- Advertisement -
- Advertisement -

ஒவ்வொரு குலத்திற்கும் அதை காக்கும் கடவுள் என்று ஒன்று இருக்கும். வழி வழியாக மாண்ட நம் முன்னோர்கள் அந்த குலத்திற்கு செய்த தியாகத்தை முன்னிறுத்தி குலதெய்வம் உருவாகிறது. அது முதலாக அந்த தெய்வம் அந்த குலத்தை காத்து வருகிறது. வீட்டில் துர் சக்திகள் இருந்தால் அதனால் உள் நுழைய முடியாது.

துஷ்ட சக்திகள் வெளியேறி, குலதெய்வ கட்டு நீங்கி, உங்களுக்கு இருக்கும் தீயவைகள் அகன்று, சுப நிகழ்ச்சிகள் தடையில்லாமல் நடக்கவும், குடும்பத்தில் மகிழ்ச்சியை மீண்டும் நிலைக்கவும் செய்யக் கூடிய எளிய பரிகாரம் என்ன? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் தொடர்ந்து அறிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

குலதெய்வம் என்பது அந்த குடும்பத்திற்கு முதன்மை கடவுளாக இருக்கிறது. நமக்கு ஒன்று என்றால் உடனே ஓடிவரும் தாய் போல, இஷ்ட தெய்வத்தை விட, குல தெய்வமே முன் நின்று ஓடிவரும். வருடா வருடம் தவறாமல் குலதெய்வத்தை எங்கிருந்தாலும் சென்று வணங்கி வர வேண்டும் என்பது நியதி. எத்தனை பேர் தத்தம் குலதெய்வத்தை தவறாமல் வணங்கி வருகிறோம் என்பது தெரியாது. ஆனால் குலதெய்வ அருள் இருந்தால் உங்களுடைய குடும்பம் மென்மேலும் சிறப்பாக வளர்ச்சி அடையும் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.

உங்களுக்கு குலதெய்வ அருள் இல்லை என்று நினைப்பவர்கள், இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். வீட்டில் துர் சக்திகளும், துர் தேவதைகளின் ஆதிக்கமும் அதிகமாக இருந்தால் குலதெய்வத்தால் உங்களுக்கு உதவி செய்ய முடியாமல் போகும். அது கட்டுப்பட்டு இருக்கும். இப்படி கட்டுப்பட்டு இருக்கும் குலதெய்வத்தை கட்டுடைத்து வீட்டிற்குள் வந்து நமக்கு அருள் செய்வதற்கு இந்த பரிகாரம் உதவி செய்யும்.

- Advertisement -

அதற்கு முதலில் ஒரு கண்ணாடி டம்ளரில் சுத்தமான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு பன்னீரை சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுள் ஒரு ஸ்பூன் அளவிற்கு சுத்தமான மஞ்சளை அரைத்து சேர்த்து கலந்து விடுங்கள். ஒரு கொத்து வேப்பிலை, ஒரு மயிலிறகு ஆகியவற்றை அந்த தண்ணீருக்குள் போடுங்கள். இதை வரவேற்பறையில் அனைவரின் கண்படும்படி ஏதாவது ஒரு பாதுகாப்பான இடத்தில் வையுங்கள். குழந்தைகளின் கைகளில் தட்டி விடக் கூடாது, பார்த்துக் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு வெள்ளி அன்றும் இதைத் தவறாது செய்ய வேண்டும். 21 வெள்ளிக்கிழமைகள் இதை செய்தால் எப்பேர்ப்பட்ட குலதெய்வ காட்டும் உடைந்து, நம் வீட்டிற்குள் குலதெய்வம் வந்து நமக்கு அருள் கொடுக்கும். குலதெய்வம் அறியாதவர்களும் இதை செய்யலாம். உங்களுடைய குலதெய்வம் எது என்பதை அதுவே உங்களுக்கு அடையாளப்படுத்தும்.

இதையும் படிக்கலாமே:
பணக்கஷ்டம் தீர்க்கும் அபூர்வ மந்திரம்

வெள்ளிக்கிழமையில் இதை தயார் செய்து வைத்து, அடுத்த வெள்ளிக்கிழமையின் பொழுது அதில் இருக்கும் தண்ணீரை செடிகளுக்கு ஊற்றிவிட்டு, புதிதாக மாற்றிக் கொள்ள வேண்டும். வேப்பிலை கொத்தையும் மாற்ற வேண்டும். இப்படி செய்வதால் ஒரு விதமான பாசிட்டிவ் வைப்ரேஷன் உருவாகும். இதனால் நெகட்டிவ் வைப்ரேஷன் வீட்டில் தங்க முடியாது. தீய விஷயங்கள் அனைத்தும் வீட்டை விட்டு வெளியேறும், குலதெய்வ கட்டும் உடையும் என்பது நம்பிக்கை.

- Advertisement -