
அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் எல்லாம் ஐந்து குழந்தைகள் ஆறு குழந்தைகள் என்று வஞ்சனையே இல்லாமல் குழந்தை செல்வத்தை பெறக்கூடிய பாக்கியத்தை பெற்றிருந்தார்கள். இன்று தவமாய் தவமிருந்தாலும் ஒரு குழந்தையை நம்மால் பெற முடியவில்லை. அந்த அளவுக்கு கலி முற்றிவிட்டது. சரி போகட்டும். உங்களுக்கு இப்போது குழந்தை பாக்கியம் தேவையா. இந்த வருடம் வந்திருக்கக்கூடிய இந்த கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டை தவற விடாதீர்கள்.
கிருஷ்ணா நீயே எனக்கு குழந்தையாக வர வேண்டும் என்று சொல்லி பின் சொல்லக்கூடிய முறையில் வழிபாட்டை மேற்கொண்டால் குட்டி கண்ணன் நிச்சயம் அடுத்த வருடம் உங்களுடைய மடியில் வந்து விடுவான். சரி அந்த வழிபாட்டை எப்படி மேற்கொள்வது ஆன்மீகம் சார்ந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
உடல் ஆரோக்கியத்தில் சிறப்பாக இருப்பவர்கள், கிருஷ்ண ஜெயந்தி அன்று எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து இந்த வழிபாட்டை மேற்கொள்வது மிகவும் நல்ல பலனை கொடுக்கும். முடிந்தால் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். முடியாதவர்கள் மனைவி மட்டுமாவது இந்த விரதத்தை மேற்கொள்ளுங்கள். நாளைய தினம் 26-08-2024 அதிகாலை வேலையிலேயே எழுந்து குளித்து முடித்துவிட்டு சுத்தபத்தமாக உங்களுடைய விரோதத்தை தொடங்குங்கள். வெறும் தண்ணீர் மட்டும் குடிக்கலாம். துளசி போட்ட தீர்த்தத்தை நாள் முழுவதும் பார்க்கலாம்.
26/8/2024 மாலை 6:30 மணிக்கு மேல் இந்த கிருஷ்ணர் வழிபாட்டை வீட்டில் செய்யலாம். உங்களால் முடியும் என்றால் நீங்கள் ரொம்ப நாள் குழந்தைக்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள் ரொம்ப வருடம் ஆக உங்களுக்கு குழந்தை இல்லை எங்களுக்கு சரியாக அஷ்டமி திதியும், ரோகினி நட்சத்திரம் சேரக்கூடிய நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் பின் சொல்லக்கூடிய நேரம் செய்வது சிறப்பு.
27/8/2024 காலை 6:00 மணியிலிருந்து 7:20 மணிக்குள் அஷ்டமி திதியும் ரோகினி நட்சத்திரமும் சேர்ந்து இருக்கிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த நேரத்தில் வழிபாட்டை செய்வது ரொம்ப ரொம்ப சிறப்பு. அப்படி என்றால் நீங்கள் 27ஆம் தேதி காலை வழிபாட்டை முடித்துவிட்டு, மாலை 6:00 மணி வரை சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும்.
அழகான குழந்தை கிருஷ்ணன் பொம்மையை பூஜை அறையில் வாங்கி வைத்து அலங்காரம் செய்து கொள்ளுங்கள். கிருஷ்ணருக்கு வெண்ணெய் அவல், பாலால் செய்யப்பட்ட இனிப்பு பலகாரங்கள், நெய்வேத்தியமாக வைத்து, விளக்கு ஏற்றி தீப தூப ஆராதனை காண்பித்து உங்களுடைய பிரார்த்தனையை மனமுருகி கிருஷ்ணரிடம் வைத்து வேண்டுதல் வைக்க வேண்டும். மற்றபடி முறுக்கு சீடை அதிரசம் மற்ற பட்சணங்களும் வைக்கலாம். அது உங்களுடைய வசதியை பொறுத்தது.
வழிபாட்டை நிறைவு செய்து கொண்டு பூஜை அறையில் குட்டி கிருஷ்ணரை வைத்திருக்கிறீர்கள் அல்லவா, அந்த கிருஷ்ணருக்கு வாயில் வெண்ணை தடவி விட்டு, அந்த கிருஷ்ணரை எடுத்து குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் தங்களுடைய மடியில் வைத்துக் கொண்டு அவரை தாலாட்டுங்கள். உங்களுக்கு தெரிந்த கிருஷ்ணர் பாடலை பாடி மெல்லமாக அவரை உங்கள் மடிமீது வைத்து தாலாட்டி, பாராட்டி சீராட்டி அவரே உங்கள் மடியில் குழந்தையாக வந்து விட்டது போல மனநிறைவோடு இந்த வழிபாட்டை செய்யுங்கள்.
ஒரு ஐந்து நிமிடம் இந்த பொம்மை உங்கள் கையிலேயே இருக்கட்டும். பிறகு எடுத்து அதை பூஜை அறையில் வைத்து விடுங்கள். கிருஷ்ணருக்கு நெய்வேத்தியமாக வெண்ணெய் வைத்தீர்கள் அல்லவா அந்த வெண்ணையை குளிர்சாதன பெட்டியில் ஸ்டோர் செய்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். ‘எனக்கு நீயே குழந்தையாக வந்த பிறக்க வேண்டும் கிருஷ்ணா’ என்று சொல்லி இந்த வெண்ணையை சாப்பிட்டு வாருங்கள். நிச்சயம் உங்களுக்கு அந்த கிருஷ்ணன் குழந்தையாக அடுத்த வருடத்திற்குள் வந்து பிறப்பான் எந்த கவலையும் தேவை கிடையாது.
அதேபோல கிருஷ்ணர் மண் பானைக்குள் தன்னுடைய கையை விட்டு வெண்ணெயை அள்ளி எடுப்பது போல ஒரு திருவுருவப் படம் கிடைத்தால், அதை வாங்கி நாளை உங்களுடைய வீட்டில் மாட்டி வையுங்கள். இந்த படத்தை அடிக்கடி பார்த்துக் கொண்டே இருந்தால் சீக்கிரம் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.
இதையும் படிக்கலாமே: கோகுல அஷ்டமி 2024 எப்போது வருகிறது?
இந்த வருட கிருஷ்ண ஜெயந்தியை நீங்கள் கணவன் மனைவி இருவரோடு சேர்ந்து கொண்டாடுவீர்கள். அடுத்த வருட கிருஷ்ண ஜெயந்தி கணவன் மனைவி உங்கள் குழந்தையோடு சேர்ந்து கொண்டாடுவீர்கள். அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது என்ற கருத்தை முன்வைத்து இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.