
ஒரு குடும்பத்திற்கு கெட்ட நேரம் ஆரம்பித்து விட்டால், கிரகச் சேர்க்கை கெட்டதாக இருந்தால், பிரச்சனைகள் தலை விரித்து ஆட தொடங்கிவிடும். சந்தோஷமாக இருந்த குடும்பத்தில் புயல் வீசும். நன்றாக படித்துக் கொண்டிருந்த நம் பிள்ளைகள் படிப்பில் மந்தமாகும். தவறான பாதைக்கு செல்ல தொடங்கும். தவறான சேர்க்கை வந்துவிடும்.
நினைத்து பார்க்க முடியாத கெட்ட பழக்கங்கள் எல்லாம் கணவருக்கும் பிள்ளைகளுக்கும் வரும். குடும்பத் தலைவியால் இந்த பிரச்சனைகளை சமாளிக்கவே முடியாது. அந்த அளவுக்கு வீட்டில் பூகம்பம் வெடிக்கும். இதற்கெல்லாம் என்ன காரணம். கெட்ட நேரமும், கிரகங்களும் உங்கள் வீட்டை ஆட்டி படைக்க தொடங்கி விட்டது. பிரச்சனையில் இருக்கும் உங்கள் குடும்பத்தை காப்பாற்ற இந்த அம்பாள் வழிபாடு கை கொடுக்கும்.
உங்கள் குடும்பத்தில் யாருக்கு பிரச்சனை இருந்தாலும் சரி, குடும்ப தலைவிக்கே பிரச்சனை இருந்தாலும் சரி, நேராக அம்மன் கோவிலுக்கு சென்று, இந்த வழிபாட்டை செய்ய தொடங்கி விடுங்கள். கையில் ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்துக்கொண்டு அம்மன் கோவிலுக்கு செல்லுங்கள். எலுமிச்சம்பழத்தில் கரும்புள்ளிகள் இருக்கக் கூடாது பார்த்து கொள்ளுங்கள்.
நீங்கள் செல்லும் அம்பாள் கோவிலில் திரிசூலம் இருக்க வேண்டும். அது துர்கை அம்மன் கோவிலாக இருக்கலாம். அல்லது வேறு ஏதாவது அம்பாள் கோவிலாக இருக்கலாம். எந்த கோவிலாக இருந்தாலும் சரி, அந்த கோவிலுக்கு சென்று கையில் எலுமிச்சம் பழத்தை வைத்துக்கொண்டு எங்களுடைய குடும்பத்திற்கு நீ தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு ‘ஓம் ஹ்ரீம் சாமுண்டாயை விச்சே’ என்ற இந்த மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள்.
கையில் எலுமிச்சம் பழத்தை வைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு, அந்த எலுமிச்சம் பழத்தை திருசூலத்தில் நடுப்பகுதியில் குத்திவிட்டு, வீடு திரும்ப வேண்டும். பிரச்சனை சீக்கிரமாக முடிய வேண்டும். என்பதற்காக மூன்று எலுமிச்சம் பழம் எடுத்துட்டு போகாதீங்க. ஒரே ஒரு எலுமிச்சம் பழம் திரிசூலத்தின் நடுவில் இருக்கும் கூர்மையான பகுதியில் அந்த எலுமிச்சம் பழத்தை குத்திவிட்டு வீடு திரும்பவும். இதே போல 48 நாள் தொடர்ந்து குடும்ப தலைவி இந்த பரிகாரத்தை செய்து வந்தால், அந்த அம்பாள் உங்கள் குடும்பத்தை தீராத கஷ்டத்தில் இருந்து மீட்டெடுப்பாள்.
குடும்ப தலைவிகளுக்கு இடையே மாதவிடாய் நாட்கள் வரும் தவிர்க்க முடியாதது. உங்களுடைய வீட்டில் இந்த பரிகாரத்தை உங்கள் கணவரால் செய்ய முடியும் என்றால் அவர் போய் செய்யலாம் அல்லது உங்களுடைய பிள்ளைகள் இதை செய்வார்கள் என்றால் அந்த இடைப்பட்ட மாதவிடாய் நாட்களில் அவர்களை இந்த பரிகாரத்தை குடும்பத்திற்காக செய்ய சொல்லலாம். முடியாது என்றால் வேறு வழி கிடையாது அந்த மாதவிடாய் நாட்களை தவிர்த்து விட்டு நீங்கள் நாட்களை கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே: சொந்த வீடு வாங்க செய்ய வேண்டிய தானம்
தாயே சாமுண்டி எனக்கு பாதுகாப்பை கொடு, என்னை காப்பாற்று என்று சொல்லி கோவிலில் இருந்து உங்க வீட்டுக்கு நீங்க வந்துருங்க. அந்த அம்பாள் நிச்சயம் உங்களுக்கு நல்லது செய்வாங்க. நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சொல்லும் இந்த எளிய வழிபாட்டை பின்பற்றி பலன் பெறவும்.