
பணத்திற்கும் செல்வ செழிப்பிற்கும் அதிபதியாக திகழக்கூடியவள் மகாலட்சுமி என்று நம் அனைவருக்கும் தெரியும். அதனால் தான் நாம் அனைவரும் மகாலட்சுமி நம் வீட்டிற்கு வரவேண்டும் என்பதற்காக பல விதங்களில் வழிபாட்டு முறைகளை மேற்கொள்கிறோம். அப்படி வழிபாட்டு முறைகளை மேற்கொண்டும் ஒரு சிலரால் பணத்தை சம்பாதிக்க முடியாத சூழ்நிலை என்பது இருக்கும். அதையும் மீறி சம்பாதித்தாலும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் வீண் விரயம் ஆகிக்கொண்டே இருக்கும். செல்வம் உயர்வதற்குரிய வழியே கிடைக்காமல் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் வீட்டில் எந்த முறையில் தீபம் ஏற்றினால் லட்சுமி கடாட்சம் உண்டாகும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஒரு வீட்டில் காலையிலும் மாலையிலும் கண்டிப்பான முறையில் தீபம் ஏற்ற வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். இரண்டு வேளையும் ஏற்ற முடியாதவர்கள் ஒருவேளை மட்டுமாவது ஏற்ற வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள். இன்னும் சிலரோ தங்களுடைய வீட்டில் தினமும் தீபமேற்ற முடியாவிட்டாலும் முக்கியமான நாட்கள் ஆன செவ்வாய், வெள்ளிக்கிழமையிலாவது தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள். முடிந்த அளவிற்கு தினமும் இரண்டு வேளையும் தீபம் ஏற்றுவதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் இந்த தீபத்தின் சுடரொளியால் தான் நம் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கும் என்றும் அதே நேரத்தில் நேர்மறை ஆற்றல் என்பது அதிகரிப்பதோடு அந்த தீபச்சுடரில் தான் அனைத்து தெய்வங்களும் வீற்றிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
ஜோதி வடிவாக தான் அனைத்து விதமான தெய்வங்களும் திகழ்கிறார்கள் என்பது புராணங்களில் கூறப்பட்டிருக்கக் கூடிய உண்மை என்பதால் அந்த ஜோதி வடிவத்தை நம்முடைய வீட்டில் நாம் ஏற்றும் பொழுது அனைத்து விதமான தெய்வங்களின் அருளும் நமக்கு கிடைக்கும். சரி மகாலட்சுமி தாயாரின் கடாட்சத்தை பெறுவதற்கு எப்படி தீபம் ஏற்ற வேண்டும் என்பதை பற்றி இப்பொழுது பார்ப்போம்.
பொதுவாக தீபம் ஏற்ற வேண்டும் என்றாலே நமக்கு பல கேள்விகள் வரும். எந்த விளக்கில் தீபம் ஏற்ற வேண்டும், எந்த எண்ணெய் ஊற்றி ஏற்ற வேண்டும், எந்த திரியை போட்டு ஏற்ற வேண்டும், எப்பொழுது ஏற்ற வேண்டும், எவ்வளவு நேரம் அது எறிய வேண்டும், எத்தனை எண்ணிக்கையில் ஏற்ற வேண்டும் என்று பல கேள்விகள் நம் மனதிற்குள் எழும். ஒரே ஒரு விளக்கை ஏற்றினாலும் முழு மனதோடு ஏற்றி வழிபாடு செய்தோம் என்றால் அந்த வழிபாட்டிற்குரிய பலன் என்பது கண்டிப்பான முறையில் நமக்கு கிடைக்கும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாம் ஏற்றக்கூடிய தீபத்திற்கு நாம் பயன்படுத்தக்கூடிய எண்ணெய் என்பது தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் இவை இரண்டும் கலந்ததாக இருக்க வேண்டும். இரண்டு லிட்டர் தேங்காய் எண்ணையை வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு லிட்டர் நெய்யை வாங்கி இரண்டையும் நன்றாக கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெயில் நீங்கள் தீபம் ஏற்ற வேண்டும். இதற்கு நீங்கள் உபயோகப்படுத்தக்கூடிய திரியானது தாமரைத் தண்டு திரியாக இருக்க வேண்டும்.
இந்த தீபத்தை தினமும் ஏற்றினால் மிகவும் சிறப்பு. இயலாதவர்கள் செவ்வாய், வெள்ளி, சனி போன்ற கிழமைகளில் மகாலட்சுமி தாயாருக்கு முன்பாகவோ பெருமாளுக்கு முன்பாகவோ வடக்கு பார்த்தவாறு இந்த தீபத்தை ஏற்றி வைத்தாலே வீட்டில் மகாலட்சுமி தாயாரின் கடாட்சம் என்பது உண்டாகும் என்று கூறப்படுகிறது.
மேலும் வீட்டில் தீய சக்திகளின் பாதிப்பு இருக்கிறது என்று நினைப்பவர்கள் இரவு 11:30 மணிக்கு மேல் ஒரு அகல் விளக்கில் வேப்ப எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபமானது இரவு முழுவதும் எரிய வேண்டும். இதை தொடர்ச்சியாக செய்யக்கூடாது. மாதத்தில் ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ மட்டும் செய்தால் போதும்.
இதையும் படிக்கலாமே:ராஜயோகம் ஏற்பட மார்கழி முதல் நாள் ஏற்ற வேண்டிய தீபம்
தீபம் ஏற்றுவதில் பல சூட்சுமங்கள் இருக்கிறது. அந்த சூட்சமங்களில் நம்முடைய தேவைக்கு ஏற்றார் போல் நாம் அதை பயன்படுத்திக் கொண்டோம் என்றால் கண்டிப்பான முறையில் நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் என்பது உண்டாக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.