
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் தீர்க்கவே முடியாத பிரச்சினை என்று ஒரு பிரச்சனை கண்டிப்பாக இருக்கும். அந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக பல முயற்சிகளை எடுத்தாலும் ஏதாவது ஒரு ரூபத்தில் அந்த பிரச்சனை நம்மை பின்தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். அப்படி தீர்க்கவே முடியாத பிரச்சனை என்று நினைத்து தலைவிதியே என்று வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் ஆஞ்சநேயரை எந்த முறையில் தீபம் ஏற்றி வழிபட்டால் அவர்களின் பிரச்சனைகள் தீரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
அஞ்சனை மைந்தனாக திகழக் கூடிய ஆஞ்சநேயர். எந்த அளவிற்கு வீரத்திற்கும் தைரியத்திற்கும் புகழ்பெற்றவரோ அதே அளவிற்கு கருணை மனம் கொண்டவராகவும் திகழ்கிறார். அஞ்சாத நெஞ்சனாக இருக்கக் கூடிய ஆஞ்சநேயரை நாம் சரணாகதி அடைந்து விட்டோம் என்றால் நம்முடைய வாழ்க்கையில் வரக்கூடிய எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் அந்த பிரச்சனையை அசால்டாக சரி செய்து விடக் கூடிய தெய்வமாக தான் ஆஞ்சநேயர் திகழ்கிறார்.
அப்படிப்பட்ட ஆஞ்சநேயரை பல வேண்டுதலுக்காக பல விதங்களில் நாம் வழிபாடு செய்வோம். நம்முடைய பிரச்சினை தீர எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்று பார்ப்போம். இந்த வழிபாட்டை ஆஞ்சநேயருக்கு உகந்த கிழமையான வியாழக்கிழமை அல்லது சனிக்கிழமை போன்ற கிழமையில் ஆரம்பிக்க வேண்டும். மூல நட்சத்திரம் வரும் நாளிலும் இந்த வழிபாட்டை நாம் ஆரம்பிக்கலாம்.
இந்த வழிபாட்டை அருகில் இருக்கக்கூடிய ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு சென்று மேற்கொள்வது சிறப்பு. அருகில் ஆஞ்சநேயர் ஆலயம் இல்லை என்று கருதுபவர்கள் வீட்டிலேயே ஆஞ்சநேயரின் படத்திற்கு முன்பாக இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
அருகில் இருக்கக்கூடிய ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அப்பொழுது புதிதாக ஒரு அகல் விளக்கை வாங்கிக் கொள்ளுங்கள். இந்த அகல் விளக்கில் கடுகு எண்ணெயை ஊற்றி பஞ்சுத்திரி போட்டு அந்த எண்ணெயில் ஒரு கிராம்பை மட்டும் சேர்த்து ஆஞ்சிநேயருக்கு தீபம் ஏற்றி வைத்து விட்டு அவரிடம் உங்களுடைய பிரச்சனையை மனதார கூறி அந்த பிரச்சனை தீர வேண்டும் என்று வழிபாடு மேற்கொள்ளுங்கள்.
இப்படி தொடர்ந்து 48 நாட்கள் செய்ய வேண்டும். வீட்டில் இந்த வழிபாட்டை செய்வதாக இருந்தால் புதிதாக வாங்கிய அகல் விளக்கில் இதே போல் கடுகு எண்ணெயை ஊற்றி பஞ்சு திரி போட்டு ஒரு கிராம்பையும் போட்டு ஆஞ்சநேயர் படத்திற்கு முன்பாக தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் எண்ணெய் முழுவதும் காலியாகி மலையேறும் வரை விட்டுவிட வேண்டும். நாம் குளிர வைக்கக் கூடாது.
மறுநாள் இதே விளக்கில் இருக்கக் கூடிய கிராம்பு மற்றும் திரியை கால்படாத இடத்தில் போட்டு விட்டு அந்த அகல் விளக்கை ஒரு துணியை வைத்து சுத்தம் செய்து புதிதாக மறுபடியும் எண்ணெய், திரி, கிராம்பு போட்டு தீபம் ஏற்ற வேண்டும். 48 வது நாள் கண்டிப்பான முறையில் ஆஞ்சநேயரின் ஆலயத்திற்கு சென்று அவருக்கு வெண்ணெய் காப்பு சாற்றி வழிபட வேண்டும்.
ஆஞ்சநேயருக்கு பிடித்தமான லட்டுவை நெய்வேத்தியமாக வைத்து அங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக தர வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம்முடைய பிரச்சனைகள் அனைத்தையும் ஆஞ்சநேயர் தீர்த்து வைப்பார்.
இதையும் படிக்கலாமே: பண ரீதியான பிரச்சனைகள் தீர பைரவர் வழிபாடு
மிகவும் சக்தி வாய்ந்த இந்த தீப வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் செய்து தீராத பிரச்சினையில் இருந்து வெளி வருவோம்.