- Advertisement -
- Advertisement -

பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இலங்கியாங்கு என்று திருக்குறள் கூறுகிறது. இந்த உலகத்தில் நாம் வாழ வேண்டும் என்றால் பணம் என்பது கண்டிப்பாக தேவை. அப்படிப்பட்ட பணத்தை நாம் சேர்ப்பதற்காக கடினமாக உழைத்தாலும் ஒரு சிலருக்கு பணம் சேர்வதற்குரிய வாய்ப்புகள் ஏற்படாது. அப்படியே வாய்ப்புகள் ஏற்பட்டாலும் ஏதாவது ஒரு தடைகள் ஏற்படும். இப்படி தடைகள் ஏற்பட்ட நிலையில் பணத்தால் பிரச்சனைகள் உண்டாகும். இந்த பிரச்சனைகள் நீங்குவதற்கு ஏற்றக்கூடிய ஒரு மகாலட்சுமி தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பணவரவு என்றதுமே நம் நமக்கு நினைவிற்கு வருவது மகாலட்சுமி தாயார் தான். மகாலட்சுமி தாயாரின் பரிபூரணமான அருளை பெறுவதற்காக சில வழிமுறைகளை நாம் பின்பற்றுவோம். அந்த வழிமுறைகளில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாக திகழ்வதுதான் தீப வழிபாடு. எந்த பூஜையாக இருந்தாலும், வழிபாடாக இருந்தாலும் முதலில் தீபம் ஏற்றி பிறகுதான் நாம் அந்த பூஜை வழிபாட்டை மேற்கொள்வோம்.

- Advertisement -

தீபத்தில் அனைத்து தெய்வங்களும் வீற்றிருப்பார்கள். எந்த தெய்வமாக இருந்தாலும் அந்த தெய்வத்தை வழிபடுவதற்கு முன்பாக அந்த தெய்வத்திற்காக நாம் தீபம் ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றாமல் செய்யக்கூடிய எந்த வழிப்பாடும் பூர்த்தி அடையாது. அப்படிப்பட்ட ஒரு தீப வழிபாட்டை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

மகாலட்சுமி தாயாரின் அருளை பெறுவதற்கும், பண பிரச்சினை தீர்வதற்கும் இந்த ஒரு தீபத்தை நாம் ஏற்றினால் போதும். இந்த தீபத்தை வெள்ளிக்கிழமை அன்று மாலை நேரத்தில் ஏற்ற வேண்டும். மாலையில் ஏற்ற இயலாதவர்கள் வெள்ளிக்கிழமை அன்று பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஏற்றலாம். தொடர்ந்து 16 வெள்ளிக்கிழமைகள் ஏற்றுவது சிறப்பு. அப்படி தொடர்ந்து 16 வெள்ளிக்கிழமைகள் ஏற்ற இயலாதவர்கள் 48 நாட்கள் என்ற கணக்கிலும் இந்த தீபத்தை தினமும் ஏற்றி வழிபடலாம்.

- Advertisement -

இந்த தீபத்தை ஏற்றுவதற்கு நம்மால் இயன்ற ஏதாவது ஒரு விளக்கை தேர்வு செய்து கொள்ள வேண்டும். இந்த விளக்கில் தான் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும் என்று எந்த நிமதனையும் கிடையாது. இந்த தீபத்தை ஏற்றுவதற்கு நமக்கு சுத்தமான பசு நெய் தேவைப்படும். பசு நெய்யை விளக்கில் ஊற்றிவிட்டு பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

தீபம் ஏற்றிய பிறகு அந்த விளக்கில் இரண்டு குங்கும பூவை சேர்க்க வேண்டும். இந்த குங்குமப்பூ சுத்தமான நல்ல குங்கும பூவாக பார்த்து வாங்க வேண்டும். இந்த விளக்கானது தானாக குளிர வேண்டும். தினமும் ஏற்றுவதாக இருக்கும் பட்சத்தில் ஒரு நாள் தீபத்தை ஏற்றிவிட்டு மறுநாள் அந்த விளக்கை சுத்தம் செய்த பிறகு தான் ஏற்ற வேண்டுமே தவிர்த்து முதல் நாள் ஏற்றிய அதே விளக்கில் ஏற்றக்கூடாது.

இதையும் படிக்கலாமே: தீராத நோய் தீர முருகப் பெருமான் வழிபாடு
மிகவும் எளிமையான இந்த லட்சுமி தீப வழிபாட்டை மேற்கொண்டால் நமக்கு பணரீதியான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். பணவரவு ஏற்படும். கடன் கரைந்து போகும்.

- Advertisement -