
இன்றைய காலக்கட்டத்தில் ஆண் பெண் இருபாலருக்கும் இருக்கக் கூடிய மிகப்பெரிய பிரச்சினையே இந்த முடி உதிர்வு தான். முடி உதிர்வு என்பது பெண்களை மட்டும் பாதிப்பது கிடையாது. ஆண்களுக்கு கூட முடி உதிர்ந்து அந்த இடத்தில் வழுக்கை தெரிந்தால் பார்க்க அசிங்கமாக தானே இருக்கும். அழகு குறிப்பு பதிவில் ஆண் பெண் இருவரும் பயன்படுத்தக் கூடிய முடி உதிர்வு தொடர்பான ஒரு குறிப்பை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
இந்தப் பதிவில் இருக்கும் குறிப்பை பற்றி ஏற்கனவே பலரும் அறிந்திருக்க கூடும். ஏனென்றால் முடி வளர இயற்கையான வழிமுறைகள் அனைத்துமே நம் முன்னோர்கள் பயன்படுத்தி நாம் மறந்த முறைளை தான் இப்பொழுது கடைப்பிடிக்க தொடங்குகிறோம். அதில் சேர்க்கும் ஒரு சில பொருட்கள் வேண்டுமானால் மாறலாம் ஆனால் வழிமுறை என்னவோ பழமையானது தான்.
முடி உதிர்வை தடுத்து முடி வேகமாக வளர செய்ய வேண்டியது:
முடி வளர தேவையான இந்த தண்ணீரை தயார் செய்ய நமக்கு முதலில் ஒரு கொத்து வேப்ப இலைகள் தேவை. ஒரு வேளை வேப்ப இலை உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் நாட்டு மருந்து கடைகளில் வேப்பம் பொடி கிடைக்கும் அதை வாங்கிக் கொள்ளுங்கள். அடுத்து ஒரு கொத்து கருவேப்பிலையும் எடுத்துக் கொள்ளுங்கள் இத்துடன் ஒரு சிறிய துண்டு இஞ்சியை தோல் சீவி சின்ன சின்னதாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பெரிய டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி சூடு படுத்திக் கொள்ளுங்கள். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த உடன் நாம் எடுத்து வைத்திருக்கும் கருவேப்பிலை, வேப்பிலை, இஞ்சி மூன்றையும் ஒன்றாக சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் பாதியாக சுண்டும் வரை கொதிக்க வைத்து அடுப்பை அணைத்து விடுங்கள்.
இந்த தண்ணீரை வடிகட்டி ஒரு டம்ளரில் ஊற்றி எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த தண்ணீரை கொஞ்சமாக எடுத்து உங்கள் தலைமுடியில் அனைத்து இடத்திலும் படும்படி தேய்த்து விடுங்கள். அரை மணி நேரம் இது அப்படியே இருக்கட்டும் அதன் பிறகு நல்ல ஒரு மைல்டான ஷாம்பை பயன்படுத்தி அல்லது சீயக்காய் பயன்படுத்தி தலையை அலசி விடுங்கள்.
இந்த தண்ணீரை இன்னொரு முறையிலும் பயன்படுத்தலாம். அதாவது நீங்கள் தலைக்கு குளித்து முடித்த பிறகு, கொதிக்க வைத்த இந்த தண்ணீரை கொஞ்சமாக எடுத்து அதை ஒரு மக்கில் கலந்து அந்த தண்ணீரை உங்கள் தலையில் ஊற்றி அலசி விடுங்கள். அதன் பிறகு சாதாரண தண்ணீரை இரண்டு மூன்று முறை ஊற்றி அலசி விடுங்கள். இப்படி செய்யும் போது ஷாம்பூ பயன்படுத்த வேண்டாம்.
இந்த இரண்டு வழிகளில் எப்படி செய்தாலுமே நல்ல பலனை கொடுக்கும். ஏனென்றால் இதில் சேர்த்து இருக்கும் வேப்பிலையானது தலையில் இருக்கும் அழுக்கு, பூச்சி வெட்டு போன்றவற்றை எல்லாம் நீக்கி விடும். இதனால் தலையில் பொடுகு பேன் போன்றவை எல்லாம் அறவே ஒழிந்து விடும். தலை சுத்தமானாலே முடி நன்றாக வளரும். அதே போல் இதில் சேர்த்து இருக்கும் இஞ்சியும் காரத்தன்மை உடையது. அதுவும் நம்முடைய தலையின் வேர்க் கால்களில் பட்டு ஒரு வித உஷ்ணத்தை ஏற்படுத்தி ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் இந்த முறையும் முடியின் வளர்ச்சியை அதிகரிக்க செய்யும்.
இதையும் படிக்கலாமே: தக்காளியும், காபி பொடியும் பியூட்டி பார்லர் தரும் அழகை நமக்கும் தருமா என்ன? ட்ரை பண்ணி பார்க்கலாமே!
இத்துடன் நாம் சேர்த்திருக்கும் கருவேப்பிலைக்கு இயற்கையாகவே முடி வளர்ச்சி அதிகரிக்க கூடிய சக்தி உண்டு. இவற்றுடன் சேர்ந்து அதுவும் இணையும் பொழுது முடி உதிர்வை முற்றிலுமாக தடுத்து, தலையில் உள்ள பேன், ஈறு, பொடுகு போன்றவை எல்லாம் நீங்கி நல்ல கருகருவென்று முடி வளர இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.