல்லவா? மாதத்தின் முதலில் வரக்கூடிய முதல் சனிக்கிழமை அன்று இந்த வழிபாட்டை நாம் செய்யலாம்.

- Advertisement -

சனிக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். அருகில் இருக்கக்கூடிய பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள். அங்கு இருக்கக்கூடிய பெருமாளுக்கு ஏலக்காய் மாலை வாங்கி சாற்றி வழிபாடு செய்யுங்கள். இது சற்று விலை உயர்ந்த பொருளாகவே இருக்கும் என்றாலும் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் ஒரே ஒரு சனிக்கிழமை மற்றும் இப்படி நாம் ஏலக்காய் மாலை வாங்கி பெருமாளுக்கு சாற்றி வழிபாடு செய்தோம் என்றால் குபேர வசியத்தோடு மகாலட்சுமி தாயாரின் அருளும் நமக்கு கிடைக்கும்.

ஏனென்றால் ஏலக்காயில் மகாலட்சுமி தாயார் வாசம் செய்கிறார் என்று பொருள்படுகிறது. மகாலட்சுமி தாயார் வாசம் செய்யும் அந்த ஏலக்காயில் மாலை கோர்த்து பெருமாளுக்கு தருவதன் மூலம் நமக்கு அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும். இதோடு மட்டுமல்லாமல் நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய பெருமாள் படத்திற்கும் ஏலக்காய் மாலை சாற்றி வழிபட வேண்டும். அப்படி நாம் பெருமாள் படத்திற்கு ஏலக்காய் மாலை சாற்றும் பொழுது தனியாக இருக்கும் பெருமாளை தவிர்த்து விட்டு மகாலட்சுமியோடு சேர்ந்திருக்கக்கூடிய பெருமாளின் படத்திற்கு இந்த வழிபாட்டை செய்தோம் என்றால் இன்னும் அதிக பலன் நமக்கு கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே பணத்தடை நீங்கி நிரந்தர பண வரவு ஏற்பட

சற்று விலை உயர்ந்த பொருளாக இருந்தாலும் கஷ்டப்பட்டாவது இந்த மாலையை வாங்கி கொடுத்து பெருமாளை நாம் வழிப்பட்டோம் என்றால் அந்த கஷ்டத்திற்குரிய பலனை அந்த மாதத்திலேயே அனுபவித்து அதைவிட பல மடங்கு பண வரவை பெறுவதோடு குபேர வசியமும் உண்டாகும். செல்வ செழிப்பும் உயரும்.

- Advertisement -