- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதீராத நோய் தீர முருகப் பெருமான் வழிபாடு

தீராத நோய் தீர முருகப் பெருமான் வழிபாடு

- Advertisement -

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். எவ்வளவு செல்வங்கள் இருந்தாலும் நோய்கள் இருந்தால் அந்த செல்வங்களை அனுபவிக்க முடியாது. இதே நோய்கள் இல்லாத ஆரோக்கியமான வாழ்வை பெற்றிருந்தோம் என்றால் எப்பேர்ப்பட்ட செல்வமாக இருந்தாலும் அந்த செல்வத்தை நம்மால் சம்பாதித்த விட முடியும் என்பது தான் இதற்குரிய பொருள். அதனால் தான் அன்றைய காலத்தில் சித்தர் பெருமக்கள் அனைவரும் தேக ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இருந்தார்கள். அந்த வகையில் மிகவும் முக்கியமான சித்தராக கருதப்படுபவர் தான் போகர் சித்தர்.

போகர் சித்தர் ஒன்பது வகையான விஷயங்களை ஒரு சேர ஒன்றிணைத்து நவ பாஷாணமாக தயார் செய்து அதில் முருகப்பெருமானுக்கு சிலை செய்து வைத்தார். அந்த சிலை தான் பழனி மலை முருகன். இந்த சிலைக்கு அபிஷேகம் செய்து வரக்கூடிய தண்ணீர், பால், தேன் அல்லது பஞ்சாமிர்தம் என்று எதுவாக இருந்தாலும் அதை நாம் சாப்பிடும் பொழுது நம்முடைய உடலில் இருக்கக்கூடிய நோய்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

மேலும் இரவு கோவிலை சாற்றுவதற்கு முன்பு முருகப்பெருமானுக்கு சந்தனத்தை வைத்து விடுவார்களாம். இரவு முழுவதும் முருகப்பெருமானின் சிலையிலிருந்து வேர்வை துளிகள் ஒன்று சேர்ந்து அந்த சந்தனத்தில் சேர்ந்திருக்குமாம். காலையில் நடையை திறந்த பிறகு அந்த சந்தனத்தை பிரசாதமாக பக்தர்களுக்கு தருவார்களாம். அந்த சந்தனம் கிடைக்கப் பெற்றவர்கள் அதை மருந்தாக நினைத்து உண்டுவர உடலில் இருக்கக்கூடிய நோய்கள் நீங்கும் என்றும் கூறப்படுகிறது.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த பழனி முருகன் ஆலயத்தில் நாம் இந்த பிரசாதங்களை சாப்பிடுவதோடு ஒரு எளிமையான பரிகாரத்தை செய்து வர உடலில் இருக்கக்கூடிய நோய்கள் நீங்கும் என்று கணக்கம்பட்டி சித்தர் கூறியிருக்கிறார். கணக்கம்பட்டி சித்தர் கூறிய அந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மிகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

பொதுவாக முருகப்பெருமானை நாம் வழிபட வேண்டும் என்றால் செவ்வாய்க்கிழமை சென்று தான் வழிபட வேண்டும் என்று பலரும் நினைத்திருக்கிறார்கள். செவ்வாய்க்கிழமை மட்டும் நாம் சென்று வழிபடுவது என்பது சாத்தியக்கூராண விஷயம் அல்ல. அதற்கு பதிலாக ஒவ்வொரு நாளும் வரக்கூடிய செவ்வாய் ஹோரையில் முருகப்பெருமானை நாம் வழிபட்டாலும் நம்முடைய நோய்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது.

அப்படி வரக்கூடிய செவ்வாய் ஹோரை நேரத்தில் பழனிமலை முருகனுக்கு ஒரு சூட்சுவமான தீபத்தை ஏற்றி வைத்து வழிபட வேண்டும். இந்த பரிகாரத்திற்கு சிவப்பு நிற துணி வேண்டும். சிவப்பு நிற ஜாக்கெட் துண்டை வாங்கிக் கொள்ளுங்கள். அதை மூன்று துண்டுகளாக சரிசமமாக பிரித்துக் கொள்ளுங்கள். அதில் யார் நோய்வாய் பட்டு இருக்கிறார்களோ அவர்கள் தங்களுடைய கையால் ஒரு கைப்பிடி அளவு நெல் ஒரு துணியிலும், இரண்டாவது துணியில் ஒரு கைப்பிடி அளவு பச்சரிசியும், மூன்றாவது துணியில் ஒரு கைப்பிடி அளவு தயிர் சாதத்தையும் வைத்து மூட்டையாக கட்ட வேண்டும்.

- Advertisement -

இந்த மூட்டைகளை வரிசையாக கோவிலில் வைத்து அந்த மூட்டைகளுக்கு முன்பாக மூன்று அகல் விளக்குகளை வைத்து நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இப்படி தீபம் ஏற்றி முருகப் பெருமானையும் போகர் சித்தரையும் மனதார வழிபாடு செய்து விட்டு முருகனுக்கு அபிஷேகமான ஏதாவது ஒரு பிரசாதத்தை உண்ண வேண்டும். அது அபிஷேக தீர்த்தமாகவும் இருக்கலாம். அபிஷேக பாலாகவும் இருக்கலாம். அபிஷேக பஞ்சாமிர்தம் ஆகவும் இருக்கலாம்.

இப்படி நாம் ஒருமுறை செய்தாலே நல்ல பலன் கிடைக்கும் என்றும் எப்பேர்ப்பட்ட நோயாக இருந்தாலும் அந்த நோயின் தாக்கத்திலிருந்து விடுபடுவோம் என்றும் கணக்கம்பட்டி மூட்டை சித்தர் கூறியிருக்கிறார்.

இதையும் படிக்கலாமே: மருதாணி பண வசிய மை தயார் செய்யும் முறை

சித்தன் வாக்கு சிவன் வாக்கு என்னும் அடிப்படையில் இந்த எளிமையான பரிகாரத்தை இயன்றவர்கள் முழு நம்பிக்கையுடன் செய்து பலன் பெறுங்கள்.

சற்று முன்