- Advertisement -
பயனுள்ள தகவல்கள்

விடுப்பு விண்ணப்பம் கடிதம் | Leave letter in Tamil

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் சமயத்தில் விடுப்பு எடுக்க ஆசிரியர்களுக்கு விடுப்பு கடிதம் எழுதிய அனுபவம் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும். தற்காலத்தில் நன்கு கல்வி பயின்ற நபர்களே தங்களுக்கான விடுப்பு கடிதத்தை எழுத தெரியாமல் திணறுவதை நாம் பார்க்கிறோம். பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் பணிபுரிகின்ற நபர்கள் மட்டுமே விடுப்பு கடிதம் எழுதும் சூழலில் இருக்கின்றனர். அந்த வகையில் பள்ளி மாணவர்களும், அலுவலகங்களில் பணிபுரியும் நபர்களும் தங்களுக்கான விடுப்பு கடிதத்தை எவ்வாறு எழுத வேண்டும் என்பது குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

விடுப்பு விண்ணப்பம் எழுதும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை – Leave letter format for school in Tamil

விடுப்பு கடிதத்தை எழுதும்பொழுது எந்த காரணத்திற்காக விடுப்பு எடுக்கப்படுகின்றது என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும். எத்தனை நாட்கள் வரை விடுப்பு எடுக்கப் போகிறீர்கள் என்பதையும் தெளிவாக குறிப்பிட வேண்டும். பள்ளி ஆசிரியருக்கோ அல்லது பள்ளியின் தலைமை ஆசிரியருக்கோ நீங்கள் எழுதும் விடுப்பு விண்ணப்ப கடிதம் அவர்களுக்கு மரியாதை அளிக்க கூடிய விதமாகவும், அதே நேரம் உங்களின் பணிவை வெளிப்படுத்தும் விதமாகவும் இருக்க வேண்டும்.

- Advertisement -

அவசியமான விடயங்களை தவிர்த்து வேறு தேவையில்லாத விடயங்கள் குறித்து விடுப்புக் கடிதத்தில் எழுதக்கூடாது. உங்கள் கடிதத்தின் மையக்கருத்து மிக நேரடியாகவும், தெளிவாகவும் எழுதப்பட வேண்டும். நீங்கள் உங்கள் விடுப்பு கடிதத்தை அனுப்பவிருக்கின்ற நபரின் முகவரியை முதலில் எழுத வேண்டும்.

விடுப்பு கடிதத்தை எழுதி முடித்ததும் ஒரு முறைக்கு இரண்டு முறை அந்த கடிதத்தில் இலக்கண பிழைகள் மற்றும் இன்ன பிற குறைகள் இருக்கின்றனவா என்பதை சரி பார்க்க வேண்டும். அப்படி பிழைகள், குறைபாடுகள் இருப்பின் அவற்றை திருத்திக் கொள்ள வேண்டும். மருத்துவ காரணங்களுக்காக விடுப்பு எடுக்கும் பட்சத்தில் மருத்துவ சான்றுகளின் அசல் அல்லது நகல் ஆவணங்களை விடுப்பு கடிதத்துடன் இணைக்க வேண்டும். விடுப்பு விண்ணப்பம் ஐந்தாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு, ஒன்றாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு என அனைத்து வகுப்பை சார்ந்த மாணர்வர்களும் எழுத கற்றுக்கொள்வது நல்லது. விடுப்பு விண்ணப்பம் மாதிரி கீழே உள்ளது.

- Advertisement -

பள்ளி ஆசிரியர்/ தலைமையாசிரியருக்கு விடுப்பு விண்ணப்பம் கடிதம் எழுதுவது எப்படி? – School Leave Letter Format in Tamil

விடுநர்
—————–(பெயர்),
வகுப்பு,
பள்ளியின் முகவரி

பெறுநர்
உயர்திரு. ஆசிரியர் / தலைமையாசிரியர்,
பள்ளியின் பெயர்,
பள்ளியின் முகவரி,

- Advertisement -

பொருள்: விடுப்பு வேண்டி விண்ணப்பம்

மதிப்பிற்குரிய ஐயா / அம்மா,

வணக்கம், உங்கள் வகுப்பில் பயிலும் ——- ஆகிய நான் வைரஸ் ஜுரம் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால், என்னால் பள்ளிக்கு வர முடியவில்லை. நான் உடல்நலம் தேர தயை கூர்ந்து எனக்கு / / 2022 முதல் / / 2022 வரை —— நாட்களுக்கு விடுமுறை அளிக்குமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த கடிதத்துடன் எனது மருத்துவ சான்றையும் இணைத்துள்ளேன். நன்றி.

இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
பெயர் …………….
தேதி:…………
இடம்: ………..

பணியிட நிர்வாக அதிகாரி/ நிறுவனருக்கு எழுதப்படும் விடுப்பு கடிதம் – Leave Letter in Tamil
நீங்கள் வேலை செய்கின்ற தொழில், பணியிடங்களில் விடுப்பு வேண்டி உங்கள் நிர்வாக அதிகாரிக்கு விடுப்பு கடிதம் அனுப்பும் பொழுது கீழ் கண்ட விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

உங்களின் தொழில், பணியிட நிர்வாக அதிகாரிக்கு விடுப்பு கேட்டு நீங்கள் எழுதும் கடிதத்தில் நீங்கள் விடுப்பில் இருக்கின்ற பொழுது உங்கள் அலுவலகத்தில் இருப்பவர்கள் பணி தொடர்பான விடயங்களுக்காக உங்களை எப்படி தொடர்பு கொள்வது என்பதை நீங்கள் தெளிவாக குறிப்பிட வேண்டும்.

நீங்கள் விடுப்பில் இருக்கின்ற நாட்களில் பணி தொடர்பான விடயங்கள் குறித்து உங்கள் அலுவலகத்திலிருந்து தொடர்பு கொள்ள கூடாது என நீங்கள் விரும்பும் பட்சத்தில், அது குறித்து தெளிவாக உங்கள் விடுப்பு கடிதத்தில் குறிப்பிட வேண்டும்.

பணியிட நிர்வாக அதிகாரி / நிறுவன தலைவருக்கு எழுதப்படும் கடித மாதிரி – Leave Letter format in Tamil

விடுநர்
—————–(பெயர்)
தொழில் நிறுவனத்தின் பெயர்,
தொழில் நிறுவனத்தின் முகவரி

பெறுநர்
உயர்திரு. நிர்வாக அலுவலர்,
தொழில் நிறுவனத்தின் பெயர்,
தொழில் நிறுவனத்தின் முகவரி

பொருள்: விடுப்பு வேண்டி விண்ணப்பம்

மதிப்பிற்குரிய ஐயா/ அம்மா,

வணக்கம், நான் எனது தனிப்பட்ட காரணங்களுக்குக்காக எனது சொந்த ஊருக்கு செல்வதால், தயை கூர்ந்து எனக்கு / / 2022 முதல் / / 2022 வரை —— நாட்களுக்கு விடுப்பு அளிக்குமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நான் விடுப்பில் இருக்கின்ற பொழுது, அலுவலக விடயங்கள் தொடர்பாக என்னை தொடர்பு கொள்ள வேண்டாம் எனவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். விடுப்பு தினங்கள் முடிவடையும் மறுதினமே நான் பணிக்கு திரும்பி, செம்மையாக பணியாற்றுவேன் என உங்களுக்கு உறுதியளிக்கின்றேன். நன்றி.

இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள,
பெயர் ………..
தேதி:…………
இடம்: ………..

- Advertisement -