தக்காளியும், காபி பொடியும் பியூட்டி பார்லர் தரும் அழகை நமக்கும் தருமா என்ன? ட்ரை பண்ணி பார்க்கலாமே!

face12
- Advertisement -

எல்லோருமே தன்னுடைய அழகை அதிகரித்து காட்ட, மேம்படுத்த அதிக அளவில் செலவு செய்து பியூட்டி பார்லருக்கு சென்று வருவது உண்டு. இப்படிப்பட்டவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருக்கக் கூடிய இந்த இரண்டு பொருள் தக்காளி மற்றும் காபி பொடி ஆகும். இதனை வைத்து நாம் என்ன செய்யப் போகிறோம்? இது எப்படியான பலன்களை கொடுக்கும்? என்கிற அழகு குறிப்பு ரகசியங்களை தான் இந்த பதிவின் மூலம் இனி தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தக்காளி நம்முடைய உடலுக்கு மட்டும் அல்லாமல், சருமத்திற்கும் நல்ல ஒரு சத்துக்களை கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. இதில் ஏராளமான ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் விட்டமின் சி நிறைந்து காணப்படுகிறது. இது நம்முடைய சருமத்தை ஹைட்ரேட் செய்து மிருதுவாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மிகவும் மலிவாக கிடைக்கக்கூடிய இந்த ரெண்டு பொருட்கள் சருமத்திற்கு நல்ல ஒரு க்லோயிங் கொடுக்கக் கூடியதாக இருக்கப் போகிறது.

- Advertisement -

இந்த எளிதான பேக் எல்லா வகையான சருமத்தினரும் பயன்படுத்தக் கூடியதாக இருக்கப் போகிறது. வறண்ட சருமம் கொண்டவர்கள் முதலில் தக்காளியுடன் காபி பவுடரை சேர்த்து பேஸ்ட் போல அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதை முகம் முழுவதும் தடவி காய விட்டு விடுங்கள். பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவி விடுங்கள். பின்னர் ஆலிவ் ஆயில் அப்ளை செய்து முகத்திற்கு மசாஜ் செய்யுங்கள். இதனால் முகம் எப்பொழுதும் மிருது தன்மையுடன் இருக்கும், வறண்டு போகவே செய்யாது. சருமம் வெடிக்கவும் செய்யாது.

எண்ணெய் பசை உள்ள சருமம் கொண்டவர்கள் அதிகம் முகப்பருக்களுக்கு ஆளாகிறார்கள். இவர்கள் இதிலிருந்து தப்பிக்க தக்காளி பழ பேஸ்ட் உடன் காபி பவுடரை சேர்த்து நன்கு கலந்து முகம் முழுவதும் பூசிக் கொள்ள வேண்டும். உலர்ந்து காய்ந்ததும் ஈரத் துணியால் துடைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதனால் முக துவாரங்கள் இறுக்கம் அடைந்து, அழுக்குகள் உள்ளே செல்வது தடுக்கப்படும். எண்ணெய் பசை கட்டுப்பட்டு. முகம் பொலிவோடு இருக்கும். இதனுடன் தேன் மற்றும் வெள்ளரிக்காயும் சேர்த்து நீங்கள் பயன்படுத்தினால் முகம் கண்ணாடி போல ஜொலிக்கும்.

- Advertisement -

மற்ற எல்லா வகையான சருமத்தினரும் பயன்படுத்தக்கூடிய வகையில் இருக்கக்கூடியது இந்த ஃபேஸ் பேக், இதற்கு முதலில் தக்காளி பேஸ்ட் போல அரைத்து ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் அரை ஸ்பூன் காபி பவுடர், அரை ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதை ஃபேஸ் பேக் போட்டு முகத்தை கழுவி வந்தால், அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி முகம் மிருதுவாகும்.

இதையும் படிக்கலாமே:
உங்க உதடு பிங்கி லிப்ஸாக இருக்க 2 ரூபாய் காபி தூள் இருந்தால் போதுமே! உதடு வறண்டு போகாமல் இயற்கையாகவே சிவப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

பழுத்த தக்காளி பழத்தை பாதியாக வெட்டி, அதில் காபி பவுடரை தூவி முகத்திற்கு கிளாக் வைஸ் மற்றும் ஆன்ட்டி கிளாக் வைஸ் 10 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். நெற்றி, கண்ணம், தாடை, மூக்கு போன்ற பகுதிகளில் மென்மையாக இது போல 20 நிமிடம் மசாஜ் செய்து, பின்னர் முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவினால் நம்ம முகமா இது? என்று நாமே ஆச்சரியப்படுவோம்! அந்த அளவிற்கு பளிங்கு போல மாறிவிடும்.

- Advertisement -