- Advertisement -

குபேர யோகம் பெற உதவும் ஒரு வரி மந்திரம்

- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்றால் அதற்கு மகாலட்சுமியின் அருளும் குபேர பகவானின் அருளும் வேண்டும். அப்படி அவர்களின் அருளை பெறுவதற்காக பல வழிபாட்டு முறைகளும் பூஜை முறைகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன. அப்படி பின்பற்றப்படும் அந்த வழிபாட்டு முறைகளை நாம் செய்வதற்கு நமக்கு போதுமான அளவு பண வரவு என்பது ஏற்பட வேண்டும். ஆனால் இந்த பதிவில் எந்தவித செலவும் இல்லாமல் ஒரே ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரே ஒரு வரி மந்திரத்தை மட்டும் கூறினால் போதும், நமக்கு குபேர யோகம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அந்த மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

குபேர யோகம் பெற உதவும் ஒரு வரி மந்திரம்

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் சிறப்புடன் வாழ்வதற்கு என்னதான் கடினமாக உழைத்தாலும் குபேரரின் அருள் இருந்தால்தான் அந்த உழைப்பு செல்வமாக மாறும். பணக்கார தெய்வங்களின் வரிசையில் இருக்கக்கூடிய திருப்பதி ஏழுமலையான் கூட தன்னுடைய திருமணத்திற்காக குபேரரிடம் இருந்துதான் கடன் வாங்கினார் என்று புராணங்கள் கூறுகிறது. அவ்வளவு பெருஞ்செல்வத்தை கொண்ட குபேரரின் அருளை நாம் பெற வேண்டும் என்றால் நமக்கு குபேர யோகம் என்பது ஏற்பட வேண்டும். இந்த குபேர யோகத்தை பெறுவதற்கு என்று ஒரு மந்திரம் இருக்கிறது. அந்த மந்திரத்தை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த மந்திரத்தை கூறுவது என்பது மிகவும் எளிது. ஆனால் அதைக் கூறக்கூடிய நேரம் என்பதுதான் சற்று சிரமமான நேரம். எந்த ஒரு நன்மையும் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் அதற்காக நாம் சிறிது கஷ்டப்பட வேண்டும். ஏதாவது ஒன்றை இழந்தால் தான் ஒன்றை பெற முடியும் என்று கூறுவார்கள். அப்படி நாம் செய்யக்கூடிய ஒரு சிறிய தியாகமானது நம்முடைய வாழ்க்கையில் செல்வ செழிப்புடன் குபேர யோகத்துடன் வாழ்வதற்கு நமக்கு உதவி செய்யும்.

இந்த மந்திரத்தை நாம் விடியற்காலையில் 3 மணிக்கு உச்சரிக்க வேண்டும். ஒரு நிமிடத்திற்கு முன்பாகவே அலாரம் வைத்து எழுந்து கொள்ளுங்கள். முகத்தை மட்டும் கழுவிக்கொண்டு கண்களை மூடி முதல் நாள் மட்டும் 108 முறை இந்த மந்திரத்தை கூற வேண்டும். பிறகு திரும்பவும் நீங்கள் படுத்துக் கொள்ளலாம். இப்படி தொடர்ந்து 48 நாட்கள் செய்ய வேண்டும். இரண்டாவது நாளிலிருந்து 27 முறை மட்டும் உச்சரித்தால் போதும்.

- Advertisement -

இந்த மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது சத்தம் வராமல் மனதிற்குள் உச்சரிக்க வேண்டும். இப்படி நீங்கள் தொடர்ச்சியாக 48 நாட்கள் செய்து வந்தால் அந்த நேரத்தில் நாம் செய்யக்கூடிய அந்த மந்திர வழிபாடு என்பது நமக்கு விரைவிலேயே ஆகர்ஷணமாகி நாம் எதிர்பார்த்த குபேர யோகம் என்பது நமக்கு கிடைக்கும். இதன் மூலம் நாம் தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும். வெற்றிகள் கிடைக்கும். செல்வத்திற்கு மேல் செல்வத்தை குவிக்க ஆரம்பிப்போம்.

மந்திரம்

ஓம் ஹ்ரீம் ஓம் குபேராய நமஹ

இதையும் படிக்கலாமே :தம்பதிகள் ஒற்றுமை அதிகரிக்க சொல்ல வேண்டிய மந்திரம்
இந்த மந்திரத்தை மூன்று மணிக்கு கூறினால்தான் இதற்குரிய பலன் நமக்கு முழுமையாக கிடைக்கும் என்பதை நினைவில் நிறுத்தி சரியாக மூன்று மணிக்கு இந்த மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கு கண்டிப்பான முறையில் குபேர யோகம் ஏற்பட்டு செல்வ செழிப்புடன் வாழ்வார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -