- Advertisement -

தூக்கம் வரும் நேரம், அதிர்ஷ்டம் சொல்லும்!

- Advertisement -

தூங்கும் நேரம் ஒரு மனிதனுக்கு மிக முக்கியமான நேரம் ஆகும். ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் ஒருவர், மீண்டும் எழுந்து கொள்ள முடியாமல் போய்விட்டால் அதுவே மரணம் ஆகி விடுகிறது. தூக்கம் என்பது அரை மரணத்திற்கு சமம் தான். உங்களுக்கு எந்த நேரத்தில் தூக்கம் வருகிறதோ, அந்த நேரத்தை பொறுத்து தான் உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதா? இல்லையா? என்பதை கணிக்க முடியும். இதைப் பற்றிய சுவாரசியமான தகவல்களை தான் இந்த ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் இனி நாம் தொடர்ந்து தெரிந்து கொள்ள போகிறோம்.

சாஸ்திரப்படி ஒரு மனிதன் 6 மணி நேரம் ஓய்வு எடுக்க வேண்டும் என்பது நியதி, ஆனால் அறிவியல் ரீதியாக நம் உடல் நிலை ஆரோக்கியம் பொறுத்து எட்டு மணி நேரம் அதிகபட்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் தூங்கவும் கூடாது, அதற்கு குறைவாக முழிக்கவும் கூடாது. இதை சரியாக கடைப்பிடிக்காத மனிதர்கள் துரதிர்ஷ்டசாலிகள்.

- Advertisement -

யார் அதிர்ஷ்டசாலிகள்?

இரவு பத்து மணிக்கு தூங்கி நான்கு மணிக்கு அல்லது ஐந்து மணிக்காவது எழுந்து விட வேண்டும். இப்படித்தான் நீங்கள் வழக்கமாக தூங்கி எழுகிறீர்கள் என்றால் உங்களைவிட ஒரு அதிர்ஷ்டசாலி யாரும் இருக்க முடியாது. ஒன்பது மணிக்கு தூங்கி மூன்று மணிக்கு எல்லாம் எழுந்து கொள்பவர்கள் இன்னும் பேரதிர்ஷ்டசாலிகள ஆவர். மூன்றரை மணியிலிருந்து நான்கரை மணி வரையிலும் தோஷமற்ற பிரம்ம முகூர்த்தம் ஆகும்.

பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்திருக்க வேண்டும் என்றால் சரியான நேரத்தில் முதலில் தூங்கி இருக்க வேண்டும். 9 முதல் 10 மணிக்குள் உங்களுக்கு உறக்கம் வந்துவிடும் என்றால், நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். உங்களால் இந்த பிரபஞ்சத்துடன் பேச முடியும். நீங்கள் மனதில் ஆழமாக ஒரு விஷயத்தை நினைத்தால், அது நடந்தே தீரும் என்று நினைத்தால் கண்டிப்பாக அது நடக்கும் என்பது விதியாகும்.

- Advertisement -

நம்புவதற்கு சற்று கடினமாகத்தான் இருக்கும். வேண்டுமானால் நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். ஒன்பதிலிருந்து 10 மணிக்குள் நீங்கள் தூங்கி விடுவீர்கள் என்றால், உங்களுக்கு உறக்கம் அதுவே வந்து விடும் என்றால் நிச்சயம் உங்களுக்கு பிரபஞ்ச சக்தி இருக்கும். இது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். நீங்கள் நினைத்ததை கண்டிப்பாக நடத்தி கொடுக்கும்.

யார் துரதிஷ்டசாலிகள்?

11 மணிக்குள் உங்களுக்கு உறக்கம் வந்து விடும் என்றால் ஓரளவுக்கு பரவாயில்லை, ஆனால் 12 மணிக்கு மேல் ஆகியும் எனக்கு உறக்கம் வருவதில்லை, நான் தூங்கவும் விரும்பியதில்லை என்பவர்கள் நிச்சயம் துரதிர்ஷ்டசாலிகள் ஆவார்கள். சிலருக்கு எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் 12 மணிக்குள் தூக்கம் என்பது வருவது கிடையாது. இவர்களுக்கு பிரபஞ்ச சக்தி சுத்தமாக இருக்காது.

இதையும் படிக்கலாமே:
பிரிந்தவர்கள் ஒன்று சேர பரிகார விளக்கு

இப்படிப்பட்டவர்கள் நினைத்தது நடக்கவே நடக்காது. இவர்கள் ஒன்று நினைக்க அது ஒன்றுதான் நடக்கும். இது இவர்களுக்கான விதியாகும். ஒரு மணிக்கு தான் தூக்கம் வரும் என்பவர்கள், தங்களுக்குத் தானே சூனியம் வைத்துக் கொள்வதற்கு சமமாகும். இரண்டு மணிக்கு தான் தூக்கம் வரும் என்பவர்கள், தங்களுடைய ஆரோக்கியத்தை அவர்களே கெடுத்து கொள்கிறார்கள் என்று அர்த்தம். அதற்கு மேலும் தூக்கம் வரவில்லை என்றால், பெரிதாக உங்கள் மனசாட்சிக்கு மீறி ஏதோ ஒரு தவறை செய்கிறீர்கள் என்று அர்த்தம். இல்லையேல் பெரிதாக எதையோ இழந்து விட்டு பரிதவிக்கிறீர்கள் என்று அர்த்தம். சரியான நேரத்திற்கு தூக்கத்தை வரவழைக்க பழகிக் கொள்ளுங்கள். அப்போது தான் உங்களுக்கு பிரபஞ்ச சக்தி கிடைக்கும், அந்த பிரபஞ்ச சக்தியின் மூலம் நீங்கள் எதையும் ஜெயிக்கவும் முடியும், முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -