- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகோகுல அஷ்டமி 2024 எப்போது வருகிறது?

கோகுல அஷ்டமி 2024 எப்போது வருகிறது?

- Advertisement -

இந்த வருட கோகுல அஷ்டமி என்றைக்கு வருகிறது. கிருஷ்ண ஜெயந்தி என்றைக்கு வருகிறது என்ற சந்தேகம் நம்மில் பல பேருக்கு இருக்கிறது. கோகுல அஷ்டமியும், கிருஷ்ண ஜெயந்தியும் வேறு வேறா, என்று சில பேருக்கு சந்தேகம் வரலாம். அஷ்டமி திதி வரக்கூடிய நாளை தான் கோகுலாஷ்டமி என்று சொல்லுவார்கள். ரோகிணி நட்சத்திரம் வரக்கூடிய நாளை கிருஷ்ண ஜெயந்தி என்று சொல்லுவார்கள்.

பொதுவாக அஷ்டமி திதி அன்று வரும், கோகுலாஷ்டமி வழிபாட்டை தான் வீட்டில் மேற்கொள்வது வழக்கம். ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டை கோவில்களில் மேற்கொள்வார்கள். இதுதான் கிருஷ்ண ஜெயந்தி இரண்டு பட்டு வருகிறது என்று நம்முடைய வழக்கில் சொல்லுவோம்.

- Advertisement -

ஆவணி மாதம் அஷ்டமி திதியோடு, சேர்ந்து வரக்கூடிய ரோகிணி நட்சத்திரத்தில் தான் கிருஷ்ணர் அவதரித்தார் என்று நம்முடைய சாஸ்திர குறிப்புகள் சொல்கிறது. ஆனால் வருடா வருடம் இந்த அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் ஒன்றாக வருமா என்று கேட்டால், வராது. தனித்தனியாக தான் வரும். அதுதான் நாம் இரண்டு வழிபாடாக இந்த கிருஷ்ணர் வழிபாட்டை மேற்கொள்ளுவோம்.

இந்த குழப்பத்திற்கு உங்களுக்கு தெளிவு பிறந்ததா. சரி, இந்த வருடம் அஷ்டமி திதி எப்போது இருக்கிறது. ரோகிணி நட்சத்திரம் எப்போது இருக்கிறது. எந்த நாளில் கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி பார்த்து விடுவோம்.

- Advertisement -

கோகுல அஷ்டமி

26/8/2024 காலை 9:13 மணிக்கு தொடங்கும் அஷ்டமி திதி, 27/8/2024 காலை 7:30 மணி வரை இருக்கிறது.

கிருஷ்ண ஜெயந்தி

26/8/2024 இரவு 9:47 மணிக்கு தொடங்கும் ரோகிணி நட்சத்திரம், 27/8/2024 இரவு 8:45 மணி வரை இருக்கிறது.

- Advertisement -

இந்த வருடம் நம்மால் அஷ்டமி திதியும், ரோகினி நட்சத்திரமும் சேர்ந்து வரக்கூடிய நேரத்தில் வழிபாட்டை மேற்கொள்ள முடியுமா? நிச்சயம் முடியும். இந்த நேரத்தில் வழிபாடு செய்வதுதான் மிக சிறப்பான நேரமாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. 27/8/2024 காலை 6:00 மணியிலிருந்து 7:20 மணிக்குள் அஷ்டமி திதியும் ரோகினி நட்சத்திரமும் சேர்ந்து இருக்கிறது. சரியாக இந்த நல்ல நேரத்தில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கிருஷ்ண பரமாத்மாவை வழிபாடு செய்தால், நிச்சயம் அடுத்த வருடத்திற்குள் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்து விடும். இந்த நேரத்தை குறித்து வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

சில வீடுகளில் அஷ்டமி திதி அன்றுதான் வழிபாட்டை மேற்கொள்வார்கள். அப்படியாக இருந்தால் 26 ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 6:30 மணி அளவில் நீங்கள் இந்த கோகுலாஷ்டமி வழிபாட்டை மேற்கொள்ளலாம். (கிருஷ்ணருக்கு மாலை நேர வழிபாடு தான் சிறந்தது என்று சொல்லுவார்கள். அதனால் முடிந்தவரை நீங்கள் 26 ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு மேல் இந்த வழிபாட்டை செய்யலாம்.)

சில வீடுகளில் ரோகினி நட்சத்திரம் வரும் கிருஷ்ண ஜெயந்தி அன்று தான் வழிபாட்டை மேற்கொள்ளக் கூடிய வழக்கத்தை வைத்திருப்பார்கள். உங்கள் குடும்ப வழக்கப்படி ரோகிணி நட்சத்திரம் அன்று கிருஷ்ணரை வழிபாடு செய்வதாக இருந்தால் நீங்கள் அன்றும் வழிபாடு செய்யலாம் அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. அப்படியாக இருந்தால் நீங்கள் 27 ஆம் தேதி உங்களுடைய வழிபாட்டை வைத்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: ஆபரண வசியம் ஏற்பட கிருஷ்ண ஜெயந்தி பரிகாரம்

இது அவரவர் சௌகரியத்தை பொறுத்தது. இந்த வருட கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணரை எந்த நேரத்தில் வழிபாடு செய்கின்றோம் என்பதை விட, எந்த அளவுக்கு நம்பிக்கையோடு வழிபாடு செய்கின்றோம் என்பதில் தான் பலன் நமக்கு கிடைக்கும். அனைவரும் நம்பிக்கையுடன் பரமாத்மாவை வழிபாடு செய்து அருள் ஆசியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரார்த்தனை வைத்து இந்த ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்