- Advertisement -
சமையல் குறிப்புகள்

இப்படி சுவையான தயிர் வடை செய்தால் விரும்பி சாப்பிடாமல் எவரும் இருக்க மாட்டார்கள்

- Advertisement -

பால், தயிர், மோர் இவை அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கின்றன. இவற்றை உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாக இருக்கிறது. இவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் உணவுடன் சேர்த்துக் கொள்வதன் மூலம் நமது உடலில் கால்சியம் சத்து அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது. அவ்வாறு இவற்றை தினமும் தொடர்ந்து சாப்பிட முடியாவிட்டால், இவற்றைப் பயன்படுத்தி சில வகை உணவுகளை சமைத்து, அவற்றை சாப்பிடுவதும் சிறந்த முறையாகும். அப்படி தயிரில் பலவித உணவுகள் செய்யப்படுகின்றன. அதில் ஒன்று தான் தயிர் வடை. தயிர் வடை பலருக்கும் பிடித்தமான ஒரு டிஷ்ஷாக இருக்கிறது. வடையை மொறுமொறுவென்று சாப்பிடுவது ஒருவிதமான ருசியாக இருந்தாலும், அதனை தயிரில் ஊற வைத்து சாப்பிடும் பொழுது அதன் சுவை வேறு விதமாக இருக்கிறது. வாருங்கள் இந்த சுவையான பூந்தி தயிர்வடையை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு – 250 கிராம், காராபூந்தி – 200 கிராம், புளிக்காத தயிர் – 300 கிராம், பச்சை மிளகாய் – 2, கேரட் – 2, எண்ணெய் – 500 மில்லி, கடுகு – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதல் 250 கிராம் உளுத்தம் பருப்பை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் தண்ணீர் சேர்த்து இரண்டு முறை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் மறுபடியும் ஐந்து அல்லது ஆறு டம்ளர் தண்ணீர் ஊற்றி, உளுத்தம்பருப்பை ஒன்றரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

நத்தம் அருகில் இருக்கும் தண்ணீரை வடிகட்டி, மிக்ஸி அல்லது கிரைண்டரில் சேர்த்து வடை மாவு பதத்திற்கு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். உளுத்தம்பருப்பை அறைக்கும் பொழுது அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அரைத்த மாவை ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, 500 மில்லி எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும், ஒரு பால் கவரில் லேசாக எண்ணெய் தடவி கொள்ள வேண்டும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மாவை எடுத்து, பிளாஸ்டிக் கவரில் வைத்து வடை தட்டி, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். இவ்வாறு அரைத்து வைத்துள்ள அனைத்து மாவிலும் வடை சுட்டு எடுக்க வேண்டும்.

பின்னர் தயிரை ஒரு கிண்ணத்தில் சேர்த்து கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பின் மீது வைத்து, இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு இந்த தாளிப்பை தயிரில் சேர்த்து கலந்து விட வேண்டும். பின்னர் பொரித்து வைத்துள்ள அனைத்து வடையையும் தயிரில் சேர்த்து நன்றாக ஊற வைக்கவேண்டும். இறுதியாக கொத்தமல்லி தழை தூவி கலந்து விட வேண்டும்.

- Advertisement -